श्री भूस्तुति : 06 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே ! உன் நாமங்கள் , உன் பெருமையைக் , கூறுகின்றன !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
" सर्वम् , सहा" - इति , "अवनि:" - इति , "अचला" - इति , मात: !
"विश्वम्भरा" - इति , "विपुला" - इति , "वसुन्धरा" - इति , |
अन्यानि , च - अन्य , विमुखानि - अभिधान , वृध्या ,
नामानि - अमूनि , कथयन्ति ! तव - अनुभावम् ||
"ஸர்வம் , ஸஹ" - இதி , "அவனி:" - இதி , "அசலா" - இதி , மாத: !
"விச்வம்பரா" - இதி , "விபுலா" - இதி , "வஸுந்தரா" - இதி , |
அன்யானி , ச - அந்ய , விமுகானி - அபிதான , வ்ருத்த்யா ,
நாமானி - அமூனி , கதயந்தி ! தவ - அனுபாவம் ||
मात: ............... தாயே !
सर्वम् सहा इति .... "ஸர்வம் ஸஹை " (அடியார்களின் , பிழை பொறுப்பவள்) என்றும் ,
अवनि: इति ........ "அவநி" (உலகைக் ,காப்பவள்) என்றும் ,
अचला इति ........ "அசலை" (காப்பதில் , உறுதியானவள்) என்றும் ,
विश्वम्भरा इति .... "விச்வம்பரை" (உலகத்தைத் தாங்கி , நிற்பவள் ) என்றும் ,
विपुला इति ........ "விபுலை" (அளக்க , முடியாதவள் ) என்றும் ,
वसुन्धरा इति ...... "வஸுந்தரை" (உயர்ந்த செல்வம் , உடையவள்) என்றும் ,
अन्यानि च ......... மற்றும் உள்ள ,
अमूनि .................. இந்தத் ,
नामानि ............. திருநாமங்களும் ,
अन्य ................ மற்றவரைக் ,
विमुखानि .......... கூறாமல் ,
अभिधान वृध्या .... வெளிப்படையாக (நேராக) ,
तव .................. உன்னுடைய ,
अनुभावम् .......... பெருமையைக் ,
कथयन्ति ........... கூறுகின்றன !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* பூமித் தாயே !
* உனக்குப் பல் வேறு திருநாமங்கள் உள்ளன . அத்திருநாமங்களின் பொருளை நோக்கினால் , அவை , உன் பெருமையைக் காட்ட வல்லன என்பது தெற்றென விளங்கும்
. ஸர்வம் ஸஹை என்ற திருநாமம் , அடியார்களின் பிழை பொறுத்தலையும் ,
. அவனி என்பது , நீ உலகைக் காத்தலையும் ,
. அசலை என்பது , காப்பதில் உள்ள உறுதியையும் ,
. விச்வம்பரை என்பது , உலகத்தைத் தாங்கி நிற்றலையும் ,
. விபுலை என்பது , அளக்க முடியாது இருத்தலையும் ,
. வஸுந்தரை என்பது , உயர்ந்த செல்வம் உடைத்தலையும் , காட்டுகின்றன .
* இவ்வாறே , இன்னும் , அனந்தா , தரித்ரீ , ப்ருத்வீ முதலிய பல திருநாமங்கள் , பல்வேறு பெருமைகளைக் காட்டுகின்றன . இவற்றுள் ஒன்றாவது , வேறு ஒருவரையும் , காட்ட வல்லது அன்று .
* இப்படிப் பல திருநாமங்களும் , உன்னையே நேராகக் கூறி , உன் பெருமையை , விளக்குகின்றன !