श्री स्तुति : 09 / 25
ஸ்ரீ ஸ்துதி :
நீங்கள் இருவருமே , பர தேவதை !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
त्वाम् - एव - आहु: ; कतिचित् - अपरे , त्वत् , प्रियम् , लोक - नाथम् ;
किम् , तै: , अन्त : , कलह , मलिनै: ? किञ्चित् - उत्तीर्य , मग्नै: |
त्वत् , संप्रीत्यै , विहरति , हरौ , सम्मुखीनाम् , श्रुतीनाम् ,
भाव - आरुढौ , भगवति ! युवाम् , दम्पती , दैवतम् न: ||
த்வாம் - ஏவ - ஆஹு: , கதிசித் - அபரே , த்வத் , ப்ரியம் , லோக - நாதம் ;
கிம் , தை : , அந்த: , கலஹ , மலிநை : , கிஞ்சித் - உத்தீர்ய , மக்னை : |
த்வத் , ஸம்ப்ரீத்யை , விஹரதி , ஹரௌ ,ஸம்முகீனாம் , ச்ருதீநாம் ,
பாவ - ஆரூடௌ ; பகவதி ! யுவாம் , தம்பதி , தைவதம் , ந: ||
भगवति ...... பிராட்டியே !
कतिचित् .... சிலர் ,
त्वाम् एव ..... உன்னையே , உலகுக்குத் , தலைவி என்றும் ;
अपरे .......... வேறு சிலர் ,
त्वत् ........... உன்னுடைய ,
प्रियम् ......... நாதனையே ,
लोक .......... உலகுக்குத் ,
नाथम् ......... தலைவன் ஆகவும் ,
आहु: .......... கூறுகின்றனர் ;
अन्त : ......... ஒருவருக்கு , ஒருவர் ,
कलह .......... வழக்கு ஆடுவதால் ,
मालिनै: ....... கலங்கி ,
किञ्चित् ...... சிறிது ,
उत्तीर्य .......... மேலே , வந்து ,
मग्नै: ........... முழுகும் ,
तै: .............. அவர்களால் ,
किम् .......... என்ன பயன் ?
त्वत् ............ உன்னுடைய ,
संप्रीत्यै ......... மகிழ்ச்சிக்காக ,
विहरति ........ லீலைகள் , புரியும் ,
हरौ ............. எம்பெருமானையே ,
सम्मुखीनाम् ... நோக்கம் கொண்டு , நிற்கின்ற ,
श्रुतीनाम् ....... வேதங்களின் ,
भाव ............ கருத்தில் ,
आरुडौ ........ ஏறிய ,
दम्पती ......... கணவன் , மனைவி ஆகிய ,
युवाम् ......... நீங்கள் இருவருமே ,
न: .............. எங்களுக்கு ,
दैवतम् ........ பரதேவதையாக உள்ளீர்கள் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* பெரிய பிராட்டியே !
* உலகில் , பல மதங்களும் , அவற்றுக்கு , வெவ்வேறு நோக்கங்களும் , உள்ளன:
. சிலர் நீயே உலகுக்கு ஈஸ்வரி எனப் பேசுகின்றனர்.
. வேறு சிலர் , நீயும் , நாராயணனும் , ஒரே ஆத்மா தான். சரீரம் மட்டும் இரண்டு என்கின்றனர் .
. வேறு சிலர் , எம்பெருமானே ,லக்ஷ்மீ . அவளுக்குத் தனி உருவம் இல்லை என்கின்றனர்.
. வேறு சிலர் , எம்பெருமான் , மோஹினியாய் தானே , பெண் உருக்கொண்டது போல் , அவ்வப்போது , லக்ஷ்மீதேவியைப் , படைத்துக்கொள்வதாகக் கூறுவர்.
. வேறு சிலர் , எம்பெருமான் , சாஸ்வதமாகவே, லக்ஷ்மீ என்ற பெயருடன் பெண் வடிவு எடுத்துக் கொள்வதாகக் கூறுவர் .
. இவ்வாறு , இவர்கள் அனைவரும் , உன்னையே , சர்வேஸ்வரி என வழக்கு ஆடுகின்றனர்.
. மற்றோர் வகுப்பினர் , எம்பெருமானே , உலகுக்குத் தலைவன். உனக்கு , ஈஸ்வரத் தன்மை இல்லை என்கின்றனர்.
* இவர்களை , நாம் கண்டிக்க வேண்டாம். இவர்கள் ஒருவர்க்கு ஒருவர் வாதாடி , மனம் கலங்கி . ஓய்ந்து , போகின்றனர். சிலர் சாஸ்த்ரங்களைத் தழுவி , எதோ கூற முன் வந்து , முடியாமல் , கலங்கி விடுகின்றனர் . இவர்களால் நமக்கு ஆக வேண்டியது ஏதும் இல்லை.
* திருக் கல்யாண குணங்கள் நிறைந்த பிராட்டியே ! எங்கள் சித்தாந்தம் வேறு. உன் நாயகனான எம்பெருமான் , உனது மகிழ்ச்சிக்காகவே , உலகைப் படைத்தல் முதலிய செயகைகளைச் செய்கின்றான்.
* வேதத்தின் உட்கருத்தில் , நீங்கள் இருவருமே , ஏறி , அமர்ந்துள்ளீர்கள். நீங்கள் இருவருமே எங்களுக்குப் பரதேவதை. உங்கள் இருவரையுமே உபாயமாகக் கொண்டு , பிரபத்தி செய்கிறோம் . அதன் பயனாக , மோக்ஷத்தில், உங்கள் இருவருக்குமே , கைங்கர்யம் , செய்யவேண்டும். நீங்கள் இருவருமே , உபாயமாகவும் , பலனாகவும் , இருக்கிறீர்கள் .