श्री स्तुति : 04 / 25
ஸ்ரீ ஸ்துதி :
எம்பெருமானுக்கு , உன் திருவடி , செம்பஞ்சுக் குழம்பே , அடையாளம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
यत् , संकल्पात् , भवति ; कमले ! यत्र , देहिनि - अमीषाम् ,
जन्म , स्थेम , प्रलय , रचना , जंगम - अजंगमानाम् , |
तत् , कल्याणम् ; किमपि ; यमिनाम् - एक , लक्ष्यम् , समाधौ ;
पूर्णम् ; तेज : ; स्फुरति ! भवती , पाद , लाक्षा , रस - अंकम् ।।
யத் , ஸங்கல்பாத் , பவதி ; கமலே ! யத்ர , தேஹிநி - அமீஷாம் ,
ஜந்ம , ஸ்தேம , ப்ரளய , ரசநா , ஜங்கம - அஜங்கமாநாம் ; |
தத் , கல்யாணம் ; கிமபி ; யமிநாம் - ஏக , லக்ஷ்யம் , ஸமாதௌ ;
பூர்ணம் ; தேஜ: ; ஸ்புரதி ! பவதீ , பாத , லாக்ஷா , ரஸ - அங்கம் ||
कमले .......... பெரிய பிராட்டியே !
देहिनि .......... உலகத்தைச் , சரீரமாகக் கொண்ட ,
यत्र ..............எந்தப் பரமாத்மாவிடத்தில் ,
अमीषाम् ....... இந்த ,
जंगम ........... அசையும் ,
अजंगमानाम् ... அசையாத வஸ்துகளின் ;
जन्म ............ பிறப்பு ,
स्थेम ............ நிலைத்து , நிற்றல் ,
प्रलय ........... அழிவு ஆகிய
रचना ........... செயல்கள் ;
यत् ..............யாருடைய ,
संकल्पात् ...... ஸங்கல்பத்தால் ,
भवति ........... நடை பெறுகிறதோ ;
तत् .............. அந்த ,
कल्याणम् ...... மங்களமானதும் ;
यमिनाम् ........ யோகிகளுக்கு ,
समाधौ ......... தியானத்தில் ,
एक ............. ஒரே ,
लक्ष्यम् ......... இலக்காக உள்ளதும் ;
पूर्णम् ........... எங்கும் , நிறைந்திருப்பதும் ;
किमपि ......... அற்புதமான ,
तेज : ........... அந்த (எம்பெருமான் எனும்) ஒளி ,
भवती ........... உன்னுடைய
पाद ............. திருவடிகளின் ,
लाक्षा ........... செம்பஞ்சுக்
रस .............. குழம்பை ,
अंकम् ........... சின்னமாகக் கொண்டு ,
स्फुरति ........ பிரகாசிக்கிறது !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* பெரிய பிராட்டியே !
* உன் நாயகனான எம்பெருமான் , சேதனம் , அசேதனம் ஆகிய ஸகல வஸ்துக்களையும் , தனக்கு , சரீரமாகக் கொண்டு , தான் ஆத்மாவாக நிற்பவன் .
* ஸ்தாவரம் , ஜங்கமம் , ஆகிய பிரபஞ்சம் முழுவதின் , படைப்பு , காப்பு , அழிப்பு ஆகிய செயல்கள் அனைத்தும் , அவனது ஸங்கல்பத்தால் நிகழ்வனவே
* தான் மங்கள ஸ்வரூபனாய் இருந்து , மங்களமான வஸ்துக்களுக்கு எல்லாம் , மங்கலத்தன்மையை அளிப்பவனும் , அவனே .
* யோகியர் , தம் இந்திரியங்களை அடக்கி , அவனையே , இலக்காகக் கொண்டு ,தம் உள்ளத்தால் , த்யானிக்கின்றனர் .
* ஸ்வரூபத்தாலும் , குணத்தாலும் பரிபூர்ணனாய் , எங்கும் நிறைந்து , நிற்பவன் அவனே .
* இவ்வாறு , அதி அற்புதமாய் , தேஜோ வடிவமாய் , விளங்கும் எம்பெருமானது , திருமார்பில் , நீ , கணமும் , பிரியாது , உறைகின்றாய் .
* உன் திருவடிகளில் பூசிய செம்பஞ்சுக் குழம்பு , அவன் , திரு மார்பில் படுவதால் , அது , அழகிய சின்னமாய் நின்று , அவன் , திருமேனியையே , அழகுறச் செய்கிறது.
* அவனது இத்தனைப் பெருமைகளுக்கும் , உன் திருவடிச் சின்னமே காரணம் ஆகிறது . இந்தச் சின்னங்களைக் கண்டு தானே , அவனைப் பரம்பொருளாக , வேதாந்தங்களும் , பேசுகின்றன .
*