श्री भूस्तुति : 10 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
ஶ்ரீ - தரன் , பூ - தரன் ஆனது , ஏன் ?
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
सम्भावयन् ; मधुरिपु: , प्रणय - अनुरोधात् ;
वक्ष: , स्थलेन ; वरुण - आलय , राज , कन्याम् ; |
विश्वम्भरे ! बहुमुख , प्रतिपन्न , भोग: ;
शेषात्मना , तु ; भवतीम् , शिरसा , दधाति ||
ஸம்பாவயன் ; மதுரிபு: , ப்ரணய - அனுரோதாத் ;
வக்ஷ: , ஸ்த்தலேந ; வருண - ஆலய , ராஜ , கந்யாம் ;|
விச்வம்ப்ரே ! பஹுமுக , ப்ரதிபந்ந , போக : ;
சேஷாத்மநா , து ; பவதீம் , சிரஸா , ததாதி ||
विश्वम्भरे ...... பூமிப் பிராட்டியே !
प्रणय .......... அன்பு ,
अनुरोधात् ..... காரணமாக ;
वरुण आलय ..கடல் ,
राज ............அரசனின் ;
कन्याम् ........ புதல்வியான , பெரிய , பிராட்டியை ;
वक्ष: स्थलेन ... தனது , திரு மார்பிலே , வைத்து ;
सम्भावयन् ..... கௌரவிக்கின்ற போதிலும் ;
मधुरिपु: ....... எம்பெருமான் ,
बहुमुख ......... பல்வகையால் ( பல முகம் கொண்ட) ;
भोग: ........... இன்பத்தை ( பாம்பின் உடலை ) ,
प्रतिपन्न ....... அடைந்து ;
शेषात्मना ..... ஆதி சேஷன் வடிவம் , கொண்டு ;
भवतीम् ........ உன்னைத் ,
शिरसा तु ...... தலையால் , அன்றோ ;
दधाति ......... தாங்குகிறான் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :
* பூமிப் பிராட்டியே !
* எம்பெருமானுக்கு , பெரிய பிராட்டியிடம் , மிக்க அன்பு உண்டு . அதனால் , அவளைத் , தன திரு மார்பில் வைத்துக் கொண்டு , கௌரவிக்கிறான் .
* ஆயினும் , அவளைக் காட்டிலும் , உன்னிடம் , மிக்க மதிப்பு உண்டு. அவன் , உன்னால் , அநேக , ஸுகங்களைப் பெற்றுள்ளான் . மேலும் , உனக்குத் , தாஸனாகவும் , உள்ளான்.
* உன்னைப் பெரிய பிராட்டியை விட , அதிகமாக , மதிக்க எண்ணுகிறான். அதற்காகவே , அநேக முகம் கொண்ட , ஆதி சேஷ வடிவு கொண்டு , உன்னைத் , தன் தலையால் , தாங்குகிறான் !
[ ஆதி சேஷன் , பூமியைத் , தன தலையால் தாங்குவதாய் , சாஸ்த்ரம் , கூறும் ]