श्री स्तुति : 16 / 25
ஸ்ரீ ஸ்துதி :
தேவியின் , த்ருஷ்டியால் , தனம் , தாரையாகப் , பொழியும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||
योग - आरम्भ , त्वरित , मनसो ; युष्मत् , ऐकान्त्य , युक्तम् ;
धर्मम् , प्राप्तुम् ; प्रथमम् , इह , ये ; धारयन्ते , धनायाम् ; ।
तेषाम , भूमे: ; धनपति , गृहात् ; अम्बरात् ; अम्बुधे: , वा ;
धारा , निर्यान्ति ! अधिकम् , अधिकम् ; वाञ्चितानाम् , वसूनाम् ।।
யோக - ஆரம்ப , த்வரித , மனஸோ ; யுஷ்மத் , ஐகாந்த்ய , யுக்தம் ;
தர்மம் , ப்ராப்தும் ; பிரதமம் - இஹ , யே ; தாரயந்தே , தநாயாம் ; ।
தேஷாம் , பூமே : ; தனபதி , க்ருஹாத் ; அம்பராத் ; அம்புதே: , வா ;
தாரா , நிர்யாந்தி ! அதிகம் , அதிகம் ; வாஞ்சிதானாம் , வஸூனாம் ।।
इह ............. இவ்வுலகில் ,
ये ............... எவர்கள் ,
योग ............ யோகங்களை ,
आरम्भ ......... ஆரம்பிப்பதில் ,
त्वरित .......... விரைந்த ,
मनसो .......... மனத்தைக்கொண்டு ;
युष्मत् .......... உங்கள் இருவரையும் ,
ऐकान्त्य ........ ஒரே பற்றாகக் ,
युक्तम् .......... கொண்டு ;
धर्मम् ............ யாகம் முதலிய தர்மத்தை ,
प्राप्तुम् .......... செய்வதற்காக ;
प्रथमम् .......... முதலில் ,
धनायाम् ......... செல்வத்தில் , ஆசையைக்
धारयन्ते ......... கொண்டுள்ளாரோ ;
तेषाम ............ அவர்களுக்கு ;
भूमे: .............. பூமியில் இருந்தோ ;
धनपति .......... குபேரனுடைய ,
गृहात् ............ மாளிகையில் , இருந்தோ ;
अम्बरात् ........ ஆகாயத்திலிருந்தோ ;
अम्बुधे: वा ...... கடலில் , இருந்தோ ;
वाञ्चितानाम् ... தாங்கள் விரும்பிய ,
वसूनाम .......... செல்வங்களின் ,
धारा ............. பெருக்குகள் ;
अधिकम् ........ மேலும் ,
अधिकम् ........ மேலும் ;
निर्यान्ति ......... எழுந்து , அடைகின்றன !
ஸ்ரீ வ,.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :
* பெரிய பிராட்டியே !
* இவ்வுலகில் சில பரமைகாந்திகள் , தாங்கள் மோக்ஷம் பெறுவதற்காகப் , பக்தி யோகத்தை விரைவில் , தொடங்க எண்ணுகின்றனர் . அதற்கு , ஞான யோகத்தையும் , அது சித்திப்பதற்கு , கர்ம யோகத்தையும் செய்யவேண்டும் !
* அதற்கு , நிறைய செல்வம் வேண்டும் . வேறு தெய்வத்திடம் , பரமைகாந்திகள் கேட்க மாட்டார்கள். உங்கள் இவரிடமே , பெற்றாக வேண்டும் .
* அந்தச் செல்வங்கள் , பிராட்டியின் , தாயான பூமியிடமிருந்து , கிடைக்கலாம் . (புதையல் போல்)
* அல்லது , பிராட்டியால் , செல்வத்துக்கு அதிபதியாக நியமிக்கப்பட்ட , குபேரனிடம் இருந்து , கிடைக்கலாம் . (கௌத்ஸருக்கும் , ரகு மஹாராஜனுக்கும் , கிடைத்தது போல்)
* அல்லது , பிராட்டியின் நாயகனான , விஷ்ணுவின் இருப்பிடமான விஷ்ணுபதம் எனப்படும் ,
ஆகாசத்திலிருந்து , செல்வம் , பொழியலாம் (குசேலருக்கு வந்தது போல்)
* அல்லது , பிராட்டியின் தந்தையான , கடலில் இருந்த்து , கிடைக்கலாம் .( வாணிபம் அல்லது வேறு வழியில்)
* இன்ன இடத்திலிருந்து வரும் என்று , கூற முடியாதபடி செல்வம் , உங்கள் இருவருடைய திருவருளால் , அவர்கள் விரும்பும் செல்வங்கள் , அவர்கள் , விருப்பத்துக்கு , அதிகமாகவே , மிக மிகப் பெருக்கு எடுத்து , ஓடும் !
[ ஸ்ரீ தேசிகன் வாழ் நாளில் , தான் மணம் புரிதற்கு , செல்வம் இல்லாது , ஏங்கி நின்ற , ஒரு , ப்ரஹ்மச்சாரி , ஸ்வாமியிடம் வந்து , செல்வத்தை , யாசித்தான் . ஸ்வாமியிடம் செல்வம் ஏது ? பிராட்டியின் சந்நிதிக்கு , அந்த ப்ரஹ்மச்சாரியை , அழைத்துக் கொண்டு , எழுந்தருளி, இந்த ஸ்தோத்ரத்தைப் , பிராட்டி , திருமுன்பே , விண்ணப்பம் செய்தார்.
இந்த 16வது , ஸ்லோகத்தை , ஸ்வாமி , அநுஸந்திக்கும்போது , ஆகாயத்தினின்று , செல்வம் பொன் மாரியாகக் கொட்டியது. இத்தனை செல்வத்தை , அள்ளி எடுக்க முடியாமல் , ப்ரஹ்மச்சாரி , திணறினான் . பின் , அவன் வேண்டிய அளவு செல்வத்தை எடுத்துக் கொண்டு , இல்லறம் புகுந்தான் ]