Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 01 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 01 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 பூமĬ

    ��


    श्री भूस्तुति : 01 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��



    பூமி தேவியைச் , சரணம் அடைகிறேன் !


    ��






    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் முன்னுரை :


    * இது , பூமிப் பிராட்டியைப் பற்றி , 33 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்தோத்ரம் ஆகும் . பூ + ஸ்துதி - பூமியைப் பற்றிய துதி அடங்கிய நூல் .


    * பூமிதேவியை , யஜ்ஞ வராஹ வடிவம் கொண்ட , எம்பெருமானுக்குப் பிராட்டியாக வைத்துப் பாடியது இந்த ஸ்தோத்ரம் .


    * பெருமையில் , பெரிய பிராட்டிக்கு , அடுத்த ஸ்தானம் இவளுக்கு.


    * முன் ஒரு கால் , ஹிரண்யாக்ஷன் எனும் அசுரன் , பூமியைக் கவர்ந்து , கடலுள் , புகுந்தபோது , எம்பெருமான் , வராஹ உருக் கொண்டு , கடலுள் சென்று , அவனைக் கொன்று , பூமியை மீட்டு வந்த வரலாறு , இதில் விளக்கப் படுகிறது.


    * பூமி தேவியையும் , நிலப் பரப்பாகிய பூமியையும் , ஒன்றாக வைத்து , சில ஸ்லோகங்கள் , பாடப் பட்டுள்ளன .


    * இந்த ஸ்தோத்ரத்தில் ,

    (01). முதலில் பூமிப் பிராட்டியைச் சரண் அடைந்து ,


    (02). பின் , துதிக்கு எட்டாத , அவள் பெருமை ;


    (03). தன மழலை மொழியை ஏற்குமாறு வேண்டல் ;


    (04). அவள் சேர்த்தியால் , பகவானுக்கு வரும் பெருமை ;


    (05). உலகை , அவள் போஷிக்கும் , திறமை ;


    (06). அவள் பெருமையை , விளக்கும் , திருநாமங்கள் ;


    (08). தத்துவங்களுக்குக் , கடைசி எல்லை ஆதல் ;


    (10). எம்பெருமானது , மதிப்புப் பெற்றமை ;


    (11). இவளால் தேவர்க்கு வரும் சிறப்பு ;


    (12). பூமி செழித்தல் ;


    (13). சேதனருக்காகச் செய்யும் செயல் ;


    (14). கடலுள் மூழ்கிய காரணம் ;


    (15). கடலினின்று மீட்சி ;


    (20). ஸர்வ லோகேஸ்வரியாகப் , பட்டாபிஷேகம் ;


    (22). இம்மை , மறுமைப் பயன்களுக்கு , வழியாய் இருத்தல் ;


    (23). இருவகை வடிவம் கொள்ளுதல் .;


    (24). யோகிகளால் த்யானிக்கப் படுதல் ;


    (26). வறுமை ஒழித்தல் ;


    (27). எம்பெருமானிடம் , சேதனரை , அணுகுவித்தல் ; ஆகியவற்றை , விரிவாய்ப் பேசி


    (31). தம்மைக் கடாக்ஷிக்கும்படிப் , பிரார்த்தித்து ;


    (32). த்யான ஸ்லோகத்துடன் ;


    (33) . நூல் பயனையும் கூறித் ;


    தலைக் கட்டுகிறார் , ஆச்சார்ய ஸார்வபௌமர் !


    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��


    संकल्प , कल्प , लतिकाम् ; अवधिम् , क्षमाया: ;

    स्व - इच्छा , वराह , महिषीम् ; सुलभ - अनुकम्पाम् ; |

    विश्वस्य , मातरम् ; अकिञ्चन , कामधेनुम् ;

    विश्वम्भराम् ; अशरण: , शरणम् , प्रपद्ये ! ||


    ��


    ஸங்கல்ப , கல்ப , லதிகாம் ; அவதிம் , க்ஷமாயா: ;

    ஸ்வ - இச்சா , வராஹ , மஹிஷீம் ; ஸுலப - அநுகம்பாம் ; |

    விச்வஸ்ய , மாதரம் ; அகிஞ்சன , காமதேனும் ;

    விச்வம்பராம் ; அசரண: , சரணம் , ப்ரபத்யே ! ||


    ��



    संकल्प ........ நினைத்த பயனை , அளிப்பதில் ,

    कल्प .......... கற்பகக் ,

    लतिकाम् ..... கொடியானவளும் ;

    क्षमाया: ....... பொறுமைக்கு ,

    अवधिम् ...... எல்லை நிலமானவளும் ;

    सुलभ ......... எளிதில் ,

    अनुकम्पाम् ... அருள் புரிபவளும் ,

    अकिञ्चन .... கைமுதல் இல்லாத ,

    कामधेनुम् ..... காமதேனு , ஆனவளும் ;

    स्व ............. தன் ,

    इच्छा .......... ஸங்கல்பத்தால் ,

    वराह ........... வராஹ வடிவு கொண்ட எம்பெருமானுக்கு ,

    महिषीम् ....... மனைவி ஆனவளும் ;

    विश्वस्य ....... உலகுக்குத் ,

    मातरम् ........ தாயாகவும் உள்ள ,

    विश्वम्भराम् ... பூமிதேவியை ,

    अशरण: ....... வேறு கதி அற்ற , அடியேன் ,

    शरणम् ........ சரணமாக ,

    प्रपद्ये .......... அடைகிறேன் !


    ��


    ஶ்ரீ வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * எம்பெருமானுடைய தேவியருள் , பெரிய பிராட்டிக்கு , அடுத்த நிலையில் உள்ளவள் , பூமிப் பிராட்டி .

    * எம்பெருமான், தன் ஸங்கல்பத்தால் , வராஹாவதாரம் செய்தான் . அந்த அவதாரத்தில் , பூமிப்பிராட்டி , முக்கிய மனைவியாக , விளங்கினாள்.

    * இவள் , அடியார் விரும்பும் பலனை , அளிக்கும் , கற்பகக் கொடி போன்றவள்.

    * பொறுமைக்கு , எல்லை நிலமாய் , நின்று , அடியார்களின் , குற்றங்களை எல்லாம் , பொறுத்துக் கொள்பவள். எளிதில் , அடியார்களுக்கு , அருள்பவள்.

    * உலகில் , சேதனர்களுக்குத் தாயாய் நின்று , அவர்களைத் ,தன் குழந்தைகருளாய்க் கருதுபவள்.

    * பக்தியோகத்தைச் செய்ய முடியாதவர்கள் , ப்ரபத்தியைச் செய்தால் , அவர்கள் , விரும்பும் பலனை எல்லாம் , அளிக்கும் , காமதேனுவாய் , விளங்குபவள்.

    * இத்தகைய பெருமையை உடைய , பூமி தேவியை , வேறு புகல் அற்ற அடியேன் , சரணம் அடைகிறேன் .



    ��


    Last edited by sridharv1946; 12-06-18, 11:39.
Working...
X