Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 27 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கனே ! 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 27 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கனே ! 

    अभीति स्तवम् 27 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��

    அரங்கனே ! எதிரிகளை , அழித்து , அருள் !








    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��
    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    स , कैटभ , तमो , रवि: ; मधु , पराग , झंझा , मरुत् ;

    हिरण्य , गिरि , दारण: ; त्रुटित , कालनेमि , द्रुम: ; ।

    किम् - अत्र , बहुना ? भजत् , भव , पयोधि , मुष्टिन्धय : ;

    त्रिविक्रम ! भवत् , क्रम: , क्षिपतु ! मडक्षु , रंग , द्विष: ।।



    ஸ , கைடப , தமோ , ரவி: ; மது , பராக , ஜஞ்ஜா , மருத் ;

    ஹிரண்ய , கிரி , தாரண: ; த்ருடித , காலநேமி , த்ரும: ; |

    கிம் -அத்ர , பஹுநா ? பஜத் , பவ , பயோதி , முஷ்டிந்தய: ;

    த்ரிவிக்ரம ! பவத் , க்ரம: , க்*ஷிபது ! , மங்க்*ஷு , ரங்க , த்விஷ: ||



    त्रिविक्रम ....... மூவடியால் , உலகை , அளந்தவனே !

    कैटभ ........... கைடபன் எனும் ,

    तमो ............ இருளை ,

    रवि: ............ விரட்டிய , சூர்யனும் ;

    मधु ............. மது எனும்,

    पराग ........... புழுதிக்கு ,

    झंझा ........... சுழல் ,

    मरुत् ........... காற்றும் ;

    हिरण्य ......... ஹிரண்யன் எனும்,

    गिरि ............ மலையைப் ,

    दारण: ......... பிளந்தவனும் ;

    कालनेमि ...... காலநேமி எனும்,

    द्रुम: ............ மரத்தை ,

    त्रुटित .......... முறித்தவனும் ஆனவனே !

    अत्र ............ இவ்விஷயத்தில் ,

    बहुना .......... பல விதமாக பேசுவது ,

    किम् ........... எதற்கு ?

    भजत् .......... அடியார்களின் ,

    भव ............. ஸம்ஸாரம் எனும்,

    पयोधि ......... ஸமுத்ரத்தை ,

    मुष्टिन्धय : .... உறிஞ்சியவனான ,

    स: ............. அத்தகைய ,

    भवत् ........... உனது ,

    क्रम: ........... செயலால் ,

    रंग ............. திருவரங்கத்தின் ,

    द्विष: ...........எதிரிகளை ,

    मडक्षु ......... விரைவில் ,

    क्षिपतु ......... அழித்து , அருள வேண்டும் !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * திருவரங்கப் பெருமானே !

    * நீ , த்ரிவிக்ரமனாக , அவதரித்து , மூன்று அடிகளால் , உலகத்தை , அளந்தாய் !

    * கதிரவனைக் கண்டு , இருள் , அழிவதைப் போல் , உனது , வீர்யத்தால் , கைடபஸுரன் ,
    ஒழிந்தான் !

    * சுழற் காற்றில் , அகப்பட்ட புழுதி , பறப்பது போல் , மது எனும் , அஸுரன் , உன் வீர்யத்தைத் தாங்கமாட்டாது , மடிந்தான் !

    * உனது வீர்யம் , மலையை உடைப்பது போல் , ஹிரண்யகசிபுவின் , மார்பைப் , பிளந்து , நின்றது !

    * காலநேமி எனும் அசுரனை , மரத்தை , முறிப்பது போல் , உன் வீர்யம் , மாள்வித்தது !

    * அதிகமாய்க் , கூறிக்கொண்டே போவது , ஏன் ? உன் பராக்ரமம் , உன்னை வந்து , அடைந்த , அடியார்களின் , ஸம்ஸாரம் ஆகிய கடலை , அடியோடு , உறிஞ்சி விடக் கூடியது .

    * இத்தகைய பெருமையை , உடைய , உன் வீர்யம் , திருவரங்கத்தில் , உன்னை , நாங்கள் , அநுபவிக்க முடியாமல் , தடை செய்து , எங்களை நலியும் , எதிரிகளை , விரைவில் , அடக்கி , அருள வேண்டும் !




    Last edited by sridharv1946; 12-05-18, 09:40.
Working...
X