अभीति स्तवम् 29 / 29
அபீதி ஸ்தவம்
அரங்கன் , அருளால் , அச்சம் , அகலும் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
प्रबुद्ध , गुरु , वीक्षण , प्रथित , वेंकटेश - उद्भवाम् ,
इमाम् - अभय , सिद्धये , पठत ! रंग , भर्तु: स्तुतिम् ।
" भयम् , त्यजत ! भद्रम् " , इति -अभिदधत् , स , व: , केशव: ,
स्वयम् , घन , घृणा , निधि: ; गुण , गणेन , गोपायति ।।
ப்ரபுத்த , குரு , வீக்ஷண , ப்ரதித , வேங்கடேச - உத்பவாம் ,
இமாம் - அபய , ஸித்தயே , படத ! ரங்க , பர்து : , ஸ்துதிம் |
" பயம் , த்யஜத ! , பத்ரம் " , இதி - அபிததத் , ஸ , வ: , கேசவ: ,
ஸ்வயம் , கந , க்ருணா , நிதி: , குண , கணேன , கோபயதி ||
प्रबुद्ध ...... சிறந்த , அறிஞர்களான ,
गुरु ........ ஆசார்யர்களின் ,
वीक्षण .... கடாக்ஷத்தால் ,
प्रथित ..... புகழ் பெற்ற ,
वेंकटेश .... வேங்கடேச கவியிடமிருந்து ,
उद्भवाम् .... தோன்றிய ,
इमाम् ...... இந்த ,
रंग भर्तु: .... அரங்கனுடைய ,
स्तुतिम् ..... ஸ்துதியை ;
अभय ...... அச்சம் இன்மையை ,
सिद्धये ..... அடைவதற்கு ,
पठत ....... பாராயணம் , செய்யுங்கள் !
घन ......... மிகுந்த ,
घृणा ..... . கருணையின் ,
निधि: ...... இருப்பிடமாய் ;
भयम् ....... " அச்சத்தை ,
त्यजत ...... விடுங்கள் ,
भद्रम् ........ மங்களம் , உண்டாகும் " ,
इति ......... என்று ,
अभिदधत् .. அருளிச் செய்த ,
स केशव:.. அந்த கேசவன் ,
गुण ......... நற் குணக் ,
गणेन ....... கூட்டத்தால் ,
स्वयम् ...... தானே ,
व: ........... உங்களை ,
गोपायति ... காக்கின்றான் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:
* பாகவதோத்தமர்களே !
* சிறந்த , ஞானிகளான , ஆசார்யர்கள் , அடியேனைக் , குளிரக் , கடாக்*ஷித்த படியால் , மிக்க , புகழ் பெற்றேன் .
* வேங்கடேசன் எனும் , அடியேன் , திருவரங்கப் பெருமான் விஷயமாய் , இந்த அபீதி ஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தை , இயற்றினேன் . இதைப் பாராயணம் , செய்யுங்கள் ! செய்தால் , உங்களுக்கு உள்ள , அச்சம் அனைத்தும் , அழியும் !
* கருணைக் கடலான , திருவரங்கன் , உங்களை நோக்கி , "நீங்கள் அச்சத்தை , விடுங்கள் ! உங்களுக்கு , மங்களம் , உண்டாகுக ! " என்று , ( முன்பு தேவர்களுக்குக் கூறியது போல் ) கூறுவான் !
* தனக்கு , இயற்கையாய் உள்ள அன்பு , கருணை முதலிய குணங்களால் , தானே , உங்களை , எல்லா வகையிலும் , காத்து , அருள்வான் !
**********************
ஶ்ரீ அபீதி ஸ்தவம் முற்றும்
**********************
कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |
श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे , नम: ।।
கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |
ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே , நம: ||
ஶ்ரீமதே ; நிகமாந்த , மஹா , தேசிகாய , நம: