श्री भूस्तुति : 03 / 33
ஸ்ரீ பூஸ்துதி :
என் மழலையை , ஏற்க வேண்டும் , தாயே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
नित्यम् , हित - अहित , विपर्यय , बद्ध , भावे ;
त्वत् - वीक्षण - एक , विनिवर्त्य , बहु , व्यपाये ; |
मुग्ध - अक्षरै: ; अखिल , धारिणि ! मोदमाना ;
मात: ! स्तनन्धय - धियम् , मयि , वर्तयेथा: ! ||
நித்யம் , ஹித - அஹித , விபர்யய , பத்த , பாவே ;
த்வத் - வீக்ஷண -ஏக , விநிவ்ரத்ய , பஹு , வ்யபாயே ; |
முக்த - அக்ஷரை: ; அகில , தாரிணி ! மோதமாநா ;
மாத: ! ஸ்தனந்தய - தியம் , மயி , வர்த்தயேதா: ! ||
अखिल ........ அனைத்தையும் ,
धारिणि ....... தாங்கும் ,
मात: ........... அவனித் , தாயே !
नित्यम् ......... எப்போதும் ,
हित ............. நன்மை ,
अहित .......... தீமைகளின் ,
विपर्यय ........ மாறுபாட்டில் ,
बद्ध भावे ....... கருத்துடையவனும் ;
त्वत् ............ உன் ,
वीक्षण एक ... கடாக்ஷத்தாலேயே ,
विनिवर्त्य ....... நீக்குவதற்கு உரிய ,
बहु .............. பல ,
व्यपाये ......... பாபங்களை உடையவனுமான ;
मयि ............ என்னிடம் ,
मुग्ध ............ (என்) மழலை ,
अक्षरै: .......... மொழிகளால் ;
मोदमाना ....... (நீ) மகிழ்ச்சி கொண்டு ,
स्तनन्धय ....... (நான்) பால் பருகும் , பாலகன் எனும் ,
धियम् .......... எண்ணத்தை ,
वर्तयेथा: ....... கைக்கொள்வாயாக !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* உலகம் முழுவதையும் , தாங்கி நிற்கும் , தாயான , பூமிப் பிராட்டியே !
* அடியேனுக்கு , நன்மை எது ; தீமை எது ; என்று பிரித்து , அறிய சக்தி இல்லை . நன்மையைத் , தீமையாகவும் ; தீமையை , நன்மையாகவுமே , எப்பொழுதும் , தவறாகக் கருதி, வந்துள்ளேன் !
* அடியேன் , செய்துள்ள , பாபங்களுக்கோ , அளவே , இல்லை ! அவை , உன் கடாக்ஷம் ஒன்றினால் மட்டுமே , ஒழிய வேண்டும்.
* இந் நிலையில் உள்ள , அடியேன் , உன்னை , நேரிய முறையில் , புகழ , வல்லேன் , அல்லேன் ! சில மழலைச் சொற்களைப் , பிதற்றுகின்றேன் !
* உலகில் , தாய் , பால் பருகும் , குழந்தையின் , மழலைச் சொற்களால் , மகிழ்கிறாள் . அவ்வாறே , நீயும் , என் மழலை மொழிகளால் , மகிழ்ந்து ; நான் , உன் குழந்தை என்ற எண்ணத்தை , உன் திருவுள்ளத்தில் , கொள்ள வேண்டும் .