श्री स्तुति : 06 / 25
ஸ்ரீ ஸ்துதி :
பிரபத்தியில் இருவருக்குமே உரிமை உண்டு !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
उद्देश्यत्वम् , जननि ! भजतो: - उज्झित - उपाधि , गन्धम् ;
प्रत्यक् - रूपे , हविषि , युवयो: - एक , शेषित्व , योगात् ; ।
पद्मे ! पत्यु: - तव च , निगमै: - नित्यम् - अन्विष्यमाणो ;
न - अवच्छेदम् , भजति ! महिमा , नर्तयन् , मानसम् , न: ।।
உத்தேச்யத்வம் , ஜநநி , பஜதோ: - உஜ்ஜித - உபாதி , கந்தம் ;
ப்ரத்யக் - ரூபே , ஹவிஷி , யுவயோ: - ஏக , சேஷித்வ, யோகாத் ; |
பத்மே ! பத்யு: - தவ ச , நிகமை: - நித்யம் - அன்விஷ்யமாணோ ;
ந - அவச்சேதம் , பஜதி ! மஹிமா , நர்த்தயன் , மாநஸம் , ந: ||
जननि ............ தாய் ஆகிய
पद्मे ............ பெரிய பிராட்டியே !
प्रत्यक् रूपे ...... ஜீவாத்மா ஆகிய ,
हविषि ........... ஹவிஸைப் ,
उद्देश्यत्वम् ....... பெறுவதற்கு ,
उपाधि ........... காரணம் ,
उज्झित गन्धम् ...எதுவும் இல்லாமல் ,
भजतो: ......... அதைப் பெறுகிற ,
युवयो: ......... உங்கள் இருவருக்கும் ,
शेषित्व ......... உரிமை ,
एक ............. ஒன்றாகவே ,
योगात् ......... இருப்பதால் ;
पत्यु: ........... உன் நாயகனான எம்பெருமானுக்கும் ,
तव च ......... உனக்கும் ,
महिमा ......... உள்ள பெருமை ,
निगमै: ........ வேதங்களினால்
नित्यम् ......... எப்போதும் ,
अन्विष्यमाण: ...தேடப்பட்டுக்கொண்டும் ;
न : ............ எங்களுடைய ,
मानसम् ....... உள்ளத்தை ,
नर्तयन् ......... நடனம் ஆடச் செய்து கொண்டும் ;
अवच्छेदम् ...... எல்லையை ,
न भजति ....... அடைவதில்லை !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* உலகுக்குத் தாயாய் விளங்கும் , பெரிய பிராட்டியே !
* உலகில் செய்யப்படும் வேள்விகளில் , நெய் , புரோடாஸம் முதலிய ஹவிஸ்களை , அக்னி , இந்திரன் , சூர்யன் முதலிய தேவர்களுக்குக் கொடுக்கும் கருத்துடன் , அக்னியில் , ஹோமம் செய்கிறார்கள் . அந்தத் தேவன் உத்தேசியன் (ஏற்றுக்கொள்ளத் தகுதியானவன்) எனப்படுகிறான் . அவன் அந்த ஹவிஸைப் பெற்று மகிழ்கிறான் .
* அந்த ஹவிஸை "சேஷம்" என்றும் , அதைப் பெற்று மகிழும் , அந்த தேவனை "சேஷி" என்றும் கூறுவது முறை .
* பிரபத்தி என்பதும் ஒரு வேள்வியே ஆகும். இதில் ஆத்மா எம்பெருமானிடம் ஸமர்ப்பிக்கப் படும் ஹவிஸ் ஆகிறது. இதை ஏற்றுக்கொள்ளத் தகுதியான உத்தேச்யனும் , இதை பெற்று மகிழ்கின்ற சேஷியும் , எம்பெருமானே ஆவான் .
* அக்னி , இந்திரன் முதலிய தேவர்களும் , எங்களை போல ஜீவாத்மாவே ஆவர். அவர்கள் முன்னால் செய்த , நற்கர்மங்களால் (உபாதி ) மட்டுமே , அந்தப் பதவியைப் பெற்று , அந்த , ஹவிஸைப் பெறும் தகுதியைப் பெறுகின்றனர்.
* பிரபத்தி வேள்வியில் , எங்கள் ஆத்மா ஆகிற ஹவிஸ் , இயற்கையாகவே , எம்பெருமானுக்கு , உடைமை . இதை அறியாதவன் , எம்பெருமான் செல்வத்தைத் திருடியவன் ஆகும். உடையவனான அவனுக்கே , ஆத்மா எனும் ஹவிஸை ஸமர்ப்பிப்பதால் , அவன் இயற்கையாகவே "உத்தேச்யன்" ஆகிறான்.
* ஜீவர்களாகிய நாங்கள் , இயற்கையாகவே , அவனுக்கு அடிமை ஆகவும் , அவன் , எங்களை அடிமை கொண்டு , மகிழ வேண்டியவனாகவும் இருப்பதால் , அவன் இயற்கையாகவே "சேஷன்" ஆகிறான். அந்தத் தன்மைகள் , எம்பெருமானது , பெருமையைக் காட்டுகின்றன.
* தாயே ! அந்த இரண்டு தன்மைகளும் , அவனுக்கு மட்டும் உரியது அன்று. உன்னுடன் சேர்ந்தே , அவனுக்கு , அது உள்ளது.
* ஆகவே , பிரபத்தி எனும் வேள்வியில் , நீங்கள் இருவரும் சேர்ந்தே ,ஒரே உத்தேசியர் ஆகவும் , ஒரே சேஷி ஆகவும் ஆகிறீர்கள் . ஒப்பற்ற இந்த பெருமை அளவிட முடியாதது .
* வேதங்கள் இந்தப் பெருமையை , சிறிதாவது புகழ வேண்டும் என் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றன. இதை நினைக்கும்போது எங்கள் உள்ளம் , பெரு மகிழ்ச்சி பொங்கக் கூத்தாடுகிறது !