Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 03/ 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 துதிப்பĪ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 03/ 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 துதிப்பĪ

    ��


    श्री स्तुति : 03/ 25
    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��


    துதிப்பதில் உள்ள துடிப்பே , மகிழ்ச்சி , தரும் !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    स्तोतव्यत्वम् , दिशति ! भवती , देहिभि: , स्तूयमाना ,

    ताम् , एव , त्वाम् , अनितर , गति: , स्तोतुम् , आशंसमान: ।

    सिद्ध - आरंभ : , सकल , भुवन , श्लाघनीयो , भवेयम् !

    सेवा - अपेक्षा , तव , चरणयो: , श्रेयसे , कस्य , न स्यात् ? ।।

    ��


    ஸ்தோதவ்யத்வம் , திசதி ! பவதீ ; தேஹிபி: , ஸ்தூயமாநா ,

    தாம் , ஏவ , த்வாம் , அநிதர , கதி: , ஸ்தோதும் , ஆசம்ஸமாந: |

    ஸித்த - ஆரம்ப: , ஸகல , புவந , ச்லாகநீயோ , பவேயம் !

    ஸேவா - அபேக்*ஷா , தவ , சரணயோ: , ச்ரேயஸே , கஸ்ய , ந ஸ்யாத் ? ||

    ��


    भवती ............. நீ ,

    देहिभि: ........... பிராணிகளால் ,

    स्तूयमाना ........ துதிக்கப் படுபவளாய் ,

    स्तोतव्यत्वम् ..... பிறரால் , போற்றப்படும் , தன்மையை ,

    दिशति ........... அவர்களுக்கும் கொடுக்கின்றாய் !

    ताम् .............. அத் தகைய ,

    त्वाम् एव ......... உன்னையே ;

    अनितर गति: .... வேறு , புகல் அற்ற , அடியேன் ,

    स्तोतुम् ........... துதிப்பதற்கு ,

    आशंसमान: ..... விருப்பத்துடன் ,

    सिद्ध आरंभ : .... என் முயற்சி , பலித்து ,

    सकल .......... எல்லா ,

    भुवन ............ உலகமும் ,

    श्लाघनीयो ..... புகழ்வதற்கு உரியவனாக ,

    भवेयम् .......... ஆவேன் !

    श्रेयसे .......... நன்மையை , அடைவதற்காக ,

    तव .............. உன்னுடைய ,

    चरणयो: ....... திருவடிகளில் ,

    सेवा ............ தொண்டு செய்யும் ,

    अपेक्षा ......... ஆசை ,

    कस्य .......... யாருக்குத்தான் ,

    न स्यात् ........இருக்காது ?


    ��
    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    ��

    * பெரிய பிராட்டியே !

    * உன்னை , பக்தியுடன் , சேதனர்கள் , துதித்தால் , அவர்களின் , அந்த , நற்செயலைக் கண்டு , உலகம் , மகிழ்ந்து , அவர்களைப் , புகழ்ந்து , போற்றுகிறது. அவர்களுக்கு, அந்தப் பெருமையை , நீ , தான் , அளிக்கிறாய் .

    * அடியேனுக்கு , உன்னை அன்றி , வேறு , புகலிடம் , இல்லை. பெருமை மிக்க , உன்னை , நானும் துதிக்க வேண்டும் என்று , பார்க்கின்றேன் . இந்த முயற்சி , நன்கு , முடிவுறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    * நான் , உன் பெருமையைப் போற்றிப் புகழ்வதைக் கண்டு , உலகம் முழுதும் , என் செயலை , மெச்சிக் , கொண்டாடும் பெருமையை , அடைவேன். இதில் வியப்பு எதுவும் இல்லை.

    * உன் திருவடிகளைப் போற்றித் , தொண்டு செய்ய விருப்பம் கொண்டுள்ள , யாருக்குத் தான் , நன்மை வராது ? ஆதலால் , அடியேனும் , நன்மை , பெறுவேன் .

    * உன்னைத் துதிக்க , அடியேனுக்கு , சக்தி இல்லையே ஆயினும் , துதிப்பதில் , எனக்குள்ள , விருப்பமே , எனக்கு , சக்தியை அளித்துத் , துதியை , முடித்து , அடியேனுக்கு , நன்மை , விளைவிக்கும் .







    Last edited by sridharv1946; 17-05-18, 09:14.
Working...
X