अभीति स्तवम् 20 / 29
அபீதி ஸ்தவம்
அச்சுதா ! அச்சம் , அகற்று ! ஆனந்தம் , அருள் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
भयम् , शमय ! रंग - धाम्नि , अनितर , अभिलाष , स्पृशाम् ,
श्रियम् , बहुलय ! प्रभो ! श्रित , विपक्षम् , उन्मूलय ! ।
स्वयम् , समुदितम् , वपु: , तव , निशामयन्त: , सदा ,
वयम् , त्रिदश , निर्वृतिम् , भुवि , मुकुन्द ! विन्देमहि ! ।।
பயம் , சமய ! ரங்க , தாம்நி - அநிதர , அபிலாஷ , ஸ்ப்ருசாம் ,
ச்ரியம் , பஹுளய ! ப்ரபோ ! ச்ரித , விபக்ஷம் , உன்மூலய ! |
ஸ்வயம் , ஸமுதிதம் , வபு: , தவ , நிசாமயந்த: , ஸதா ,
வயம் , த்ரிதச , நிர்வ்ருதிம் , புவி , முகுந்த , விந்தேமஹி ! ||
प्रभो ........... பிரபுவே !
मुकुन्द ......... முகுந்தனே !
रंग धाम्नि ..... திருவரங்க நகரில் ,
अनितर ........ வேறொன்றையும் ,
अभिलाष ..... விரும்பாத ,
स्पृशाम् ........ பக்தர்களுக்கு , வந்த ,
भयम् .......... அச்சத்தை ,
शमय .......... ஒழித்து , அருள் !
श्रियम् ........ வைணவச் செல்வத்தை ,
बहुलय ....... வளரச் செய் !
श्रित ........... அடியார்களின் ,
विपक्षम् ...... எதிரியை ,
उन्मूलय ....... வேரோடு , களைந்து , அருள் !
वयम् .......... அடியோங்கள் ,
स्वयम् ......... தானாகத் ,
समुदितम् ..... தோன்றிய ,
तव ............ உன்னுடைய ,
वपु: ............திருமேனியை
सदा ........... எப்போதும்
निशामयन्त: .. ஸேவித்துக் கொண்டே ,
त्रिदश ......... நித்ய ஸூரிகள் பெறும் ,
निर्वृतिम् ...... இன்பத்தை ,
भुवि .......... இந்த பூமியிலேயே ,
विन्देमहि ...... பெறுவோம் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திருவரங்க நகரப்பனே !
* இந் நகரில் , உன்னையன்றி , வேறு , ஒன்றிலும் , மனம் , சிறிதும் நாடாத , பரமைகாந்திகள் பலர் உள்ளனர் . அவர்களுக்கு , உன்னை , அனுபவிப்பதற்குத் , தடையாக , இப்போது , அச்சம் , உண்டாகி , உள்ளது . அந்தப் பயத்தை , நீ போக்கி , அருள் !
* ஶ்ரீ வைஷ்ணவர்கள் , நகரில் , நிறைந்து , இருந்தால் , அது , ஓர் உயரிய , செல்வம் , ஆகும் . இச் செல்வத்தை , வளரச் செய் !
* பாகவதர்களுக்கு , எதிரியாய் , உள்ள , அனைத்தையும் , வேரறுத்து , அருள் !
* நீ இவ்வாறு செய்து அருளினால் ,
. நாங்கள் மன அமைதி பெறுவோம் !
. இந் நகரில் , தானே , அவதரித்து , "ஸ்வயம் வ்யக்தம் " என வழங்கும் , உன் , அர்ச்சைத் திருமேனியை , எப்போதும் , கண்ணாரக் , கண்டு , அனுபவிப்போம் !
. அதனால் , நித்ய ஸூரிகள் , ஶ்ரீ வைகுண்டத்தில் , பெறும் , ஆனந்தத்தை , நாங்கள் , இவ்வுலகிலேயே , பெற்று , மகிழ்வோம் !