श्री भूस्तुति : 11 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே ! தேவர்களின் பெருமைக்கு , நீயே , காரணம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
क्रीडा , वराह , दयिते ! कृतिन: , क्षिति - इन्द्रा: ,
संन्क्रन्दन: - तत् - इतरे - अपि , दिशाम् - अधीशा: |
आमोदयन्ति ! भुवनानि - अलिक - आश्रितानाम्
अम्ब ! त्वत् - अङ्घ्रि , रजसाम् , परिणाम , भेदै: ||
க்ரீடா , வராஹ , தயிதே ! க்ருதின: , க்ஷிதி - இந்திரா: ,
ஸங்க்ரந்தன: - தத் - இதரே - அபி , திசாம் - அதீசா: |
ஆமோதயந்தி ! புவநாநி - அளிக - ஆச்ரிதாநாம் ,
அம்ப ! த்வத் - அங்க்ரி , ரஜஸாம் , பரிணாம , பேதை: ||
क्रीडा .............. லீலையாக ,
वराह ............... வராஹ வடிவு , கொண்ட பகவானுக்கு ,
दयिते .............. மனைவியே !
अम्ब ............... தாயே !
कृतिन: ............. காரியங்களில் , வல்லவரான ,
क्षिति इन्द्रा: ........ அரசர்களும் ,
संन्क्रन्दन: .......... இந்திரனும் ,
तत् इतरे ............ இன்னும் , மற்ற ,
दिशाम् अधीशा: ... திக் பாலர்களும் ,
अपि ................. கூட ,
अलिक .............. தங்கள் , நெற்றியில் ,
आश्रितानाम् ........ படிந்த ,
त्वत् .................. உன்னுடைய ,
अङ्घ्रि ............... திருவடியின் ,
रजसाम् .............. துகள்களின் ,
परिणाम भेदै: ........ விளைவுகள் ஆகிய அதிகாரங்களால் ,
भुवनानि .............. உலகங்களை ,
आमोदयन्ति ......... மகிழ்சசி அடையச் செய்கின்றனர் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* தாயே !
* எம்பெருமான் , பெரிய வராஹ வடிவு கொண்டு , பல லீலைகளைப் , புரிந்துள்ளான் . அப்பொழுதும் , நீ , அவனைப் பிரியாமல் இருந்து , அவனது , அன்புக்குப் பாத்திரமாய் , உள்ளாய்
* உலகில் , பல்வேறு அரசர்கள் , தங்கள் ராஜ்யங்களை , மிக்க வல்லமையுடன் , ஆண்டு , உலகங்களை , மகிழ்விக்கின்றனர் . இந்திரன் முதலிய திக் பாலர்களும் , தங்களுக்கு உரிய , அதிகாரங்களில் , நிலை நின்று , உலகங்களை , மகிழ்விக்கின்றனர்.
* அவர்கள் அனைவர்க்கும் , இத்துணைப் , பெருமை வரக் , காரணம் யாது ? அவர்கள் எல்லோரும் , உன் திருவடிகள் , தங்கள் நெற்றி படும்படி வந்து , வணங்கினர். அப்பொழுது , உன் திருவடியிலிருந்து , துகள்கள் , அவர்கள் நெற்றியில் , ஒட்டிக்கொண்டன. பின் , அந்தத் துகள்களே , அவர்களின் அதிகாரங்களாக மாறி , அவர்கள் வசத்தில் , நிற்கின்றன.
* இப்படி , அவர்கள் எல்லோரும் , உன் திருவடி பலத்தால் , சிறப்பு பெற்று , விளங்குகின்றனர் .