Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 05 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 விமல மனத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 05 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 விமல மனத

    ��


    श्री स्तुति : 05 / 25
    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    விமல மனதில் அமரும் , அமலனும் , கமலையும் !


    ��





    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:












    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    निष्प्रत्रयूह , प्रणय , घटितम् ; देवि ! नित्य , अनपायम् ;

    विष्णु: , त्वम् , च - इति ; अनवधि , गुणम् ; द्वन्द्वम् ; अन्योन्य , लक्ष्यम् ; |

    शेष: ; चित्तम् , विमल , मनसाम् ; मौळय: च , श्रुतीनाम् ;

    सम्पद्यन्ते ! विहरण , विधौ ; यस्य , शय्या , विशेषा: ||


    நிஷ்ப்ரத்யூஹ , ப்ரணய , கடிதம் ; தேவி ! நித்ய , அநபாயம் ;

    விஷ்ணு: , த்வம் , ச - இதி ; அனவதி , குணம் ; த்வந்த்வம் ; அன்யோன்ய , லக்ஷ்யம் ; |

    சேஷ: ; சித்தம் , விமல , மனஸாம் ; மௌளய: ச , ஸ்ருதீநாம் ;

    ஸம்பத்யந்தே ! விஹரண , விதௌ ; யஸ்ய , சய்யா , விசேஷா : ||

    देवि .......... பெரிய பிராட்டியே !

    निष्प्रत्रयूह ... இடைவிடாத ,

    प्रणय ........ அன்பால்,

    घटितम् ...... பிணைக்கப்பட்டவர்களும் ;

    नित्य ......... எப்போதும் ,

    अनपायम् .... பிரியாதவர்களும் ;

    अनवधि ...... எல்லை இல்லாத ,

    गुणम् ......... குணங்களை உடையவர்களும் ;

    विष्णु: ........ எம்பெருமானும் ,

    त्वम् च ........ நீயும்,

    इति ........... ஆகிய ,

    द्वन्द्वम् ......... இரட்டை ;

    अन्योन्य ...... ஒன்றை , ஒன்று ,

    लक्ष्यम् ....... அறியக்கூடியதாக , உள்ளது ;

    यस्य .......... எந்த இரட்டைக்கு

    विहरण ....... சந்தோஷமாய் ,

    विधौ .......... இருப்பதில் ,

    शेष: .......... ஆதிசேஷனும் ;

    विमल ........ தூய்மையான ,


    मनसाम् ....... மனமுடைய யோகிகளின் ,

    चित्तम् ......... உள்ளமும் ;

    श्रुतीनाम् ...... வேதங்களின்,

    मौळय: च .... முடிகளான , வேதந்தங்களும் ;



    विशेषा: ...... சிறந்த

    शय्या ......... படுக்கைகளாக ,

    सम्पद्यन्ते .... அமைந்துள்ளனவோ !

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * பெரிய பிராட்டியே !

    * நீயும் , உன் நாயகனான எம்பெருமானும் , எப்பொழுதும் , கூடியே , நின்று , ஓப்பற்ற இணையாய் , உள்ளீர்கள். இந்த இணையில் , ஒருவருக்கு , ஒருவர் , கொண்டுள்ள அன்பு , எந்நாளும் , சிறிதும் , குறைவதில்லை.

    * இந்த இணை , எந்நாளும் , அழிவற்றது. ஒருவர் , மற்றொருவரைப் , புரிவதில்லை!

    * இருவருடைய , திருக் கல்யாண குணங்களுக்கும் , எல்லை இல்லை.

    * இந்த இணையில் , உங்கள் இருவரையும் , அறிய வேண்டும் என்றால், "ச்ரிய: பதி" என்று , உன்னைக் கொண்டு , எம்பெருமானையும் , "விஷ்ணு பத்நீ" என்று , அவனைக் கொண்டு , உன்னையும் , அறிய வேண்டும் .

    * நீங்கள் இருவரும் , உல்லாசமாகப் , பள்ளி கொள்ளுவதற்கு , உரிய இடங்கள் மூன்று .
    அவையாவன :

    . திரு அநந்தாழ்வான் மீது , எப்பொழுதும் , பள்ளி கொண்டுள்ளீர்கள்.

    . தூய மனம் கொண்ட, யோகிகள் , எப்பொழுதும் , உங்கள் இருவரையும் , உள்ளத்தில் , கொண்டு , தியானிக்கிறார்கள் .

    . வேதாந்தங்களுக்கு முடியான , வேதாந்த சாஸ்திரங்கள் அனைத்தும் , உங்கள் , பெருமையையே , பேசிப் , புகழ்கின்றன .

    * இப்படி , மேற்கூறிய , மூன்றும் , உங்களுக்குத் , திருப்பள்ளி கொள்ளும் , சிறந்த , இடங்களாய் , உள்ளன.

    ��



Working...
X