Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 12 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 12 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

    ��


    श्री भूस्तुति : 12 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே ! உன்னால் , பூமி ,செழிக்கிறது !


    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    भूतेषु , यत् , त्वत् - अभिमान , विशेष , पात्रम् ;

    पोषम् , तत् - एव , भजति - इति , विभावयन्त: |

    भूतम् , प्रभूत , गुण , पञ्चकम् - आद्यम् - एतत् ;

    प्रायो , निदर्सनतया , प्रतिपादयन्ति ! ||


    ��


    பூதேஷு , யத் , த்வத் - அபிமான , விசேஷ , பாத்ரம் ;

    போஷம் , தத் - ஏவ , பஜதி - இதி , விபாவயந்த: |

    பூதம் , ப்ரபூத , குண , பஞ்சகம் - ஆத்யம் - ஏதத் ;

    ப்ராயோ , நிதர்சநதயா , ப்ரதிபாதயந்தி ! ||



    ��


    भूतेषु ............ பிராணிகளில் ,

    यत् .............. எது ,

    त्वत् ............. உன்னுடைய ,

    अभिमान ....... அன்பைப் பெற ,

    विशेष .......... மிகத் தகுதி ,

    पात्रम् ........... உடையதாக ஆகிறதோ ;

    तत् एव ......... அதுவே ,

    पोषम् ........... நல்ல வளர்ச்சியை ,

    भजति .......... அடைகிறது !

    इति ............. என்று ,

    विभावयन्त: .... எண்ணுபவர் ;

    पञ्चकम् ....... ஐந்து ,


    गुण ............. குணங்கள் ,

    प्रभूत ........... அதிகமாக , இருப்பதும் ;

    आद्यम् .......... முதன்மை , பெற்றதுமான ;



    एतत् ............ இந்த ,

    भूतम् ............ பூமி எனும் பூதத்தை ,

    प्रायो ............ பெரும்பாலும் ,

    निदर्सनतया .... உதாரணமாகக் ,

    प्रतिपादयन्ति .. காட்டுகின்றனர் !



    �� ��



    ஸ்ரீ வ.ந/ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * பூமிப் பிராட்டியே !

    * உலகில் உள்ள , பிராணிகளில் , எந்தப் பிராணி , உன் திருவருளை ,மிகுதியாகப் பெறுகிறதோ ; அந்தப் பிராணிக்குத்தான் , செல்வங்களும் , பெருமையும் , வருகின்றன என்று , கண்டனர் , பெரியோர் .

    * அவர்கள் , பஞ்ச பூதங்களுள் , முதன்மையான ப்ருத்வீ என்பதை இவ்வுண்மைக்கு , உதாரணமாகக் காட்டுகின்றனர் . அதாவது , பூமி , ஜலம் , தேஜஸ் , வாயு , அக்னி , ஆகாசம் எனும் , ஐந்து பூதங்களுள் , பூமியே , முதனமை , பெற்றதாகும் .

    * இந்தப் பூமி ஒன்றுக்கே , உருவம் , சுவை , மணம் , ஸ்பர்சம் , ஒலி எனும் , ஐந்து குணங்களையும் , பெற்ற பெருமை உண்டு . மற்ற பூதங்களுக்கு , முறையே , நான்கு , மூன்று , இரண்டு , ஒன்று குணங்கள் தான் உண்டு.

    * பூமிக்கு மட்டும் , இந்தப் பெருமை , எதனால் வந்தது ? பூமி தேவியாகிய , உனது அம்சத்தைப் பெற்று , உன் அன்புக்கு , மிக உரியதாய் , இருப்பதாலேயே . ஆகவே , இந்த உதாரணத்தைக் , காட்டி , உன் அருளைப் பெற்றவர்க்கே , சிறப்புகள் உண்டாகும் என்று , பெரியோர்கள் , விளக்குகின்றனர் .


    ��



    Last edited by sridharv1946; 18-06-18, 18:29.
Working...
X