Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 24 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 24 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

    ��


    अभीति स्तवम् 24 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��


    அரங்கா , அச்சம் , அழித்து , அருள் !





    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��




    मनु , प्रभृति , मानिते ; महति , रंग , धाम - आदिके ;

    दनु , प्रभव , दारुणै: , दरम् , उदीर्यमाणम् ,परै: ।

    प्रकृष्ट , गुणक ! श्रिया , वसुधया , च , संधुक्षित: ;

    प्रयुक्त , करुणा - उदधि: ; प्रशमय ! स्व , शक्त्या , स्वयम् ।।


    ��



    மநு , ப்ரப்ருதி , மாநிதே ; ரங்க , தாம - ஆதிகே ;

    தநு , ப்ரபவ , தாருணை: , தரம் , உதீர்யமாணம் , பரை: |

    ப்ரக்ருஷ்ட , குணக ! ச்ரியா , வஸுதயா , ச , ஸந்துக்*ஷித: ;

    ப்ரயுக்த , கருணா - உததி: ; , பரசமய ! ஸ்வ , சக்த்யா , ஸ்வயம் ||


    ��


    प्रकृष्ट ......... உயர்ந்த ,

    गुणक ......... குணங்களை , உடையவனே !

    मनु ............ மநு ,

    प्रभृति ......... முதலியவர்களால் ,

    मानिते ......... பூஜிக்கப்பட்டதும் ;

    महति .......... பெருமை பெற்றதும் ஆன ;

    रंग धाम ....... திருவரங்கம் ,

    आदिके ....... முதலிய இடங்களில் ;

    दनु ............. அசுரர்களைக் ,

    प्रभव .......... காட்டிலும் ,

    दारुणै: ........ கொடியவர்களான ,

    परै: ............ பகைவர்களால் ,

    उदीर्यमाणम् .. விளைவிக்கப்படுகின்ற ,

    दरम् ............பயத்தை ;

    श्रिया .......... பெரிய பிராட்டியாரலும் ,

    वसुधया च .... பூமிப்பிராட்டியாலும் ,

    संधुक्षित: ......தூண்டப்பட்டு ;

    करुणा ........ கருணை எனும் ,

    उदधि: ......... கடலைப் பயன்படுத்தி ;

    स्व ............. உன்னுடைய ,

    शक्त्या ........ சக்தியால் ;

    स्वयम् ......... நீயே ,

    प्रशमय ........ அழித்து , அருள் !

    ��


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��



    * திருவரங்கப் பெருமானே !

    ��


    * உன்னிடம் , எல்லையற்ற , உயர்ந்த , திருக் கல்யாண குணங்கள் , நிரம்பி , இருக்கின்றன. ஆனால் , அவற்றுள் , கருணை எனும் , குணத்தையே , சேதநர் பால் , பயன்படுத்திக் , "கருணைக் கடல்" என்று , வழங்கப் படுகிறாய் !

    * இங்கு உள்ள ஶ்ரீரங்க விமானம் முதலியன , மநு , மாந்தாதா , முதலிய , மஹான்களால் , மிகப் போற்றிப் , பூஜிக்கப்பட்டு , உள்ளன.

    * இங்குள்ள எதிரிகளோ , அசுரர்களைக் , காட்டிலும் , மிக்க கொடுமை , விளைவிப்பவர்களாக , உள்ளார்கள். அவர்களால் , இந்த விமாநம் , முதலியவற்றுக்குப் , பெரும் தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகிறது .

    * அவ்வாறு , தீங்கு , வராது , பாதுகாத்து , இவ் வச்சத்தை , ஒழித்து , அருள வேண்டும் என்று , பெரிய பிராட்டியும் , பூமிப் பிராட்டியும், உன்னை , வேண்டிக் கொள்வார்கள்.

    * நீ , உன் , கருணையைப் பயன் படுத்தி , உனது , ஒப்பற்ற , சக்தியால் , தானே , முன் , நின்று , எங்களது , அச்சத்தைப் போக்கி , அருள வேண்டும் !




    ��







    Last edited by sridharv1946; 09-05-18, 10:11.
Working...
X