Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 18 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 என் விர

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 18 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 என் விர

    ��


    अभीति स्तवम् 18 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��

    என் விருப்பத்தை , நிறைவேற்று !


    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:









    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    निसर्ग , निरनिष्टता , तव , निरंहस: , श्रूयते !

    तत: , त्रियुग ! सृष्टिवत् , भवति , संह्रृति: , क्रीडितम् ।

    तथा - अपि , शरणागत , प्रणय , भंग , भीतो , भवान् !

    मत् - इष्टम् , इह , यत् - भवेत् , किमपि , मा , स्म , तत् , जीहपत् ।।

    ��

    நிஸர்க , நிரநிஷ்டதா , தவ , நிரம்ஹஸ: , ச்ரூயதே !

    தத: , த்ரியுக ! ஸ்ருஷ்டிவத் , பவதி , ஸம்ஹ்ருதி: , க்ரீடிதம் |

    ததா - அபி , சரணாகத , ப்ரணய , பங்க , பீதோ , பவாந் !

    மத் - இஷ்டம் , இஹ , யத் - பவேத் , கிமபி , மா , ஸ்ம , தத் , ஜீஹபத் ||


    ��

    त्रि युग ..... ஆறு குணங்களை உடையவனே !

    निरंहस: .... பாபம் , அற்ற ,

    तव ......... உனக்கு ,

    निसर्ग ...... இயற்கையாகவே ,

    निरनिष्टता ..துக்கம் அற்ற தன்மை ,

    श्रूयते ....... வேதத்தில் , கூறப் பட்டுள்ளது .

    तत: ........ ஆதலால் ,

    सृष्टिवत् ... படைப்பதைப் போல் ,

    संह्रृति : .... அழிப்பதும் ,

    क्रीडितम्... விளையாட்டாக ,

    भवति ...... ஆகிறது .

    तथा अपि.. அப்படி இருந்தாலும் ,

    शरणागत.. சரணம் அடைந்தவனுடைய ,

    प्रणय ...... விருப்பத்தை ,

    भंग ......... மறுப்பதற்கு ,

    भीतो ....... அஞ்சும் ,

    भवान् ..... . நீ ,

    इह ......... இவ்வுலகில் ,

    यत् ......... எது ,

    मत् ......... எனது ,

    इष्टम् ..... விருப்பமாக ,

    भवेत् ....... இருக்கிறதோ ,

    तत् ......... அதை ,

    किमपि ..... ஒன்றையும் ,

    मा स्म ...... விடாமல் .

    जीहपत् ..... செய்து அருளவேண்டும் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    ��

    * திருவரங்க நகர் அப்பனே !

    * நீ , ஜ்ஞானம் , சக்தி , பலம் , ஐச்வர்யம் , வீர்யம் , தேஜஸ் என்னும், ஆறு குணங்கள் நிறைந்த , பரம புருஷன். உனக்கு , பாபம், என்பதே கிடையாது. ஆதலால் , "நீ இயற்கையாகவே , துக்கம் அற்றவன் " என்று , உபநிஷத்துகள் , கூறுகின்றன.

    * ஆகவே , நீ என்னை , அழித்தாலும் , அதுவும் , உலகத்தைப் படைத்தல் போலவே , உன் ஸங்கல்பத்தால் , நடக்கும் , விளையாட்டுச் செயலாகவே , ஆகும் . மேலும் , அதனால் , உனக்கு , ஒரு , தீங்கும் இல்லை .

    * ஆனால் , உனக்கும் , ஒரு அச்சம் உண்டு . அது , உன்னைச் சரணம் அடைந்தவனுடைய , விருப்பத்தை , நிறைவேற்றாமல் , மறுத்துவிட்டால் , அவனுடைய , நட்புக்கு , ஒரு முறிவு வந்துவிடுமே என்பது தான் . ஆதலின் , சரணம் அடைந்தவனுக்கு , நன்மை புரிவதிலேயே , கருத்துக் கொண்டிருப்பாய்.

    * அடியேன் , உன்னைச், சரணம் அடைந்தவன் , அடியேனுக்கு , எது , நன்மை என்பதை , நீயே கண்டு , அதைச் செய்யப் , பின் வாங்காது , செய்து அருள வேண்டும் .












    ��




    Sent from my iPad
    Last edited by sridharv1946; 03-05-18, 10:10.
Working...
X