अभीति स्तवम् 21 / 29
அபீதி ஸ்தவம்
அரங்கா , எங்கும் , உன் ஆட்சியை , அருள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
श्रिय: , परिबृढे ; त्वयि , श्रित , जनस्य , संरक्षके ;
सत् - अद्भुत , गुण - उदधौ - इति , समर्पित: - अयम् , भर: ।
प्रति , क्षणम् - अत: , परम् , प्रथय ! रंग , धामादिषु ,
प्रभुत्वम् - अनुपाधिकम् , प्रथित , हेतिभि: , हेतिभि: ।।
ச்ரிய: , பரிப்ருடே ; த்வயி , ச்ரித , ஜனஸ்ய , ஸம்ரக்ஷகே ;
ஸத் - அத்புத , குண - உததௌ - இதி , ஸமர்பிதோ - அயம் , பர: |
ப்ரதி , க்ஷணம் - அத: , பரம் , ப்ரதய ! ரங்க , தாமாதிஷு ,
ப்ரபுத்வம் - அனுபாதிகம் , ப்ரதித , ஹேதிபி: , ஹேதிபி: ||
श्रिय: .......... பெரிய பிராட்டியின் ,
परिबृढे ........ மணாளனும் ;
श्रित ........... சரணம் அடைந்த ,
जनस्य ........ பக்தர்களை ,
सं रक्षके ...... நன்கு , காப்பவனும் ;
सत् ............ உயர்ந்த ,
अद्भुत ........ ஆச்சர்யமான ,
गुण .......... குணங்களின் ,
उदधौ ......... கடலாகவும் உள்ள ;
त्वयि .......... உன்னிடம் ,
अयम् ......... இந்தப்
भर: ........... பொறுப்பு ,
इति ........... இவ்வாறு
समर्पित: ..... ஸமர்ப்பிக்கப் பட்டது !
अत: ........... இதற்கு ,
परम् ........... மேல் ,
प्रति ........... ஒவ்வொரு ,
क्षणम् ......... கணமும் ,
प्रथित ......... மிகவும் ,
हेतिभि: ........ சுடர் விடும்,
हेतिभि: ........ திரு ஆயுதங்களால் ,
अनुपाधिकम्... இயற்கையான ,
प्रभुत्वम् ....... ஆட்சியை ,
रंग ............. திருவரங்கம் முதலிய ,
धामादिषु ...... இடங்களில் ,
प्रथय ........... செலுத்தி , அருள் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திருவரங்கப் பெருமானே !
* உலகுக்குத் , தாயாய் நின்று , பரிந்து , பேசும் , பெரிய பிராட்டிக்கு , மணாளனாய் , விளங்குகிறாய் !
* அவளுடைய , தூண்டுதலால் , உனை. , வந்து , அடைகின்ற , அடியார்களைக் காத்து வருகின்றாய் !
* இழி குணம் , யாதும் இன்றி , அற்புதமாய்ச் , சிறந்த , திருக் கல்யாண , குணங்களுக்குக் , கடலாய்த் , திகழ்கிறாய் !
* இந்தக் காரணங்களைக் கொண்டு , எங்களைக் , காக்கும் பொறுப்பை , உன்னிடம் , ஸமர்ப்பித்து விட்டோம்.
* இனிமேல் , நீ , செய்ய வேண்டியது , ஒன்று உண்டு . அதாவது :
* எப்பொழுதும் , ஜ்வலிக்கின்ற , திருவாழி முதலிய , திருவாயுதங்களைக் கொண்டு , உனக்கு , இயற்கையாய் , உள்ள அதிகாரத்தை , க்ஷணம் தோறும் , செலுத்தி அருள வேண்டும் !
* இந்தத் திருவரங்கத்தில் மட்டும் , அன்று ! நீ , அர்ச்சை வடிவம் கொண்டு , எழுந்தருளி , இருக்கும் , எல்லா க்*ஷேத்ரங்களிலும் , உன் , சக்தியைப் , பயன் படுத்தி , எங்களுக்கு , நேர்ந்துள்ள , கஷடங்களைப் போக்கி , அடியோங்களைக் , காத்து , அருள வேண்டும் !