श्री भगवत् ध्यान सोपानम् - 09 / 12
ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்
அரங்கன் திருக் கிரீடம்
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
माल्यै: , अन्त: , स्थिर , परिमळै: ; वल्लभा , स्पर्श , मान्यै:
कुप्यत् , चोळी , वचन , कुटिलै : , कुन्तलै: श्लिष्ट मूले |
रत्न - आपीड , द्युति शबळिते , रङ्ग भर्तु: , किरीटे ,
राजन्वत्य: , स्थितम् , अधिगता , वृत्त्य: , चेतसो , मे ||
மால்யை: அந்த: ஸ்த்திர , பரிமளை: , வல்லபா , ஸ்பர்ச , மான்யை:
குப்யத் , சோளீ , வசன குடிலை: , குந்தலை: , ச்லிஷ்ட மூலே |
ரத்ன - ஆபீட , த்யுதி , சபலிதோ , ரங்க பர்த்து : , கிரீடே ,
ராஜ்நவத்ய: ஸ்த்திதிம் , அதிகதா , வ்ருத்தய: சேதஸோ , மே ||
अन्त: ..... உள்ளே ,
माल्यै: .... மலர் மாலைகளால் ,
स्थिर ..... நிலையான ,
परिमळै: . .மணம் உடையதும் ;
वल्लभा ... பிராட்டி மார்களின் ,
स्पर्श ...... திருக்கை பட்டதால் ,
मान्यै: ..... மதிப்பு பெற்றதும் ;
कुप्यत् .... கோபம் கொண்ட ,
चोळी .... சோழ நாட்டுப் பெண்களின் ,
वचन ...... பேச்சுக்களைப் போல் ,
कुटिलै :... சுருண்டதுமான ;
कुन्तलै:.... திருக் குழல்களோடு ,
मूले ........ அடிப்பகுதியின்
श्लिष्ट ..... ஸம்பந்தம் பெற்றதும் ;
रत्न .........இரத்தினங்களால் ஆன
आपीड .....முடி மாலைகளின் ,
द्युति ....... ஒளியால் ,
शबळिते ... பல நிறம் பெற்ற ;
रङ्ग भर्तु:.. திரு அரங்க நாதனது ,
किरीटे ..... கிரீடத்தில் ,
मे ........... என்னுடைய ,
चेतस: ...... உள்ளத்தின் ,
वृत्त्य: ....... போக்குகள்
राजन्वत्य: .. நல்ல அரசனைப் பெற்றதாய் ,
स्थितिम् .... நிலையான இருப்பை ,
अधिगता ... பெற்றுள்ளன !
ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:
* திரு அரங்கன் , தன் , திருக் குழற் கற்றை மீது , கிரீடத்தை அணிந்துள்ளான் .
* அவன் மலர் மாலைகளை , குழற் கற்றைக்குள் , அணிந்திருப்பதால் , அவற்றின் நறுமணம் , எப்பொழுதும் , குழற் கற்றையில் ,வீசிக்கொண்டே இருக்கிறது.
* பிராட்டிமார்கள் , அரங்கனுடைய , கேசங்களை , வாரி , முடித்து, அலங்கரிக்கும்போது , அவர்களின் திருக்கை ஸ்பர்சம் பெறும் , பாக்கியம் பெற்றது , அக்குழற் கற்றை.
* சோழ நாட்டுப் பெண்களுக்குக் , கோபம் வந்தால் , அவர்கள், சுருட்டி ,சுருட்டிப் பேசுவார்களாம் . அரங்கனுடைய குழற் கற்றை , அப்பெண்களின் பேச்சு போல் , சுருண்டு இருக்கிறது. அக்குழல் மீது , கிரீடம் அணிந்திருப்பதால் , அதன் , அடிப்பாகம் , குழலில் நன்கு , பதிந்து, உள்ளது.
* அரங்கன் , பல்வகை இரத்தினங்கள் பதித்த அணிகளைச் , சிரத்தில் , அணிந்துள்ளான் . அந்த இரத்தினங்களின் ஒளி , கிரீடத்தின் மீது , வீசுவதால் , கிரீடமும் பல நிறங் கொண்டு விளங்குகின்றது
* இத்தகைய , அரங்கனது , கிரீடத்திலேயே , அடியேனுடைய , மன நிலைகள் , ஊன்றி நிற்கின்றன. ஆதலின் , இதுகாறும் , அடங்காது , தி ரிந்துகொண்டிருந்த , என் மன நிலைகள் ,
இப்போது , ஒரு நல்ல தலைவனைப் பெற்று , அவனுக்கு, அடங்கிகே கிடக்கின்றன .