अभीति स्तवम् 09 / 29
அபீதி ஸ்தவம்
அச்சத்தை , அழிப்பவன் , அரங்கனே !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
त्रिवर्ग , पद , वर्तिनाम् ; त्रिगुण , लंघन - उद्योगिनाम् ;
द्विषत् , प्रथमन - अर्थिनाम् - अपि , च ; रंग , दृश्य - उदया: ।
स्खलत् , समय , कातरी , हरण , जागरूका: , प्रभो !
कर , ग्रहण , दीक्षिता: , क इव , ते , न दिव्या , गुणा: ।।
த்ரிவர்க்க , பத , வர்த்தினாம் ; த்ரி - குண , லங்கன - உத்யோகிநாம் ;
த்விஷத் , ப்ரதமந - அர்த்தினாம் - அபி , ச ; ரங்க , த்ருச்ய - உதயா: |
ஸ்க்கலத் , ஸமய , காதரி , ஹரண , ஜாகரூகா: , ப்ரபோ !
கர , க்ரஹண , தீக்*ஷிதா: , கே - இவ , தே , ந , திவ்யா , குணா: ||
प्रभो ........... பிரபுவான , அரங்கனே !
रंग ............. திருவரங்கத்தில் ,
दृश्य ........... காணப்படுகின்ற ,
उदया: ......... தோற்றம் உடைய ,
ते ............... உனது ,
के .............. எந்த ,
दिव्या: ......... உயர்நத ,
गुणा: .......... குணங்கள் ,
इव ............. தாம் ;
त्रि - वर्ग ....... அறம் , பொருள் , இன்பம் , எனும் , மூன்று ,
पद ............. வழிகளில் ,
वर्तिनाम् ....... முயல்பவர்களுக்கும் ;
त्रि - गुण ...... ஸம்ஸாரத்தைக் ,
लंघन .......... கடந்து , மோக்ஷம் , பெறுவதை .
उद्योगिनाम् .... முயல்பவர்களுக்கும் ;
द्विषत् ......... பகைவர்கள் ,
प्रथमन ....... அழிவதை ,
अर्थिनाम् ...... விரும்புபவர்களுக்கும் ,
अपि च ....... கூட ;
स्खलत् ........ தவறு , செய்யும் ,
समय ......... சமயங்களில் , ஏற்படும் ,
कातरी ........ அச்சத்தை ,
हरण .......... ஒழிப்பதில் ,
जागरूका:.... கவனமுடன் ,
कर ............ கையைப்
ग्रहण .......... கொடுத்துக் , காப்பதில் ,
दीक्षिता: ...... விரதத்தோடு ,
न ............... இல்லை ?
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திருவரங்கன் எனும் பிரபுவே !
* இவ்வுலகில் , அறம் , பொருள் , இன்பம் , ஆகிய இம்மைப் பயன்களையே , விரும்பி , அவற்றுக்கான , முயற்சிகள் , மேற்கொள்கின்றனர் , பலர்
* சிலர் , ஸத்துவம் , ரஜஸ் , தமஸ் ஆகிய முக்கோணங்களைஉடைய , இந்த ஸம்ஸார மண்டலத்தைக் கடந்து , மோக்ஷம் பெற விரும்பி , அதற்கான செயல்களைச் செய்கின்றனர் .
* இன்னும் சிலர் , அர்ச்சை வடிவு கொண்டு , இங்கு எழுந்தருளி உள்ள , உன்னை, அனுபவித்து , மகிழத் தடையாய் , இருக்கும் பகைவர்கள் , ஓழிய வேண்டும் என்னு , விரும்புகின்றனர் .
* அவர்கள், தாம் விரும்பும் பலன்களுக்காக , ஏற்ற சாதனங்களைச் செய்யும்போதும் , மற்ற காலங்களிலும் , தவறுகள் நேருவதும் , அதனால் , அவர்களுக்குப் பலன் வராமல் போகுமோ ? என்ன தீங்கு வருமோ ? " என்று , அச்சம் விளைவது இயற்கையே .
* அவ்வாறு , அச்சம் வரும்போது , அவர்கள் , இத்திருத்தலத்தில் அமர்ந்துள்ள , உன் திருக்கல்யாண குணங்களை , அனுஸந்திக்கௌள்றனர்.
* உன் குணங்கள், அவர்களின் முயற்சியில் , தவறு நேரும்போது , விழித்திருந்து , அவர்களின் அச்சத்தைப் போக்கி , கை தூக்கி விட்டுக் காப்பதை ழ விரதமாகக் கொண்டுள்ளன. ஆதலின் , அவர்கள் , விரும்பிய , பலன்களைப் , பெறுகின்றன.
* உன்னுடைய , எந்த குணம் தான் , இத்தகைய சிறப்பு உடையது அன்று ?
எல்லா குணங்களும் , ஒப்பற்று , உயர்ந்து, விளங்குகின்றன.