श्री स्तुति : 07 / 25
ஸ்ரீ ஸ்துதி :
ஶ்ரீவைகுண்டத்தில் , சதுரங்கம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय ,
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
पशयन्तीषु , श्रुतिषु ; परित: , सूरि , ब्रुन्देन , सार्धम् ;
मध्ये , कृत्य , त्रिगुण , फलकम् ; निर्मित , स्थान , भेदम् ; |
विश्व - अधीश , प्रणयिनि ! सदा ; विभ्रम , ध्यूत , वृत्तौ ;
ब्रह्म - ईश - आद्या ; दधति ! युवयो: - अक्षसार , प्रचारम् ||
பச்யந்தீஷு , ச்ருதிஷு ; பரித: , ஸூரி , ப்ருந்தேன , ஸார்த்தம் ;
மத்யே , க்ருத்ய , த்ரிகுண , பலகம் ; நிர்மித , ஸ்த்தாந , பேதம் ; |
விச்வ - அதீச , ப்ரணயிநி ! ஸதா ; விப்ரம , த்யூத , வ்ருத்தௌ ;
ப்ரஹ்ம - ஈச - ஆத்யா ; தததி ! யுவயோ: - அக்ஷஸார , ப்ரசாரம் ||
विश्व ........ உலக ,
अधीश ...... நாயகனுடைய ,
प्रणयिनि .... காதல் மனைவியே !
श्रुतिषु ....... வேதங்கள் ;
सूरि .......... நித்ய ஸூரிகளின் ,
ब्रुन्देन ........ குழாத்துடன் ,
सार्धम् ....... கூடி ,
परित: ....... நாற்புரத்திலும் ,
सदा ......... எப்போதும் ,
पश्यन्तीषु ... பார்த்துக் கொண்டிருக்கும் போது ;
भेदम् ......... வெவ்வேறு ,
स्थान ........ இடங்களில் ,
निर्मित ....... அமைக்கப்பட்ட ;
त्रि गुण ....... (ஸத்வம் , ரஜஸ் , தமஸ்) எனும் , மூன்று குணங்களை உடைய ,
फलकम् ...... ப்ரக்ருதி எனும் , பலகையை ,
मध्ये .......... நடுவில் ,
कृत्य .......... வைத்து , நடத்தும் ;
युवयो: ........ உங்களுடைய ,
विभ्रम ......... விளையாட்டான ,
ध्यूत ........... சதுரங்க ,
वृत्तौ ........... ஆட்டத்தில் ;
ब्रह्म ............ பிரம்மா ,
ईश ............ சிவன்
आद्या .......... முதலிய தேவர்கள் ,
अक्षसार ....... (அவர்கள் கர்மங்கள் ஆகிய) பகடைக் காய்களுக்குப் ஏற்ப
प्रचारम् ........ அவரகளது , இடத்தை ,
दधति .......... பெறுகின்றனர் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:
* பெரிய பிராட்டியே !
* நீயும் , உன்னிடம் பெரும் காதல் கொண்ட , உலக நாயகனும் சேர்ந்து , பொழுது போக்கிற்காக , விசித்திரமான ஒரு சதுரங்கம் , உல்லாசமாக , ஆடிக்கொண்டே இருக்கிறீர்கள் .
* மூலப்ரக்ருதியே , சதுரங்கப் பலகை. ஸத்வம் (வெண்மை) , ரஜஸ்(சிகப்பு) , தமஸ் (கருப்பு) எனும் மூன்று குணங்களே அந்தப் பலகையில் உள்ள கட்டங்களின் நிறங்கள் ஆகும்.
* ப்ரம்ம லோகம் , சிவ லோகம் முதலிய லோகங்களே , காய்களைப் போடும் இடங்கள் ஆகும். பிரம்மன் , சிவன் முதலிய தேவர்கள் , தாம் , நீங்கள் வைக்கும் காய்கள் ஆகும்.
* அவர்களுடைய கர்மங்கள் ஆகிய , பகடைக்காய்களை , உருட்டிப் பார்த்து , அவற்றுக்கு ஏற்றவாறு , தேவர்கள் ஆகிய காய்களை , அந்தந்த உலகங்கள் ஆகிய கட்டங்களில் போட்டு , எப்போதும் உல்லாசமாய் விளையாடுகிறீர்கள் .
* உங்கள் ஆட்டத்தைக் கண்டு மகிழ்பவர்கள் , வேதங்களும் , நித்ய ஸூரிகளும் . உங்கள் செயல் வேதங்களைத் தழுவியதாகும் .
* இச்செயலை , நீங்கள் இருவரும் , ஒரு மனப்பட்டுச் செய்கிறீர்கள் .