Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 09 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 09 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமி






    ��


    श्री भूस्तुति : 09 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��


    பூமித் தாயே ! கோபுரம் தாங்கும், பொம்மைகளே , திக் கஜங்கள் ?







    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��




    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��


    स्वाभविके , वसुमति ! श्रुतिभि: , विभाव्ये ,

    पत्यु: - महिम्नि , भवतीम् , प्रतिपन्न , वासाम् ; |

    शङ्खे , विमान , वहन , प्रतिमा , समाना: ,

    स्तम्बेरम , प्रभूतय: अपि , वहन्ति , सत्त्वा: ||



    ��



    ஸ்வாபாவிகே , வஸுமதி ! ச்ருதிபி : , விபாவ்யே ,

    பத்யு: - ம்ஹிம்நி , பவதீம் , பிரதிபந்ந , வாஸாம் ; |

    சங்கே , விமாந , வஹந , பிரதிமா , ஸமாநா:

    ஸ்தம்பேரம , ப்ரப்ருதய: அபி , வஹந்தி , ஸத்தவா: ||



    ��



    वसुमति ....... பூமித் தாயே !

    श्रुतिभि: ....... வேதங்களால் மட்டுமே ,

    विभाव्ये ...... அறியக்கூடிய ;

    पत्यु: .......... உன் நாயகனுடைய ,


    स्वाभविके .... இயற்கையாக , உள்ள ,

    महिम्नि ....... பெருமையில் ,

    वासाम् ....... வாழ்க்கையை ,

    प्रतिपन्न ...... அடைந்த ,

    भवतीम् ....... உன்னை ;


    स्तम्बेरम ..... திக் கஜங்கள் ,

    प्रभूतय: ....... முதலிய ,

    सत्त्वा: अपि .. பிராணிகளும் ;

    विमान ........ கோபுரத்தைத் ,

    वहन .......... தாங்குகிற ,

    प्रतिमा ....... பொம்மை ,

    समाना: ...... போன்றவைகளாய் ;

    वहन्ति ........ தாங்குகின்றன என்று ,

    शङ्खे ........ எண்ணுகிறேன் !


    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��


    * பூமிப் பிராட்டியே !


    * உன் நாயகனான எம்பெருமானுடைய , பெருமையைச் சிறிதளவாவது , பேசுவதற்கு ,வேதங்கள் தாம் , வல்லன. இந்தப் பெருமை , அவனுக்கு , இயற்கையாய் , உள்ளது. இந்தப் பெருமையில் , நீயும் , பங்கு கொள்கிறாய் .

    * அவனுக்கு , எப்படி , வேறு ஒரு , ஆதாரம் இல்லையோ , அவ்வாறே , அவன் , பெருமையில் , பங்கு கொண்ட , உனக்கும் , வேறு ஒரு ஆதாரம் இல்லை.

    * இத்தகைய பூமியாகிய உன்னை , எட்டுத் திசைகளிலும் , உள்ள திக்கஜங்கள் முதலியன , தாங்கி , நிற்பதாகக் , கூறுகின்றன . உன் பெருமை எத்தகையது ? உன்னை , அந்த யானைகள் , தாங்க முடியுமா ?

    * கோபுரத்தைக் கட்டும்போது , அதைத் தாங்கி , நிற்பனவாக , சில உருவங்களை அமைப்பது உண்டு. உண்மையில் , அந்தப் பொம்மைகளா , அந்த கோபுரத்தைத் தாங்குகின்றன ? அல்ல ! பின் , கோபுரம் தான் , அந்தப் பொம்மைகளைத் தாங்குகிறது . இது போன்றே உன்னைத் திக்கஜங்ககள் , தாங்குவதும் , என்று , நினைக்கிறேன் .

    ��
    Last edited by sridharv1946; 15-06-18, 15:01.
Working...
X