श्री स्तुति : 21 / 25
ஸ்ரீ ஸ்துதி :
அன்னையே ! , அடியேனைக் , கடாக்ஷித்து , அருள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
सानुप्रास , प्रकटित , दयै: ; सान्द्र , वात्सल्य , दिग्धै: ;
अम्ब ! स्निग्धै: ; अमृत , लहरी , लब्ध , सब्रह्मचर्यै: ;।
घर्मे , ताप , त्रय , विरचिते ; गाढ , तप्तम् ; क्षणम् ; माम् ;
आकिंचन्य , ग्लपितम् ; अनघै: - आर्द्रयेथा: ! कटाक्षै: ।।
ஸாநுப்ராஸ , ப்ரகடித , தயை: ; ஸாந்த்ர ,வாத்ஸல்ய , திக்தை: ;
அம்ப ! ஸ்நிக்தை: ; அம்ருத , லஹரீ , லப்த , ஸப்ரஹ்மசர்யை: ; |
கர்மே , தாப , த்ரய ,விரசிதே ; காட , தப்தம் ; க்ஷணம் ; மாம் ;
ஆகிஞ்சிந்ய , க்லபிதம் ; அநகை: ; ஆர்த்ரயேதா: ! கடாக்*ஷை: ||
अम्ब ........ தாயே !
सानुप्रास ... அடிக்கடி ,
प्रकटित .... வெளிக்காட்டப்பட்ட ,
दयै: ........ கருணையை உடையதும் ;
सान्द्र ....... நெருங்கிய ,
वात्सल्य ... அன்பால் ,
दिग्धै: ...... நிறைந்ததும் ;
स्निग्धै: ..... நட்பு , மிக்கதும் ;
अनघै: ...... பாபத்தைப் , போக்குவதும் ;
अमृत ....... அமுதப் ,
लहरी ....... பெருக்குகளுடன் ,
सब्रह्मचर्यै... தோழமை ,
लब्ध ........ கொண்டதுமான ;
कटाक्षै: ..... (உன்) கடாக்ஷங்களால் ;
त्रय .......... மூவகைத் ,
ताप ......... தாபங்களால் ,
विरचिते .... வந்த ;
घर्मे .......... வெப்பத்தால் ,
गाढ ......... மிகவும் ,
तप्तम् ....... தவிப்பவனும் ;
आकिंचन्य ...கைம் முதல் இல்லாமையால் ,
ग्लपितम् .... வாடுபவனுமான ;
माम् ......... அடியேனை ,
क्षणम् ....... ஒரு நொடிப்பொழுது ,
आर्द्रयेथा: ... குளிரச்செய்து , அருள் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* தாயான பெரிய பிராட்டியே !
* இந்த ஸம்ஸார மண்டலத்தில் இருக்கும் , அடியேன் , மூன்று தாபங்களால் , உண்டான , வெயில் போன்ற இந்த ப்ரக்ருதியில் , அகப்பட்டு , மிக மிகத் , தவிக்கின்றேன் . இதைக் கழிக்க வேறு உபாயம் , இல்லாமல் , வாடுகின்றேன் .
* இப்பொழுது , உன்னைச் சரணம் அடைந்த , என் மீது , உன் கடாக்ஷங்கள் , கணப்பொழுதும் , விழுந்தாலும் , நான் , குளிர்ச்சி , பெறுவேன் .
* உன் கடாக்ஷங்கள் , அடிக்கடி , சேதனர் பால் , கருணையை வெளிக்காட்டிக் கொண்டே , வீழ்வன . அடியார்களிடம் , குற்றம் இருப்பினும் , அதைப் பொருட்படுத்தாத அளவுக்கு , மிக அன்பு கொண்டன. பாபத்தை ஒழிப்பன . அடியார்களிடம் , மிக , நட்பு கொண்டன . மேலே படும்போது , அமுத வெள்ளத்தைப் பெருக்கினாற்போல் , உணர்ச்சியை , உண்டாக்குவன .
* இத்தகைய கடாக்ஷங்களை , ஒரு , நொடிப்பொழுது , அடியேன் பால் , அருளினாலும் , குளிர்ந்து , இன்புறுவேன். வெயிலில் தவித்து , வாடியவனுக்கு , அமுதமாரி விழுந்தால் , தாபம் கழிந்து , இன்புறுவது , இயற்கை தானே !
[ மூன்று தாபங்கள் :
1. ஆத்யாத்மீகம் : சரீரத்தைப் , பற்றி வரும் , தலை நோய் , ஜல தோஷம் , முதலியனவும் , மனத்தைப் பற்றிவரும் , காமம் ,கோபம் , பயம் முதலியன .
2. ஆதி பௌதீகம் : மிருகம் , பக்ஷி , மனித வர்க்கம் முதலிய பூதங்களால் வருவன .
3. ஆதி தைவீகம் : குளிர் , சூடு , காற்று , மழை , முதலியவற்றால் , தெய்வீகமாக வருபவை .]