श्री स्तुति : 20 / 25
ஸ்ரீ ஸ்துதி :
பிராட்டியிடம் , பிரபத்தி செய்தால் , மோக்ஷம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
सेवे ! देवि ! त्रिदश , महिला , मौलि , माला , अर्चितम् , ते ,
सिद्धि , क्षेत्रम् , शमित , विपदाम् , संपदाम् , पाद , पद्मम् ।
यस्मिन् , ईषत् - नमित , शिरसो , यापयित्वा , शरीरम् ,
वर्तिष्यन्ते ? वितमसि , पदे ; वासुदेवस्य ; धन्या: ।।
ஸேவே ! தேவி ! த்ரிதச , மஹிளா, மௌளி , மாலா , அர்ச்சிதம் ; தே ,
ஸித்தி , க்*ஷேத்ரம் , சமித , விபதாம் , ஸம்பதாம் ; பாத , பத்மம் |
யஸ்மிந் , ஈஷத் - நமித , சிரஸோ ; யாபயித்வா , சரீரம் ;
வர்த்திஷ்யந்தே ? விதமஸி , பதே ; வாஸுதேவஸ்ய ; தந்யா: ||
देवि ....... பிராட்டியே !
यस्मिन् ..... எந்தத் திருவடியில் ;
धन्या: ...... புண்ய சாலிகள் ,
ईषत् ....... சிறிது ,
शिरसो ..... தலையை ,
नमित ....... வணங்கி ;
शरीरम् ..... சரீரத்தைக் ,
यापयित्वा .. கழித்து ;
वासुदेवस्य.. எம்பெருமானுடைய ,
वितमसि .... ப்ரக்ருதி , ஸம்பந்தம் இல்லாத ,
पदे .......... இடமான , ஶ்ரீ வைகுண்டத்தில் ;
वर्तिष्यन्ते ... இருப்பார்களோ ;
त्रिदश ....... தேவ ,
महिला ...... ஸ்த்ரீகள் ;
मौलि ........ முடியில் உள்ள ,
माला ........ மாலையால் ,
अर्चितम् ..... பூஜிக்கிறார்களோ ;
विपदाम् ..... ஆபத்துகள் ,
शमित ........ நீங்கிய ,
संपदाम् ...... செல்வங்களுக்கு ;
सिद्धि ........ விளை ,
क्षेत्रम् ........ நிலமோ ;
ते ............. உன்னுடைய ,
पाद ......... அந்த , பாதத்
पद्मम् ......... தாமரைகளை ,
सेवे ........... வணங்குகிறேன் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* பெரிய பிராட்டியே !
* தேவ ஸ்த்ரீகள் , வந்து , உன் , திருவடித் தாமரையை , வணங்குகின்றனர் . அப்பொழுது , அவர்கள் , முடியில் , அணிந்திருந்த , பூமாலைகள் , உன் , திருவடியில் , சேர்ந்து , அம்மாலைகளால் , உன் திருவடி , அர்ச்சிக்கப்பட்டது போல் , இருக்கும் .
* உன் திருவடி , அடியார்களுக்கு , வரும் , ஆபத்துகளைப் , போக்கிச் , சிறந்த செல்வங்களை , விளைவிக்கும் , பெருமை , உடையது.
* இத்தகைய , உன் திருவடிக் கமலத்தில் , செய்வதற்கு , மிக எளிதான , சரணாகதியைச் செய்தவர்கள் , மஹா பாக்யசாலிகள் ஆவர் .
* அவர்கள் , தங்களுக்குக் , கர்மத்தால் வந்த , இச் சரீரம் , கழிந்ததும் ; சுத்த ஸத்வ மயமான , ஶ்ரீ வைகுண்டம் , சேர்ந்து , உங்கள் இருவருக்கும் , நித்ய கைங்கர்யம் செய்யப் பெறுவர் . உன் திருவடியில் செய்யப்பட்ட , சிறு வணக்கம் , இத்தகைய , பெரும் பேற்றைக் , கொடுக்கும் .
* இவ்வகைப் பெருமை வாய்ந்த , உன் திருவடியை , நான் , வணங்குகிறேன் !