अभीति स्तवम् 26 / 29
அபீதி ஸ்தவம்
அரங்கா ! எங்கள் , எதிரிகளை , அடக்கி , அருள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
विधि: ; त्रिपुर , मर्दन: ; त्रिदश , पुंगव: ; पावक: ;
यम , प्रभृतयो , अपि , यत् - विमत , रक्षणे , न क्षमा: ।
रिरक्षिषति , यत्र च , प्रतिभयम् , न किंचित् , क्वचित् ,
स , न: , प्रतिभटान् , प्रभो ! शमय ! रंग , धाम - आदिषु ।।
விதி : ; த்ரிபுர , மர்த்தந: ; த்ரிதச , புங்கவ: ; , பாவக: ;
யம , ப்ரப்ருதயோ , அபி , யத் - விமத , ரக்ஷணே , ந க்ஷமா: |
ரிரக்*ஷிஷதி , யத்ர , ச , ப்ரதிபயம் , ந கிஞ்சித் , க்வசித் ,
ஸ , ந: , ப்ரதிபடாந் , ப்ரபோ ! சமய ! ரங்க , தாம - ஆதிஷு ||
प्रभो ......... ப்ரபுவே !
विधि: ....... பிரம்மனும் ;
त्रिपुर ........ த்ரிபுராசுரனைக் ,
मर्दन: ........ கொன்ற சிவனும் ;
त्रिदश ....... தேவர்களின் ,
पुंगव: ........ தலைவனான , இந்திரனும் ;
पावक: ...... அக்நி தேவனும் ;
यम ........... யமன் ,
प्रभृतयो ...... முதலிய , தேவர்களும் ;
अपि .......... கூட ,
यत् ............ எவனுடைய ,
विमत ......... எதிரியை ,
रक्षणे ........ காப்பதில் ,
न क्षमा: ....... சக்தி இல்லையோ ;
यत्र च ......... எவன் ,
रिरक्षिषति .... (ஒருவனை ) காக்க விரும்பினால் ,
क्वचित् ....... எங்கும் ,
प्रतिभयम् ..... அவனுக்கு , அச்சம் தருவது ,
न किंचित् ..... எதுவும் இல்லையோ ;
स : ............ அத்தகைய , நீ ,
रंग धाम ....... திருவரங்கம் ,
आदिषु ........ முதலிய இடங்களில் உள்ள ,
न: ............. எங்களது ,
प्रतिभटान् ..... எதிரிகளை ,
शमय ......... அடக்கி , அருள வேண்டும் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திருவரங்கப் பெருமானே !
* உன்னிடம் , அபசாரப்பட்டு , எதிரியாய் , நிற்பவனைப் , பிரம்ம தேவனோ , சிவனோ , இந்திரனோ , அக்நியோ , யமனோ , மற்றுமுள்ள , தேவர்களில் , ஒருவனோ , எல்லோரும் ஒன்று கூடியோ , காக்க முடியாது !
* நீ , ஒருவனைக் காக்க விரும்பி விட்டால் , அவனுக்கு , எந்த இடத்திலும் , எவனும் , சிறிதளவும் , தீங்கு செய்ய முடியாது !
* இத்தகைய பெருமையை உடைய நீ , திருவரங்கம்,முதலிய இடங்களில் , நாங்கள் , உன்னை அனுபவிக்க முடியாதபடி , எங்களுக்கு இன்னல் செய்யும் , எதிரிகளை , அடக்கி , அருள வேண்டும் !