Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 04 / 29 அபீதி ஸ்தவம் ஓங்கிய , உத்தம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 04 / 29 அபீதி ஸ்தவம் ஓங்கிய , உத்தம

    अभीति स्तवम् 04 / 29


    அபீதி ஸ்தவம்


    ஓங்கிய , உத்தமனைத் துதித்தால் , நீங்குமே , அச்சம் !










    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||








    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    मरुत् , तरणि , पावक , त्रि दश नाथ , काल - आदय: ,

    स्व , कृत्यम् , अधि - कुर्वते , त्वत् - अपराधत: , बिभ्यते |

    महत् , किमपि , वज्रम् - उद्यतम् - इव , इति , यत् , श्रूयते ,

    तरति ! अनघ ! तत् , भयम् , य , इह , तावक: , स्थावक: ||


    மருத் , தரணி , பாவக , த்ரி தச நாத , கால - ஆதய:

    ஸ்வ , க்ருத்யம் , அதி குர்வதே , த்வத் - அபராதத: |

    மஹத் , கிமபி ,வஜ்ரம் - உத்யதம் -இவ ,இதி , யத் , ச்ரூயதே ,

    தரதி ! அநக ! தத் , பயம் , ய , இஹ , தாவக: , ஸ்தாவக: ||


    अनघ ........ குற்றம் , அற்றவனே !

    त्वत् ......... உன்னுடைய ,

    अपराधत: ... தண்டனைக்கு ,

    बिभ्यत: ...... அஞ்சி ;

    मरुत् ......... காற்று ,

    तरणि ........ கதிரவன் ,

    पावक ........ கனல் ,

    त्रि दश ....... அமரர்கள்

    नाथ ......... அதிபதி இந்திரன் ,

    काल ......... எமன் ,

    आदय: ....... முதலிய தேவர்கள் ,

    उद्यतम् ........ உயர்ந்து , ஓங்கிய ,

    वज्रम् इव ..... வஜ்ராயுதம் போன்று , இருக்கும் உன்னிடம் ;

    महत् .......... பெரும் ,

    भयम् ......... அச்சத்தால் ,

    स्व ............ தங்களுடைய ,

    कृत्यम् ........ கடமைகளை ,

    अधि कुर्वते .. செய்து , வருகின்றனர் ;

    इति ........... என்று ,

    यत् ........... எந்த ,

    किमपि ........ ஒரு அச்சம் ,

    श्रूयते .......... ச்ருதிகளில் , கூறப் படுகிறதோ ,

    तत् ............ அந்த அச்சத்தை ,

    य .............. எவன் ,

    इह ............. இவ்வுலகில் ,

    तावक: ........ உன்னைத்

    स्थावक: ....... துதிக்கிறானோ , அவன்,

    तरति ........... கடந்து , விடுகிறான் !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    * எவ்வகைக் குற்றமும் அற்ற , அரங்க நாதனே !

    * உலகம் முழுவதும் ; ஓங்கிய வஜ்ராயுதம் போன்றவனான , உன் கட்டளையை , மீறினால் , என்ன தீங்கு வருமோ , என்ற மிகுதியான அச்சத்தால் , தன் கடமையைச்,செய்கிறது.

    * வாயு , ஸூர்யன் , அக்நி , இந்திரன் , யமன் , முதலிய தேவர்களும் , உன் கட்டளையை மீறுவதற்கு , மிக்க அச்சத்தினால் , தங்களது , காரியங்களைச் , செய்து வருகின்றனர் . இவ்விஷயங்கள் உபநிஷதங்களில் , கூறப் பட்டுள்ளன.

    * உன்னை இவ்வுலகில் , பக்தியுடன் , துதிப்பவன் , இவ்வாறு , அமரர்களின் , அதிகார நிகழ்ச்சிக்கும் , காரணமாகக் கூறப்பட்டுள்ள , அந்த அச்சத்தைக் கடந்து , விடுகிறான் !

    * அவனைப் பிரபத்தியில் , ஈடுபடுத்தி , மோக்ஷத்தை அளித்து விடுகிறாய் . பிறகு , அவனுக்கு அச்சம் ஏது ?





    Last edited by sridharv1946; 18-04-18, 10:59.
Working...
X