Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 05 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 05 / 12 ஸ்ரீ பகவத் த்ய&



    श्री भगवत् ध्यान सोपानम् - 05 / 12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் திரு உந்தி


    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    संप्रीणाति , प्रतिकलम् असौ , मानसम् मे , सुजाता ,

    गम्भीरत्वात् , क्वचन समये , गूढ निक्षिप्त , विश्वा |

    नालीकेन , स्फुरित रजसा , वेधसो , निर्मिमाणा ,

    रम्य आवर्त द्युति सह चरी रङ्गनाथस्य नाभि: ||


    ஸம்ப்ரீணாதி , பிரதிகலம் அஸௌ , மானஸம் மே , ஸுஜாதா ,

    கம்பீரத்வாத் , க்வசன ஸமயே , கூட நிக்ஷிப்த , விச்வா |

    நாளீகேன , ஸ்புரித ரஜஸா , வேதஸோ , நிர்மிமாணா ,

    ரம்ய ஆவர்த்த , த்யுதி , ஸஹ சரீ , ரங்க நாதஸ்ய , நாபி: ! ||


    सुजाता .......... அழகிய தோற்றம் உடையதும் ;

    गम्भीरत्वात् ...... ஆழமாய் , இருப்பதால் ,

    क्वचन ............ ஒரு (பிரளய)

    समये .............. சமயத்தில் ,

    विश्वा ............. உலகத்தை

    गूढ ................ தனக்குள் மறைத்து

    निक्षिप्त ........... வைத்துக் கொண்டதும் ;

    रजसा ............. தூள்களால் ,

    स्फुरित ............ மிளிரும் ,

    नालीकेन .......... தாமரைப் பூவால் ,

    वेधस: ............. பல பிரம்மாக்களைப்

    निर्मिमाणा ........ படைத்ததும் ;

    रम्य ............... அழகிய

    आवर्त ............ சுழல்களின்

    द्युति .............. அழகுடன்

    सह चरी .......... கூடி , இருப்பதும் ; ஆன

    रङ्गनाथस्य...... திரு ரங்க நாதனுடைய

    असौ .............. இந்த

    नाभि: ............ திரு உந்தி ,

    प्रतिकलम् ....... ஒவ்வொரு கணமும் ,

    मे ................. என்னுடைய

    मानसम् .......... உள்ளத்தை

    सं प्रीणाति ....... நன்கு , மகிழ்விக்கிறது !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    * திரு அரங்கனது அழகிய திரு உந்தி , மிக ஆழமாக இருப்பதால் , பிரளய காலத்தில் , உலகம் முழுவதையும் , தனக்குள் , மறைத்து , வைத்துக் கொள்ள வல்லது .

    * இந்த உந்தியில் தோன்றிய , தாமரைப்பூ , தன்னிடம் படிந்த , துகள்களாலேயே ,
    பல பிரம தேவர்களைப் படைக்கும் , சக்தி உடையதாகும்

    * நீர் வெள்ளம் மிகுந்தால் , சுழல் ஏற்படுவது, இயற்கை. திரு அரங்கனது , திருமேனியில் , அழகு , வெள்ளம் இட்டுப் , பெருகும்போது , அதில் தோன்றிய சுழலோ , இந்தத் திரு உந்தி , என்று நினைக்க , ஏற்றதாய் உள்ளது .

    * இந்தத் திரு நாபி , அடியேன் உள்ளத்தில் , உறைந்து , ஒவ்வொரு கணமும் , மிக்க மகிழ்ச்சியை , விளைவிக்கிறது .

    [இங்கு , நற்குலத்துப் பிறந்த , ஒரு பதிவிரதைப் பெண் , விசால மனம் பெற்றவளாய் , வீட்டில் உள்ள , சிறு பிணக்குகளை வெளி விடாது , மறைத்து , ருதுப் பருவம் , நீங்கும் வரையிலும் , சிறந்த , புத்திர ர்களைப் பெற்றுக் கொண்டு , உற்ற தோழியுடன் , நல்வழி நின்று , தன் கணவனை , மகிழ்விக்கும் வரலாறு, குறிப்பிட்ட சுவை , காண்க !]




    Last edited by sridharv1946; 07-04-18, 18:03.
Working...
X