श्री स्तुति : 19 / 25
ஸ்ரீ ஸ்துதி :
இருவரையும் , சரண்டைந்தவர்கள் , பாக்யசாலிகள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
जात - आकांक्षा , जननि ! युवयो: , एक , सेवा - (अ)धिकारे ,
मायालीढम् , विभवम् , अखिलम् , मन्यमाना: , तृणाय |
प्रीत्यै , विष्णो: , तव च , कृतिन: , प्रीतिमन्तो , भजन्ते !
वेला , भंग , प्रशमन , फलम् , वैदिकम् , धर्म , सेतुम् ।।
ஜாத - ஆகாங்க்*ஷா ; ஜநநி ! யுவயோ: , ஏக , ஸேவா - (அ)திகாரே ;
மாயாலீடம் , விபவம் , அகிலம் , மந்யமாநா: , த்ருணாய ; |
ப்ரீத்யை , விஷ்ணோ: , தவ ச ; க்ருதிந: , ப்ரீதிமந்தோ , பஜந்தே !
வேலா , பங்க , ப்ரசமந , பலம் ; வைதிகம் , தர்ம , ஸேதும் ||
जननि .......... தாயே !
कृतिन: ........ புண்ய சாலிகள் ,
युवयो: ......... உங்கள் இருவரின் ,
एक ............ ஒரு சேர்த்தியில் ,
सेवा ............ கைங்கர்யம் செய்வதைப் ,
(अ)धिकारे .... பலனாய் பெறுவதில் ,
आकांक्षा ...... ஆசை ,
जात ............ உடையவர்களாயும் ;
मायालीढम् .... ப்ரக்ருதி ஸம்பந்தம் உள்ள ,
अखिलम् ....... எல்லா ,
विभवम् ......... செல்வத்தையும் ,
तृणाय ......... துரும்பு எனக் ,
मन्यमाना: ..... கருதுபவர்களாயும் ;
विष्णो: ........ விஷ்ணுவுடையவும் ,
तव च .......... உன்னுடையதுமான ,
प्रीत्यै .......... மகிழ்ச்சிக்காக ,
वेला ............ வரம்பைக் ,
भंग ............. குலைத்தல் ,
प्रशमन ......... இல்லாததைப் ,
फलम् .......... பலனாக , உடையதும் ;
वैदिकम् ....... வேதங்களில் , விதிக்கப்பட்ட ,
धर्म ............. தர்மம் , ஆகிய ,
सेतुम् ...........அணையை ;
प्रीतिमन्तो ..... மகிழ்ச்சியோடு ;
भजन्ते ......... காத்து வருகின்றனர் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* தாய் ஆகிய பெரிய பிராட்டியே !
* உங்கள் இருவரையும் சரணம் அடைந்தவர்கள் மஹா புண்ய சாலிகள் . அவர்களுக்கு , உங்கள் இருவர் , சேர்த்தியில் , ஒரே கைங்கர்யமாகச் செய்யவேண்டும் என்று , ஆசை பிறக்கிறது .
* ஆதலின் , பிரபஞ்சத்தில் வரும் , செல்வங்கள் , பெருமைகள் , ஆகிய , அனைத்தையும் , துரும்பாகக் , கருதித் , தள்ளுகின்றனர்.
* உங்கள் இவருடைய உகப்பையே , சிறந்த பயனாகக் , கொள்கின்றனர் .
* ஆதலின் , வேதங்களில் , விதிக்கப்பட்ட கர்மங்களை , வழுவற , மகிழ்ச்சியுடன் , செயது வருகின்றனர் .
* அவ்வாறு , உங்கள் மகிழ்ச்சியை அன்றி , வேறு பயன் கருதாது , செய்யும் , அந்த வைதிகக் கர்மங்கள் , ஓர் அணை போல் , நின்று , சாஸ்திரத்தில் கூறிய , வரையறையை , மீறாது , செய்கின்றன .