Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 06 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 06 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

    श्री भगवत् ध्यान सोपानम् - 06 / 12

    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்

    அரங்கன் திரு மார்பு




    श्रीमते निगमान्त महा देशिकाय नम:



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    श्री वत्सेन , प्रथित , विभवम् ; श्री पद न्यास , धन्यम् ;

    मध्यम् , बाह्वो : , मणि वर रुचा , रञ्जितम् , रङ्ग धाम्न: |

    सान्ध्रच् छायम् ; तरुण , तुलसी , चित्रया , वैजयन्त्या ,

    सन्तापम् , मे , शमयति ! धिय: , चन्द्रिका उदार , हारम् ||


    ஸ்ரீ வத்ஸேன , பிரதித , விபவம் ; ஸ்ரீ பத ந்யாஸ , தன்யம் ;

    மத்யம் பாஹோ: மணி வர ருசா , ரஞ்ஜிதம் , ரங்க தாம்ந: |

    ஸாந்த்ரச் சாயம் ; தருண துளஸீ , சித்ரயா , வைஜயந்த்யா

    ஸந்தாபம் , மே , சமயதி ! திய: , சந்த்ரிகா உதார , ஹாரம் ||


    श्रीवत्सेन... ஸ்ரீ வத்ஸம் எனும் மறுவினால் ,

    प्रथित ..... .பெருமை ,

    विभवम् .... அடைந்ததும் ;

    श्री ......... பெரிய பிராட்டி ,

    पद ......... தன் திருவடியை ,

    न्यास ...... வைப்பதால் ,

    धन्यम् ..... பாக்யம் பெற்றதும் ;

    मणि वर ... (கௌஸ்துபம் எனும் ) சிறந்த ரத்தினத்தின் ,

    रुचा ........ ஒளியால் ,

    रञ्जितम् ... செந்நிறம் ஆக்கப்பட்டதும் ;

    तरुण ....... பசுமையான ,

    तुलसी .......திருத் துழாயினால் ,

    चित्रया ...... பல நிறம் உடைய ,

    वैजयन्त्या .. வைஜயந்தீ எனும் வன மாலையால்

    सान्ध्रच् ..... குளிர்ந்த ,

    छायम् ....... ஒளி மிகுந்ததும் ;

    चन्द्रिका ..... நிலவு போல் ,

    उदार ........ அழகிய

    हारम् ........ முத்து மாலை உடையதும் ; ஆன

    रङ्ग धाम्न: . திரு அரங்கனுடைய

    बाह्वो : ....... இரு தோள்களின் ,

    मध्यम् ....... நடுவே உள்ள திரு மார்பு ,

    मे ............ என்னுடைய ,

    धिय: ........ உள்ளத்தின் ,

    सन्तापम् .... தாபத்தை ,

    शमयति ..... ஒழிக்கின்றது !


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :

    * திருவரங்கனது திரு மார்பில் , ஸ்ரீவத்ஸம் எனும் , திரு மறு விளங்குவதால் , திரு மார்பில் , பெருமை மிகுதி , நன்கு புலன் ஆகிறது .

    * கணமும் பிரியாது , பெரிய பிராட்டி , அவன் , திருமார்பில் , உறைவதால் , அவளது மெல்லிய திருவடித் தடம் பட்டு , அதனால் , திரு மார்பு , மஹா பாக்யம் பெற்றுத் திகழ்கிறது .

    * திரு மார்பில் , பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்னத்தின் , செம்மை நிறம் வீசுவதால் , திரு மார்பும் , செம்மை நிறம் ஆகிறது .

    * மேலும் , எப்போதும் , பசுமையான , திருத் துழாயினால் , பல நிறம் கொண்ட , வைஜயந்தீ எனும் , வனமாலை , திரு மார்பில் இலங்குவதால் , திரு மார்பும் ஒளி மிகுந்து , குளிர்ந்து உள்ளது .

    * மேலும் , நிலவு போல் , வெண்மையான முத்து வடமும் , அவன் , திரு மார்பில் , பிறழ்ந்து , அதை , அழகுறச் செய்கிறது .

    * இத்தகைய , அரங்கன் , திருமார்பை , நினைக்கும்போது , அடியேனது உள்ளத்தில் , உள்ள தாபங்கள் எல்லாம் ஒழிந்து போகின்றன !
Working...
X