Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 02 / 25 🙏 ஶ்ரீ ஸ்துதி : 🙏 தேவி ! சிற&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 02 / 25 🙏 ஶ்ரீ ஸ்துதி : 🙏 தேவி ! சிற&

    ��


    श्री स्तुति : 02 / 25


    ��


    ஶ்ரீ ஸ்துதி :


    ��


    தேவி ! சிற்றறிவால் , உன்னைத் துதிப்பது , எப்படி ?




    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    आविर्भाव: , कलश , जलधौ - अध्वरे , वा - अपि , यस्या: ;

    स्थानम् , यस्या: , सरसिज , वनम् , विष्णु , वक्ष: स्थलम् , वा ; ।

    भूमा , यस्या , भुवनम् - अखिलम् , देवि ! दिव्यम् ,पदम् , वा ;

    स्तोक , प्रझै: - अनवधि , गुणा: ; स्तूयसे , सा , कथम् , त्वम् ?॥

    ��

    ஆவிர்பாவ: , கலச , ஜலதௌ - அத்வரே , வா -அபி , யஸ்யா: ;

    ஸ்த்தாநம் , யஸ்யா: , ஸரஸிஜ , வநம் , விஷ்ணு , வக்ஷ: ஸ்த்தலம் , வா ; |

    பூமா , யஸ்யா , புவநம் - அகிலம் , தேவி ! திவ்யம் , பதம் , வா ;

    ஸ்தோக , ப்ரஞை: - அநவதி , குணா: , ஸ்தூயஸே , ஸா , கதம் , த்வம் ? ||

    ��


    देवि ................... பெரிய பிராட்டியே !

    यस्या: ................ எவளுடைய ,

    आविर्भाव: ............ அவதாரம் ,

    कलश जलधौ ........ திருப் பாற்கடலிலும் ,

    अध्वरे वा अपि ........ யாக சாலையிலுமோ ;

    यस्या: ................. எவளுடைய ,

    स्थानम् ................ இருப்பிடம் ,

    सरसिज वनम् ......... தாமரைக் காடும் ,

    विष्णु .................. எம்பெருமானுடைய ,

    वक्ष: स्थलम् वा ...... திரு மார்புமோ ;

    यस्या: .................. எவளுடைய ,

    भूमा .................... செல்வம் ,

    भुवनम् अखिलम् ..... உலகம் முழுவதும் ,

    दिव्यम् पदम् वा ....... ஶ்ரீ வைகுண்டமுமோ ;

    अनवधि ................ எல்லை இல்லாத ,

    गुणा: ................... குணங்களை உடைய ,

    सा त्वम् ................ அத்தகைய நீ ,

    स्तोक .................. சிறிதே ,

    प्रझै: ................... அறிவுள்ள (என் போன்ற) வர்களால்

    कथम् .................. எப்படி

    स्तूयसे ................. துதிக்கப் படுவாய் ?

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��

    * பெரிய பிராட்டியே !

    * உன்னைத் துதிக்க முற்படுகின்றேனே ! உன் பெருமையை , ஆராய்ந்தால் , நான் செய்வது , முறையா ?

    * உன் பிறப்பு என்ன ! முதலில், திருப் பாற்கடலில் தோன்றினாய் . பின் , சீதையாக , அவதரித்த போது , ஜநகன் , வேள்விச் சாலையில் , தோன்றினாய். இந்த இரண்டு தோற்றங்களிலும் , கர்ப்ப வாஸம், உனக்கு , இல்லாததால் , உன் நாயகனை விட , மேம்பட்டு , விளங்குகின்றாய்

    * நீ வாழும் இடம் எத்தகையது ! அது , இயற்கைத் தூய்மை , இயற்கை மணம் முதலிய , சிறப்பு பெற்ற , தாமரைக்காடும் , ஸர்வேச்வரனது , திரு மார்பும். இந்தப் பெருமை , வேறு , யாருக்கேனும் , உண்டா ?

    * உன் செல்வம் எத்தகையது ! லீலா விபூதி எனப்படும் , இந்தப், பிரபஞ்சம் முழுவதும் , நித்ய விபூதி எனப்படும் , ஶ்ரீ வைகுண்டமும் , உனது , அளுகைக்கு உட்பட்ட செல்வங்களை தாமே !

    * உன் , திருக் கல்யாண குணங்கள் , எங்கே ! அவை , எல்லை அற்றவை . ஒவ்வொரு குணத்தைப் பார்த்தாலும் , ஒவ்வொன்றும் , எல்லை அற்று , விளங்குகிறது.

    * இப்படி , ஒவ்வொரு அம்சத்திலும் , ஒப்பற்ற பெருமையுடன் விளங்கும் , உன்னை , அடியேன் போன்ற , சிற்றறிவினர் , எவ்வாறு , துதிக்க முடியும் ?




    ��



Working...
X