Announcement

Collapse
No announcement yet.

25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டியின் அருளால் , ப&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டியின் அருளால் , ப&

    ��




    ��


    श्री स्तुति : 17 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    பிராட்டியின் அருளால் , பெரும் பதவி , பெறலாம் !


    ��






    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��



    श्रेयस् , कामा: ; कमल , निलये ! चित्रम् , आम्नाय , वाचाम् ;

    चूडा - (आ)पीडम् ; तव , पद , युगम् ; चेतसा , धारयन्त: ; |

    छत्रच् - छाया , सुभग , शिरस: ; चामर , स्मेर , पार्श्वा: ;

    श्लाघा , शब्द , श्रवण , मुदिता: ; स्रग्विण: ; संचरन्ति ! ||


    ��



    ச்ரேயஸ் , காமா: ; கமல , நிலயே ! சித்ரம் , ஆம்னாய , வாசாம் ;

    சூடா - (ஆ)பீடம் ; தவ , பத , யுகம் ; சேதஸா , தாராயந்த: ; |

    சத்ரச் - சாயா , ஸுபக , சிரஸ: ; சாமர , ஸ்மேர , பார்ச்வா: ;

    ச்லாகா , சப்த , சரவண , முதிதா: ; ஸ்ரக்விண: ; ஸஞ்சரந்தி ! ||



    ��



    कमल ........ தாமரையில் ,

    निलये ........ உறையும் பிராட்டியே !

    श्रेयस् ........ பெரிய நலத்தை ,

    कामा: ....... விரும்புபவர்கள் ,

    आम्नाय ..... வேத ,

    वाचाम् ...... வாக்குகளின் ;

    चित्रम् ....... அற்புதமான ,

    चूडा ......... முடிக்கு ,

    आपीडम् .... அலங்காரமாய் , உள்ள ;

    तव .......... உன்னுடைய ,

    पद ......... திருவடி ,

    युगम् ....... இணையை ;

    चेतसा ..... .மனத்தால் ,

    धारयन्त: ... தரிப்பவர்கள் (அதனால்) ;

    छत्रच् ....... குடை ,.

    छाया ........ நிழலால்;

    सुभग ....... பெருமை பெற்ற ,

    शिरस: ......முடியினராய் ;

    पार्श्वा: ..... இரு பக்கங்களிலும் ,

    स्मेर ......... இனிமையாக ,

    चामर ....... சாமரம் வீசப்பெற்றவர்களாய் ;

    स्रग्विण: ... மாலை அணித்தவர்களாய் ;

    श्लाघा ..... புகழும் ,

    शब्द ........ சொற்களையே ,

    श्रवण ....... கேட்பவர்களாய் ;

    मुदिता: ..... மகிழ்ச்சியோடு ;

    संचरन्ति .... திரிகின்றனர் !


    ��


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :


    ��


    * பெரிய பிராட்டியே !

    * உன் திருவடிகளை வேதங்கள் , தம் முடிக்கு ஏற்ற , அற்புதமான அணிகளாகத் தரிக்கின்றன.
    அதாவது , வேதாந்தங்கள் , உன் திருவடிகளைப் , புகழ்ந்துகொண்டே , இருக்கின்றன.

    * உலகில் , மண்டலாதிபதியாகவோ , சக்ரவர்த்திகளாகவோ , பெரிய பிரபுக்களாகவோ , ஆக்கவேண்டுமென்று , விரும்புபவர்கள் , உன் திருவடிகளைத் , தன உள்ளத்தில் , த்யானிக்கின்றனர் .

    * உன் திருவருளால் , அவர்கள் , விரும்பும் ஸ்தானத்தைப் , பெறுகின்றனர்.

    * ஒற்றை வெண்குடை நிழலில் அமர்கின்றனர்

    * இரு மருங்கும் , சாமரம் வீசப்ப பெறுகின்றனர்.

    * சிறந்த மாலைகளை , அணிகின்றனர் .

    * தங்களைப் , பிறர் போற்றிப் பாடும் , புகழ்ச்சொற்களைக் கேட்டு , பெருமிதம் கொண்டு , உலகில் , திரிகின்றனர் .

    * அவர்களின் இந்தப் பெருமைகளுக்கு எல்லாம் காரணம் , உன் , திருவருளே !


    ��







    Last edited by sridharv1946; 01-06-18, 13:00.
Working...
X