श्री भूस्तुति : 16 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
व्योम - अतिलंघिनी , विभो: ; प्रलय - अंबु , राशौ ;
वेशन्त , लेशे - इव ; मातुम् , अशक्य , मूर्ते: |
सद्य: , समुद्र , वसने ! सरसै: , अकार्षी: !
आनन्द , सागरम् - अपारम् - अपांग , पातै: ॥
வ்யோம - அதிலங்கிநி , விபோ: ; ப்ரளய - அம்பு , ராஶௌ ;
வேஶந்த , லேஶே - இவ ; மாதும் , அசக்ய , மூர்த்தே: |
ஸத்ய: , ஸமுத்ர , வஸநே ! ஸரஸை: , அகார்ஷீ: !
ஆநந்த , ஸாகரம் - அபாரம் - அபாங்க , பாதை: ||
समुद्र .......... கடலை,
वसने .......... ஆடையாகக் கொண்ட, பூமி தேவியே !
व्योम .......... ஆகாயத்தையும் ,
अतिलंघिनी ... கடந்து செல்லும் ;
प्रलय .......... பிரளய காலக்
अंबु राशौ ...... கடலில் ;
वेशन्त लेशे .... சிறு குட்டையில் ,
मातुम् .......... அடக்க (மூழ்க) ,
अशक्य ........ முடியாதது ,
इव ............. போன்ற ;
मूर्ते: ............ பெரிய , வடிவத்தை உடைய ;
विभो: .......... எம்பெருமானுக்கு ;
सद्य: ........... உடனே,
सरसै: ......... அன்பு நீர் , நிறைந்த ;
अपांग ......... கடைக்கண் ,
पातै: ........... பார்வைகளால் ;
अपारम् ........ எல்லை அற்ற , பெரிய ,
आनन्द ........ ஆனந்தக் ,
सागरम् ....... கடலை ,
अकार्षी: ...... படைத்தாய் !
ஶ்ரீ உப. வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* பூமிப் பிராட்டியே !
* உன்னைச் சூழ்ந்து , நிற்கும் , கடல் ; உனக்கு, ஆடையாக உள்ளது . அத்தகைய , கடல்
பிரளய காலத்தில் , மிகப் பொங்கி எழுந்து , வானத்தையும் , மீறிச் செல்கிறது . அச்சமயத்தில் , வராஹ வடிவு கொண்டு ; உன்னை , எடுத்து வந்தான் ; உன் நாயகனான , எம்பெருமான் .
* எங்கும் நிறைந்து , நிற்கும் ; அவனுடைய , வராஹத் திருமேனிக்கு முன் , பொங்கி எழுந்த , கடல் ; ஒரு , சிறு குட்டை போல ஆயிற்று . அத்துணைச் சிறியதாய் , ஆன கடல் ; அவன் , பெரிய , வராஹத் திருமேனியுடன் ; மூழ்குவதற்குப் போதாதது , ஆயிற்று .
* அச்சமயத்தில் , உன்னை , எடுத்து வந்த , மகிழ்ச்சியால் ; உடனே , அன்போடு , உன் நாயகனைக் , குளிரக் , கடைக்கண்களால் , கடாக்*ஷித்து , அருளினாய் . அதனால் , அவனுக்கும் , ஆநந்தம் , கடலாகப் பொங்கியது .
* கடல் நீர் , போதவில்லை , என்பதற்காக , எல்லை அற்ற , ஆநந்தக் கடலைப் படைத்து , அதில் , மூழ்க , அவனுக்கு , விசாலமான , இடம் , கொடுத்தாயோ ?