Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 02 / 29 அபீதி ஸ்தவம் அபயம் அளித்த &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 02 / 29 அபீதி ஸ்தவம் அபயம் அளித்த &

    अभीति स्तवम् 02 / 29


    அபீதி ஸ்தவம்

    அபயம் அளித்த அரங்கன் , அடியேன் உள்ளத்தில் , உறைய வேண்டும் !





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    दया , शिशिरित - आशया: , मनसि , मे , सदा , जागृयु:

    श्रिया - (अ)ध्युषित , वक्षस: , श्रित , मरुद्वृधा , सैकता :


    जगत् , दुरित , घस्मरा : , जलधि , डिम्ब , डम्भ , स्पृश :

    सकृत् , प्रणत , रक्षण , प्रथित , संविद : , संविद :


    தயா , சிசிரத - ஆசயா: , மனஸி , மே , ஸதா , ஜாக்ருயு: !

    ச்ரியா - (அ)த்யுஷித , வக்ஷஸ: , ச்ரித , மருத்வ்ருதா , ஸைகதா :

    ஜகத் , துரித , கஸ்மரா: , ஜலதி , டிம்ப , டம்ப , ஸ்ப்ருச:

    ஸக்ருத் , ப்ரணத , ரக்ஷண , பிரதித , ஸம்வித: , ஸம்வித:


    दया ......... கருணையால் ,

    शिशिरित ... குளிர்ந்த ,

    आशया: .... உள்ளத்தை உடையவனும் ;

    श्रिया ....... பெரிய பிராட்டி ,

    अध्युषित ... அமர்ந்திருக்கிற ,

    वक्षस: ...... திரு மார்பு உடையவனும் ;

    मरुद्वृघा ..... காவிரியின் ,

    सैकता : .... மணல் திட்டில் ,


    श्रित ........ இருப்பவனும் ;

    जगत् ....... உலகின் ,

    दुरित ....... பாபங்களை ,

    घस्मरा : ... அழிப்பவனும் ,

    डिम्ब ....... சிறு

    जलधि ..... கடலின் ,

    डम्भ ........ டம்பத்தை ,


    स्पृश : ..... அடக்குபவனும் ;

    सकृत् ...... ஒருமுறை

    प्रणत ....... வணங்கியவரை ,

    रक्षण ....... காப்பதை ,

    प्रथित ....... உலகறிய ,

    संविद : ..... உறுதி செய்தவருமானவரின் ;

    संविद : ..... தோற்றங்கள் ,

    मे ............ என்

    मनसि ....... உள்ளத்தில் ,


    सदा ......... எப்போதும் ,

    जागृयु: ...... உறைந்து , நிற்க வேண்டும் !



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராம தேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    * திருவரங்கப் பெருமானது திருவுள்ளம் , அடியார்களிடம் கருணை மிகுந்து , எப்பொழுதும் , குளிர்ந்துள்ளது .இவன் கருணை எப்போதும் குறைவு படாது இருக்கப் , பெரிய பிராட்டி , இவன் திருமார்பை விட்டு அகலாது , வீற்றிருக்கிறாள் .

    * இவன் , இரு காவிரிகளின் இடையில் , மணல் திட்டில் , பள்ளி கொண்டுள்ளான் .

    * இவன் திருமேனியை நினைத்தாலே , பாபங்கள் அழிந்து போகும் .

    * இவனுடைய அழகு , நிறம் , பெரு மிடுக்கு , முதலியவற்றைக் காணும்போது , "இது ஒரு சிறு உருவம் கொண்ட கடலோ ?"என்று தோன்றுகிறது.

    * இவ்வெம்பெருமானே , இராமனாய் நின்ற நிலையில் , "ஒரு முறை சரண் அடைந்தவனைக் , கை விடாது , காப்பதாக" , உலகு அறிய வாக்கு அளித்துள்ளான் .

    * இத் திருவரங்கனுடைய திருமேனித் தோற்றங்கள் , எப்போதும் , அடியேன் உள்ளத்தில் , உறைந்து , நிற்க வேண்டும் !





    Last edited by sridharv1946; 16-04-18, 10:36.
Working...
X