Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 05 / 29 அபீதி ஸ்தவம் அரங்கனைத் தொ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 05 / 29 அபீதி ஸ்தவம் அரங்கனைத் தொ&#

    अभीति स्तवम् 05 / 29


    அபீதி ஸ்தவம்


    அரங்கனைத் தொழுதாலோ , பாடினாலோ , சிந்தித்தாலோ , அச்சம் , அண்டாது !




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||






    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    भवन्तम् , इह , य: , स्व , धी , नियत: , चेतन - अचेतनम् ,

    पनायति , नमस्यति , स्मरति , वक्ति , पर्येति वा , |

    गुणम् , कमपि , वेत्ति वा , तव , गुण -ईश ! गोपायितु: ,

    कदाचन , कुतश्चन , क्वचन , तस्य , न , स्यात् ! भयम् ॥

    பவந்தம் , இஹ , ய: , ஸ்வ , தீ , நியத: , சேதந - அசேதநம் ,

    பநாயதி , நமஸ்யதி , ஸ்மரதி , வக்தி , பர்யேதி வா |

    குணம் , கமபி , வேத்தி வா , தவ , குண - ஈச ! கோபாயிது: ,

    கதாசந , குதச்சந , க்வசந , தஸ்ய , ந , ஸ்யாத் ! பயம் ||



    गुण - ईश .... உத்தம குணங்களுக்கு , உறைவிடமே !

    स्व ............. தன்னுடைய ,

    धी ............. ஸங்கல்பத்தால் ,

    नियत: ........ கட்டுப்படுத்தப்பட்ட ,

    चेतन .......... சேதன ,

    अचेतनम् ..... அசேதனங்களை உடைய ,

    भवन्तम् ....... தங்களை ,

    य: ............. எவன் ,

    इह ............ இவ்வுலகில் ,

    पनायति ...... துதிக்கிறானோ ,

    नमस्यति ...... வணங்குகிறானோ ,

    स्मरति ........ த்யானிக்கிறானோ ,

    वक्ति ......... (பெயர்களைச்) சொல்கிறானோ ,

    पर्येति वा ..... வலம் வருகிறானோ , அல்லது ,

    गोपायितु: .... காப்பவனான ,

    तव ............ உன்னுடைய ,

    कमपि ........ ஏதாவது ,

    गुणम् ......... குணத்தை

    वेत्ति वा ....... அறிகிறானோ ,

    तस्य .......... அவனுக்கு ,

    कदाचन ...... ஒருபொழுதும் ,

    कुतश्चन ..... எங்கிருந்தும்,

    क्वचन ....... எந்த இடத்திலும் ,

    भयम् ......... பயம் என்பதே ,

    न स्यात् ...... உண்டாகாது !

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    * திருக் கல்யாண குணங்கள் நிறைந்த , திரு அரங்கநகர் அப்பனே ! சேதநம் , அசேதநம் ஆகிய , பிரபஞ்சம் முழுவதையும் , உன் ஸங்கல்பத்தின் வழியே , நடக்குமாறு , கட்டுப்படுத்தி , வைத்துள்ளாய் !

    * இத்துணைப் பெருமை உள்ள , உன்னை , எவன் , வாயினால் துதிக்கிறானோ , அல்லது , வணங்குகிறானோ , தியாநம் செய்கிறானோ , உன் திரு நாமத்தை , ஸங்கீர்த்தனம் செய்கிறானோ , ப்ரதக்*ஷிணம் செய்கிறானோ , அல்லது , ஸர்வ ரக்ஷகனான உன் , திருக் கல்யாண குணங்களுள் , ஏதாவது ஒன்றினை , மனத்தில் , நினைக்கிறானோ , அல்லது , இவற்றுள் ஏதேனும் ஒரு செயலைச் செய்தவனுக்கு , எக்காலத்திலும் , எங்கிருந்தும் , எவ்விடத்திலும் , அச்சமே , உண்டாகாது !











    Last edited by sridharv1946; 20-04-18, 10:15.
Working...
X