श्री भूस्तुति : 04 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
தாயே ! உன்னால் , பகவானுக்கும் , பெருமை !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
संकल्प , किङ्कर , चर - अचर , चक्रवाळम् ;
सर्व - अतिशायिनम् ; अनन्त , शयस्य ; पुंस: |
भूमानम् - आत्म , विभवै: , पुनरुक्तयन्ती ;
वाचाम् , अभूमि: , अपि ; भूमि: , असि ! त्वम् - एका
ஸங்கல்ப , கிங்கர , சர - அசர , சக்ரவாளம் ;
ஸர்வ - அதிசாயினம் ; அனந்த , சயஸ்ய ; பும்ஸ: |
பூமானம் - ஆத்ம , விபவை: , புனருக்தயந்தீ ;
வாசாம் , அபூமி: , அபி ; பூமி: , அஸி ! த்வம் - ஏகா
संकल्प ......... தன் , ஸங்கல்பத்திற்கு ;
किङ्कर ........ வசப் பட்டுள்ள ,
चर .............. அசையும் ;
अचर ............ அசையாப் பொருள் ,
चक्रवाळम् .......எல்லாவற்றையும் உடையவரும் ;
सर्व .............. எல்லாவற்றிற்கும் ,
अतिशायिनम् ... மேம்பட்டதாய் , உள்ளவரும் ;
अनन्त ........... திரு அனந்தன் மேல் ,
शयस्य .... ..... பள்ளி கொண்டவரும் ஆன ,
पुंस: ............. பரம புருஷனுடைய ,
भूमानम् .......... பெருமையை ,
आत्म ............ தன்னுடைய ,
विभवै: ........... பெருமையால் ,
पुनरुक्तयन्ती ... அதிகம் ஆக்குபவளும் ;
एका ............. ஒப்பற்றவளான ,
त्वम् .............. நீ ;
वाचाम् ........... துதிக்கும் சொற்களுக்கு ,
अभूमि: ...... .... நிலம் (பூமி) அல்லாதவள் ;
अपि ............. ஆயினும் ,
भूमि: ............. நிலம் (பூமி தேவி)
असि ............. ஆகின்றாய் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* பூமிப் பிராட்டியே !
* உன் நாயகனான , பரம புருஷன் , திரு அனந்தாழ்வான் மீது , பள்ளி கொண்டுள்ளான் . அவனது பெருமைக்கு எல்லை இல்லை . அசையும் , அசையாத , எல்லாப் பொருள்களும் , அவனது , ஸங்கல்பத்துக்கு , அடங்கி , ஒடுங்கி , நிற்கின்றன .அவன் பெருமைக்கு மேம்பட்ட பெருமையே இல்லை .
* அத்தகைய பெருமையுடன் , உன் பெருமையும் , சேரும்போது , அதை , அதிகமாக , ஆக்குகின்றாய். உன் பெருமையும் அளவு அற்றது , ஆதலால் , நீயும் , ஒப்பற்று விளங்குகிறாய்.
* இந்தப் பெருமையால் , துதிக்கும் சொற்களுக்கு , நீ எட்டாவதளாக , உள்ளாய். ஆயினும் , எல்லோரும் அணுகுவற்கு ஏற்ற , பூமிபிராட்டியாக , உள்ளாய்.
[ இங்கு , அபூமி என்ற சொல் , எட்டாதவள் , பூமி அல்லாதவள் என்ற இரு பொருளையும் , தர வல்லது . ஆதலின் , பூமி அல்லாதவளாய் இருந்தும் , பூமியாய் உள்ளாய் என்ற சுவை காண்க !
பூமி என்ற சொல்லும் , "விஷயம் ஆகிறாய்" என்றும் , பூமியாய் உள்ளாய் என்றும் இரு பொருள் சொல்லாய் , சுவையை , ஊட்டுகிறது ! ]