श्री भूस्तुति : 05 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
விச்வம் காக்கும் , விச்வம்பரையே , வணக்கம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
वेध: - तृण - अवधि , विहार , परिच्छ्दम् , ते ;
विश्वम् , चर - अचरतया , व्यतिभिध्यमानम् ; |
अम्ब ! त्वत् - आश्रिततया , परिपोषयन्ती ,
विश्वम्भरस्य , दयिता - असि ! तत् - एक , नामा ||
வேத: - த்ருணா - அவதி , விஹார , பரிச்சதம் , தே
விச்வம் , சர - அசரதயா , வ்யதிபித்யமானம் ; |
அம்ப ! த்வத் - ஆச்ரிததயா , பரிபோஷயந்தீ ,
விச்வம்பரஸ்ய , தயிதா - அஸி ! தத் - ஏக , நாமா ||
अम्ब ................ தாயே !
चर .................. அசைவன ,
अचरतया ........... அசையாதன , என்று ;
व्यतिभिध्यमानम् ... பாகுபாடு , உடையதும் ;
ते .................... உனக்கு ,
विहार ................விளையாட்டுக் ,
परिच्छ्दम् .......... கருவியானதும் ;
वेध: ................. பிரம்மா , முதல் ,
तृण .................. துரும்பு ,
अवधि ............... வரை உள்ளதுமான ,
विश्वम् .............. உலகம் ;
त्वत् ................. உன்னை ,
आश्रिततया ........ அண்டி , இருப்பதால் ;
परिपोषयन्ती ....... நன்கு , போஷித்துக் கொண்டு ;
विश्वम्भरस्य ........ உலகத்தை ,
तत् .................. எம்பெருமானுடைய
एक नामा ........... பெயரையே , உடையவளான ;
दयिता .............. பிரியமான , மனைவியாக ,
असि ................ இருக்கிறாய் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* தாயே !
* உலகம் , அசையும் பொருள் , அசையாப் பொருள் என்று , இருவகையாகப் , பிரிந்து , நிற்கிறது .
* பிரமன் முதல் , துரும்பு வரை உள்ள உலகப் பொருள்கள் அனைத்தையும் , நீ , உனக்கு , விளையாட்டுக் கருவிகளாய்க் கொண்டு , செயல் புரிகின்றாய் .
* இவ்வுலகம் முழுதும் , உன்னை , அண்டி , இருப்பதால் , நீ , அதனை, நன்கு , பாதுகாக்கிறாய் .
* இப்படி , எம்பெருமானைப் போல் , நீயும் , உலகத்தைத் , தாங்கி , நிற்பதால் , "விஸ்வம்பரன்" (உலகத்தைத் தரிப்பவன் ) எனும் அவன் திருநாமமே , உனக்கும் , "விஸ்வம்பரா" என்று பெயர் , வழங்கப் படுகிறது
* இப்படி , முழுதும் , அவனை , ஒத்திருப்பதால் , உன்னிடம் , அவனுக்குப் பிரியம் உள்ளது .