Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 10 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 பாபிகளை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 10 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 பாபிகளை

    ��


    अभीति स्तवम् 10 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��


    பாபிகளையும் , பரிவுடன் , பாதுகாக்கும் , பரமன் !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��


    बिभेति ! भव -भृत् , प्रभो ! त्वत् - उपदेश , तीव्र - औषधात् ,

    कदध्व , रस , दुर्विषे , बलिश , भक्षवत् , प्रीयते ! ।

    अपथ्य , परिहाराधी , विमुखम् , इत्थम् , आकस्मिकी ,

    तम् - अपि - अवसरे , क्रमात् , अवति , वत्सला , त्वत् , दया ॥

    ��

    பிபேதி ! பவ -ப்ருத் , பரபோ ! , த்வத் - உபதேச , தீவ்ர - ஔஷதாத் ,

    கதத்வ , ரஸ , துர்விஷே , பலிச , பக்ஷவத் , ப்ரீயதே ! |

    அபத்ய , பரிஹாராதீ , விமுகம் , இத்தம் , அகஸ்மிகீ ,

    தம் - அபி - அவஸரே , க்ரமாத் , அவதி ! , வத்ஸலா, த்வத் , தயா ॥




    ��

    प्रभो .......... அரங்கன் எனும் ப்ரபுவே !

    भव - भृत् .... ஸம்ஸாரியான , சேதனன் ,

    त्वत् .......... உன்னுடைய ,

    उपदेश ...... உபதேசம் எனும்,

    तीव्र ......... கடுமையான ,

    औषधात् .... மருந்துக்கு ,

    बिभेति ....... அஞ்சுகிறான் !

    कदध्व ....... இழிவான வழியில் வந்த ,

    रस .......... சுவை எனும் ,

    दुर्विषे ........ கடுமையான விஷத்தில் ,

    बलिश ....... தூண்டிலில் உள்ள ,

    भक्षवत् ....... உணவைப் போல் ,

    प्रीयते ........ மகிழ்கிறான் !

    इत्थम् ........ இவ்வாறு ,

    अपथ्य ....... தீய செயலிலிருந்து ,

    परिहार ....... விலகும் ,

    धी ............ எண்ணத்தைக் கூடக் ,

    विमुखम् ...... கொள்ளாத ,

    तम् अपि ..... அவனையும் ,

    वत्सला ....... அன்பு கலந்த ,

    आकस्मिकी .. காரணம் இல்லாத ,

    त्वत् ........... உன்னுடைய ,

    दया ........... தயையினால் ,

    अवसरे ........ உரிய காலத்தில் ,

    क्रमात् ......... நாளடைவில்

    अवति ......... காத்துவிடுகிறது !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * திருவரங்கன் எனும், பிரபுவே !

    * நீ சேதனர்களை , வாழ்விப்பதற்காகப் , பகவத் கீதை , பாஞ்சராத்ரம் முதலிய நூல்களின் வாயிலாக , பல உயரிய உபதேசங்களைச் , செய்து , அருளினாய் !
    அவ்வுபதேசங்கள் , சேதனனுக்கு ஸம்ஸார பந்தத்தை விரைவில் போக்க வல்ல , மிக்க வீர்யமுடைய , நல்ல மருந்துகளாய் , உள்ளன.

    * சேதனனோ , உலக ஸுகங்களை , நெடுநாளாய் அனுபவித்து வந்த , பழக்கத்தால் , மேன் மேலும் அவற்றிலேயே ஈடுபட்டு , ஸம்ஸார பந்தத்தைப் போக்கிக் கொள்ள , மனம் அற்றவனாய் , உள்ளான் .

    * அவனுக்கு , உன் உபதேசங்கள் . கசக்கின்றன. அவற்றைக் கண்டு , அவன் அஞ்சுகிறான் . இழிவான வழியில் நடப்பதிலேயே , சுவை கொண்டு , மகிழ்கிறான். தன்னுடைய இச்செயல் , மீனவர் தூண்டில் முள்ளில் வைத்துள்ள உணவை , மீன் உண்ண வருவது போல் ஆகும் என்று , அவன் உணரவில்லை.

    * தனக்குத் தீங்கு விளைவிக்கும் , இச்செயலை , விட்டு ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட , அவனுக்கு , உண்டாவதில்லை .

    * இத்தகைய சேதனனின் கதி யாது ? இவனையும் , உன் கருணை , அன்புடன் கூடி நின்று , காத்து விடுகிறது. எப்படி ? உன் அன்பு , சேதனனிடம் உள்ள , குற்றங்களைப் பொருட்படுத்தாது , சேதனன் துன்பத்தைப் போக்க முற்படுகிறது.

    * பாபியான ஜீவனுக்கு , ஏதாவது , சிறிய புண்ணியம் ஏற்படும் போது, உன் கருணை , பிறரால் , காரணம் அறிய , முடியாதவாறு , அவன் மீது , பாய்கின்றது .

    * பின் , அவனை , நாளடைவில் , நல்வழிப் படுத்திப் , பிரபத்தியைத் , தலைக்கட்டி வைத்து , மோக்ஷம் பெறும் வரை , உதவி , அவனைக் காத்து விடுகின்றது. என்னே , உன் கருணை !!!

    ��





    Last edited by sridharv1946; 25-04-18, 09:41.
Working...
X