श्री भगवत् ध्यान सोपानम् - 10 / 12
ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்
அரங்கன் முழுவதும்
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
पाद - अम्बोजम् , स्पृशति ! भजते ! रङ्ग - नाथस्य , जङ्घाम् ;
ऊरु - द्वन्द्वे , विलगति ! शनै: ऊर्ध्वम् , अभ्येति ! नाभिम् ;
वक्षसि - आस्ते ! वलति ! भुजयो: , मामिका , इयम् , मनीषा ;
वक्त्र - अभिख्याम् , पिबति ! वहते ! वासनाम् , मौळि , बन्धे ;
பாத - அம்போஜம் , ஸ்ப்ருசதி ! பஜதே ! ரங்க - நாதஸ்ய , ஜங்காம் ;
ஊரு - த்வந்தே , விலகதி ! சனை: , ஊர்த்வம் , அப்யேதி ! நாபிம் ;
வக்ஷஸி - ஆஸ்தே ! வலதி !, புஜயோ : , மாமிகா , இயம் , மனீஷா ;
வக்த்ர - அபிக்யாம் , பிபதி ! வஹதே ! வாஸநாம் , மௌளி , பந்தே ;
मामिका ....... என்னுடைய ,
इयम् ........... இந்த ,
मनीषा ......... புத்தி ,
रङ्गनाथस्य ... ரங்க நாதனுடைய ,
पाद ............ திருவடித்
अम्बोजम् ...... தாமரைகளைத் ,
स्पृशति ........ தொடுகிறது !
जङ्घाम् ....... கணுக்காலை ,
भजते .......... ஸேவிக்கிறது !
ऊरु - द्वन्द्वे .... இரு தொடைகளிலும் ,
शनै: ........... மெல்ல
विलगति ...... படிகிறது !
ऊर्ध्वम् ......... மேலே ,
नाभिम् ......... திரு உந்தியை ,
अभ्येति ........ நெருங்குகிறது !
वक्षसि ........ திரு மார்பில் ,
आस्ते ......... தங்குகிறது !
भुजयो: ....... திருக் கைகளில் ,
वलति ........ சுழல்கிறது !
वक्त्र .......... திரு முகத்தின் ,
अभिख्याम् .... காந்தியை ,
पिबति ........ அள்ளிப் , பருகுகிறது !
मौळि बन्धे .... கிரீடத்தில் ,
वासनाम् ....... நினைவைக்
वहते .......... கொள்கிறது !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :
* இதுவரை , ஸ்ரீ தேசிகன் , திருவரங்கனது , திருமேனியில் , ஒவ்வொரு பகுதியை , ஒவ்வொரு , ச்லோகத்தால் , அனுபவித்தார். இப்பொழுது, ஒரே சுலோகத்தால் , எல்லாப் பகுதிகளிலும் , தன் , மனம் , ஈடுபட்டதைப் , பேசுகிறார் .
* என்னுடைய புத்தி எனும் , ஒரு பெண் , திருவரங்கன் பால் காதல் கொண்டு , அவன் திருவடித் தாமரையை , மெல்லத் தொடுகிறாள் .
* பின்பு , கணைக்காலைப் பக்தியுடன் ,தொழுகிறாள் .
* அதன் மேல் உள்ள தொடைகளிடம் , மெல்லச் சென்று , அவற்றில் ஆழ்ந்து விடுகிறாள் .
* அவற்றினின்றும் எழுந்து , மேல் உள்ள திரு உந்தியை , நெருங்குகிறாள் .
* பின் , அகன்ற , திரு மார்பில் , சற்று அமர்கிறாள் .
* எழுந்து , அவன் திருத் தோள்களின் அழகில் ஈடுபட்டு , அவற்றைச் சுற்றிச் சுழல்கிறாள் .
* பின் , திரு முக மண்டலத்தை , அணுகி , அதன் ,அழகு , வெள்ளம் இட்டு ஓடுவதை , அள்ளிப் , பருகுகிறாள் .
* பின்பு , கிரீடத்தின் நினைவில் , மெய் மறந்து , நிற்கிறாள் .
* இப்படி , என் மனம் , அவனது ,திருமேனியைப் பற்றிக்கொண்டு , கிடக்கிறது.
*