श्री स्तुति : 01 / 25
ஶ்ரீ ஸ்துதி :
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :
* ஶ்ரீ தேசிகன், எம்பெருமானுடைய தேவியான , பெரிய பிராட்டி , பூமிப் பிராட்டி , நீளைப் பிராட்டி ஆகிய மூவரையும், பற்றி , ஶ்ரீ ஸ்துதி , பூ ஸ்துதி , கோதா ஸ்துதி என்ற அற்புதமான , மூன்று ஸ்தோத்ரங்களையும் , அருளிச் செய்துள்ளார் .
* அவர்களுள் :
. எம்பெருமான் திருமார்பை விட்டுக் , கணமும் பிரியாதவளாய் ,
. பட்ட மஹிஷியாய் ,
. சேதநர்களுக்காக , எம்பெருமானிடம் , பரிந்து பேசும் , புருஷகாரமாய் ,
. சேதநர்கள் செய்யும் ப்ரபத்திக்கு , எம்பெருமானுடன் சேர்ந்து , நிற்கும் உபாயமாய் ,
. அதனால் , வரும் மோக்ஷத்தில் , அவனுடன் சேர்ந்து பயனாய் ,
. நிற்கும் , பெரிய பிராட்டியைப் பற்றிய ஸ்தோத்ரம் இது .
* 25 சுலோகங்கள் கொண்டது. இந்த ஸ்தோத்ரத்தை , அநுஸந்தித்தால் , ஸந்தாநம் , ஸம்பத் முதலிய இம்மைச் செல்வங்களையும் , பிராட்டியின் திருவருளால் , பெறலாம் .
* மோக்ஷம் எனும் , அழியாத , மறுமைச் செல்வத்தைப் , பெறவும் , இந்த ஸ்தோத்ரம், வழி காட்டும்.
* இதன் 25 சுலோகங்களில் , முந்திய பன்னிரண்டிலும் , பிந்திய பன்னிரண்டிலும் , அவள் பெருமையைப் பேசுகிறார்.
* நடு நாயகமாய் , விளங்கும், பதின்மூன்றாவது , சுலோகத்தில் , ஶ்ரீ விஷ்ணு புரணத்தில் , உள்ளபடி , பெரிய பிராட்டியை , ஸர்வ லோகேஸ்வரியாகப் , பட்டாபிஷேகம் செய்த பெருமையை , விளக்கி , இருக்கும் அழகு , சுவைத்தற்கு , உரியது.
* இந்த ஸ்தோத்ரத்தில் ,
01. முதலில் , பிராட்டியைச் , சரணம் அடைந்து ;
02. பிறகு , முறையே , துதிக்க அகப்படாத அவள் பெருமை ;
03. பிராட்டியைத், துதிப்பவனுக்கு , அவள் தரும் , பெருமை ;
04. பகவானைப், பர தேவதையாகக் , காட்டும் , உரிமை ;
05. பிராட்டி , உறையும் , இடங்கள் ;
06. ப்ரபத்தியில் , தம்பதிகள் இருவருமே , இலக்கு , ஆதல் ;
07. இருவரும் , புரியும் , சதுரங்க லீலை ;
08. அவள் திருநாமங்கள் , மோக்ஷத்திற்கு , வழி காட்டல் ;
09. இருவருமே , பரம்பொருளாய் , உள்ள தன்மை ;
10. இருவருக்கும் , கருத்து , ஒற்றுமை ;
11. பிராட்டியும் , அவதாரங்களைக் , கொள்ளல் ;
12. அவளது , ஸங்கல்பத்தின் , பெருமை ;
13. ஸர்வேசுவரியாகப் பட்டாபிஷேகம் ;
14. தேவர்கள் , இழந்த செல்வத்தை , அவள் அருளால் , பெற்றமை ;
15. அவள் கடாக்ஷங்களின் , வண்மை ;
16. அவள் திருவருளால் , எவ்வழியாயினும் , செல்வம் குவிதல் ;
17. அவள் அருளால் , பெரிய பெரிய ஸ்தாநங்களைப் பெறுதல் ;
18. மோக்ஷத்திற்கு , அவள் அருள் , இன்றியமையாமை ;
19. ப்ரபந்நர்கள் , சாஸ்த்ர விதிமுறைகள் , மீறாமை ;
20. அவளைப் , பற்றினவர்கள் , மோக்ஷத்தைப் , பெறுதல் ;
21. அவள் கடாக்ஷத்தைப் , பிரார்த்தித்தல் ;
22. அவள் அருளால் , ப்ரபந்நர்கள் , உயரிய , மன நிலை , அடைதல் ;
23. தமக்குச் செய்த அனுக்ரஹம் ;
ஆகியவற்றை , விளக்கிப் பேசி ,
24. அவள் , பெருமை பொதிந்த , ஓரு த்யாந ச்லோகத்தையும் , அருளி ;
25. ஸகல பாபங்களும் , கழிந்து , மோக்ஷம் வரை உள்ள , எல்லா நலன்களையும் பெறுதலே இந்த ஸ்தோத்ரத்தின் , பாராயணத்துக்கு , உரிய பலன் என்று கூறி , தலைக் கட்டுகிறார் ஶ்ரீ தேசிகன் .
* ஆக இந்த ஸ்தோதரத்தில் , பெரிய பிராட்டியின் ,
. ஸ்வரூபம் ,
. திருமேனி ,
. திருக் கல்யாண குணங்கள் ,
. விபவம் ,
. ஐச்வர்யம் ,
ஆகிய ஐந்தும் , நன்கு விளக்கப்படும் , விசேஷத்தைக் காண்க !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
ஶ்ரீயைச் , சரணம் , அடைகிறேன் !
मान - अतीत , प्रथित , विभवाम् ; मंगलम् , मंगलानाम् ;
वक्ष: , पीठीम् , मधु , विजयिन: , भूषयन्तीम् , स्व , कान्त्या ; ।
प्रत्यक्ष - अनुश्रविक , महिमा , प्रार्थिनीनाम् , प्रजानाम् ;
श्रेयो , मूर्तिम् ; श्रियम् ; अशरण: , त्वाम् ; शरण्याम् ; प्रपद्ये ! ।।
மாந - அதீத , ப்ரதித , விபவாம் ; மங்களம் , மங்களாநாம் ;
வக்ஷ: பீடீம் , மது , விஜயிந: , பூஷயந்தீம் , ஸ்வ , காந்த்யா ; |
ப்ரத்யக்ஷ - அநுச்ரவிக , மஹிமா , ப்ரார்த்திநீநாம் , ப்ரஜாநாம் ;
ச்ரேயோ , மூர்த்திம் ; ச்ரியம் ; அசரண: , த்வாம் ; சரண்யாம் , ப்ரபத்யே ! ||
मान ............. எல்லையை ,
अतीत ........... மீறிய ,
प्रथित ........... புகழ் பெற்ற ,
विभवाम् ......... பெருமை , உடையவளும் ;
मंगलानाम् ....... மங்களப் பொருள்களுக்கு ,
मंगलम् .......... மங்களம் கொடுப்பவளும் ;
मधु .............. மது எனும் அரக்கனை ,
विजयिन: ....... வெற்றி கொண்ட , எம்பெருமானுடைய ,
वक्ष: ............. திரு மார்பு , ஆகிய ,
पीठीम् ........... பீடத்தை ,
स्व ............... தனது ,
कान्त्या .......... ஒளியால் ,
भूषयन्तीम् ...... அழகுறச் செய்பவளும் ;
प्रत्यक्ष .......... இம்மைக்கும் ,
अनुश्रविक ...... மறுமைக்கும் , உரிய ,
महिमा ........... செல்வங்களை ,
प्रार्थिनीनाम् ..... வேண்டுகின்ற ,
प्रजानाम् ........ ஜனங்களுடைய ,
श्रेयो ............. நன்மையே ,
मूर्तिम् ........... வடிவானவளும் ;
शरण्याम् ....... சரண் அடைந்தவர்களைக் காப்பவளும் ;
श्रियम् .......... "ஶ்ரீ" எனும், திரு நாமம் , உடையவளுமான ,
त्वाम् ............ உன்னை ,
अशरण: ...... வேறு , கதி , அற்ற , நான் ,
प्रपद्ये ........... சரணம் அடைகிறேன் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :
* பெரிய பிராட்டியே !
* உலகப் புகழ் பெற்ற உன் பெருமைக்கு , எல்லை உண்டோ ! வேதங்கள் எல்லாம் , உனது , பெருமையைச் , சிறிதும் , கூற முடிக்க , இயலானதவாய்த் , தடுமாறுகின்றனவே !
* உலகத்தில் , மங்களமான பொருள்கள் , பல உள்ளன. அவற்றுக்கு எல்லாம் , மங்களத் தன்மையை , நீயே , அளிக்கின்றாய் !
* எம்பெருமானது , திருமார்பை , நீ , அமரும் , பீடமாக அமைத்துக் கொண்டு , எப்பொழுதும் , அங்கேயே , உறைகின்றாய் . உன் , திருமேனி ஒளியால் , அவனது , திருமார்பை , மிக , அழகு பெறச் , செய்கிறாய்.
* பலர் பசு , புத்திரர் , செல்வம் முதலிய , இம்மைப் பயன்களையும் , சிலர் , சொர்க்கம் முதலிய மறுமைப் பயன்களையும் , அவை , அனைத்திலும் , மேம்பட்ட , மோக்ஷத்தையும் , உன்னிடம் , வேண்டுகின்றனர் . அவர்கள் , விரும்பிய பலன்களை , எல்லாம் , நீ , அளிப்பதால் , அவர்களின் , நன்மையே , உன் வடிவு கொண்டதோ என்னுமாறு , விளங்குகின்றாய் .
* அடைக்கலம் புகுந்த , அடியார்களுக்கு , அபயம் அளித்துக் காப்பவள் , நீயே .
* இத்தகைய பெருமையுடன் , "ஶ்ரீ" எனும் , திருநாமமும் , கொண்டுள்ளாய். இதைக் காட்டிலும் , உயர்ந்த , திருநாமம் ஏது ?
* இத்தகைய பெருமை உடைய , உன்னை , வேறு புகல் அற்ற , அடியேன் , சரணம் அடைகிறேன் .
[ "ஶ்ரீ" என்ற சொல்லின் , வினைப்பகுதியினால் , பின் வரும் பெருமைகள் , விளக்கப் படுகின்றன :
1. உஜ்ஜீவிக்க விரும்பும் சேதநர்களால் , (சரணமாக) , அடையப்படுபவள் .
2. அவர்களை , உய்விப்பதற்காகத் , தான் , எம்பெருமானைச் ( சரணமாக) , அடைபவள்.
3. சேதநர்கள் , தங்களைக் காக்குமாறு , வேண்டும் , சொற்களைக் , கேட்கிறாள் .
4. அவர்களின் , வேண்டுகோளை , எம்பெருமானிடம் , விண்ணப்பம் , செய்பவள்.
5. தடையாய் இருக்கும் , கர்மங்களை , ஒழிப்பவள்.
6. அடியார்களுக்கு , நற் குணங்களின் , பரிபக்குவ நிலையை , உண்டாக்குபவள்.
இன்னும் , இவ்வாறு , பிராட்டிக்குப் , பல பெருமைகளக் கூறுவதால் , பிராட்டியின் , திரு நாமங்களுக்குள் , "ஶ்ரீ" என்பதே , தலை சிறந்தது ஆகும் ]