Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 16 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 பாபங்க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 16 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 பாபங்க&

    ��


    अभीति स्तवम् 16 / 29


    ��
    அபீதி ஸ்தவம்
    ��

    பாபங்கள் , தீர , பாதையைக் , காட்டு , பரமனே !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    अनुक्षण , समुत्थिते , दुरित , वारिधौ , दुस्तरे ,

    यदि , क्वचन , निष्कृति: , भवति , सा - अपि , दोष - आविला ! ।

    तत् - इत्थम् , अगतौ , मयि , प्रतिविधानम् , आधीयताम् !

    स्व , बुद्धि , परिकल्पितम् , किमपि , रंग , धुर्य , त्वया ।।

    ��

    அநுக்ஷண , ஸமுத்திதே , துரித , வாரிதௌ , துஸ்தரே ,

    யதி , க்வசந , நிஷ்க்ருதி: , பவதி , ஸா - அபி , தோஷ - ஆவிலா ! ।

    தத் - இத்தம் , அகதௌ , மயி , ப்ரதிவிதாநம் , ஆதீயதாம் !

    ஸ்வ , புத்தி , பரிகல்பிதம் , கிமபி , ரங்க , துர்ய , த்வயா ||

    ��
    रंग धुर्य ....... திருவரங்கனே !

    अनुक्षण ...... ஒவ்வொரு , கணப் பொழுதிலும் ,

    समुत्थिते ..... பொங்கி , எழுகின்ற ,

    दुस्तरे ......... கடக்க முடியாத ,

    दुरित .......... பாபக் -

    वारिधौ ........ கடல் விஷயத்தில் ,

    क्वचन ......... எங்காவது ,

    निष्कृति: ...... பிராயச்சித்தம் ,

    भवति यदि .... நடக்குமே ஆனால்,

    सा - अपि .... அது கூட ,

    दोष ........... குற்றங்களால் ,

    आविला ...... கெடுகிறது !

    तत् ........... ஆதலால் ,

    इत्थम् ........ இவ்வாறு ,

    अगतौ ........ கதியற்றவனான ,

    मयि .......... என் விஷயத்தில் ,

    स्व ............ உன்னுடைய ,

    बुद्धि ........... ஸங்கல்பத்தால் ,

    परिकल्पितम् ..ஏற்படுத்தப்பட்ட ,

    किमपि ........ ஏதேனும் , ஒரு ,

    प्रतिविधानम्... பிராயச்சித்தம் ,

    त्वया ........... உன்னால் ,

    आधीयताम् ... விதிக்கப் பட வேண்டும் !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:

    * திருவரங்க நகர்த் தலைவனே !

    * இந்த ஸம்ஸார மண்டலத்தில், மனிதன் செய்யும் பாபங்கள் , க்ஷணந்தோறும், கடல் போல் , வளர்ந்து கொண்டே , இருக்கின்றன. அவற்றை , எளிதில் , ஒழிக்க முடியாது.

    * அந்தப், பாபங்களைப் போக்கச் , சாஸத்ரங்களில் , பிராயச்சித்தம் , விதிக்கப்பட்டுள்ளது.

    * ஆனால் , அதைச் செய்வதில் , ஏதாவது , குற்றம் நேர்ந்து , அந்தப் பிராயச்சித்தம் , கெட்டு விடுகிறது. நேரிய முறையில் அதைச் செய்து , முடிக்க , மனிதனுக்குச் , சக்தியும் இல்லை .

    * ஆகவே , அடியேனும் , அத்தகையப் , பாபங்களைச் , செய்தவனாக , உன்னை அன்றி , வேறு , கதி அற்றவனாக , இருக்கிறேன் .

    * என் பாபங்கள் அழிவதற்கு , உன் , ஸங்கல்பத்தால் , எனக்கு , உரிய , ஏதாவது , ஒரு வழியை , நீ , கண்டு , எனக்குக் காட்டி , அருள வேண்டும் !

    Last edited by sridharv1946; 01-05-18, 10:04.
Working...
X