Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 03/12 ஸ்ரீ பகவத் த்ய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 03/12 ஸ்ரீ பகவத் த்ய

    श्री भगवत् ध्यान सोपानम् - 03/12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் கணுக்கால் !




    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||




    चित्राकाराम् , कटक रुचिभि: ; चारु वृत्त अनु पूर्वाम् ;

    काले दूत्य द्रुत तर गतिम् कान्ति लीला कलाचीम् ;

    जानु: छाया द्वि गुण सुभगाम् रङ्ग भर्तु: ; मदात्मा ,

    जङ्घाम् , धृष्ट्वा , जनन पदवी जाङ्घिकत्वम् , जहाति !

    சித்ராகாராம் , கடக ருசிபி: ; சாரு வ்ருத்த அனு பூர்வாம் ;

    காலே , தூத்ய த்ருத தர கதிம் , காந்தி லீலா களாசீம் ;

    ஜானு: சாயா , த்விகுண ஸுபகாம் ; ரங்க பர்த்து: , மதாத்மா ,

    ஜங்காம் , த்ருஷ்ட்வா , ஜனன பதவீ ஜாங்கிகத்வம் , ஜஹாதி !

    कटक ............ தண்டைகளின்

    रुचिभि: .......... ஒளியால்

    चित्र ............ பல்வகை

    आकाराम् ....நிறம் கொண்ட

    चारु ........... அழகிய

    वृत्त .............. வட்டமான

    अनु पूर्वाम् ... முன்னுக்கு ஏற்ற அமைப்புடன்

    काले ............ உரிய காலத்தில்

    दूत्य ............... தூது செல்வதற்காக

    द्रुत तर .......... மிக விரைவான

    गतिम् ............ நடையை உடையவனாய்

    कान्ति ............ அழகு

    लीला ............. சிறப்பை

    कलाचीम् ...... ஏந்தும் பாத்திரமாய் ;

    जानु: .............. முழங்காலின்

    छाया ........... அழகால் ,

    द्वि गुण ......... இரட்டிப்பு ஆக்கிய

    सुभगाम् ......... அழகை உடையவனாய் ;

    रङ्ग भर्तु: ....... திரு அரங்கனுடைய

    जङ्घाम् ............. கணைக்காலை

    धृष्ट्वा ................ பார்த்து ;

    मत् ................. என்னுடைய

    आत्मा ............ உயிர் ,

    जनन .............. சம்சார

    पदवी ........... மார்க்கத்தில் ,

    जाङ्घिकत्वम् .அலையும் தன்மையை ,

    जहाति ......... விடுகின்றது !



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    * திருவரங்கன் திருவடியில் அணிந்திருக்கும் , தண்டைகள் , பல்வகை ரத்னங்கள் , இழைக்கப் பட்டவை. அவற்றின் ஒளி அரங்கன் கணைக்காலில் வீசுவதால் , கணைக்காலும் , பல நிறம் கொண்டது போல் காட்சி அளிக்கிறது .

    * பார்க்க அழகியதாய் , வட்ட வடிவமாய் , மேலே உள்ள அங்கத்திற்கு ஏற்ற அமைப்பு கொண்டது , இந்த கணைக்கால் .

    * முன்பு , பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது சென்றபோது , இந்தக் கணைக்காலின் சக்தியால் தானே , மிக விரைவாகச் செல்ல முடிந்தது.

    * மேலுள்ள அங்கங்களின் , அழகு , வெள்ளமிட்டு ஓடி , வழிந்ததை இந்தக் கணைக்கால் தான் பாத்திரம் போல் இருந்து , ஏந்தியது போலும் ! மேலே உள்ள முழந்தாளின் அழகும் , இதில் வந்து சேரும்போது , கணைக்காலின் இயர்கையான அழகு , இரட்டித்துப் புலனாகின்றது.

    * இத்தகைய சிறப்புடைய , திருவரங்கனுடைய கணைக்காலை , சேவித்த அடியேனது , உயிர் , இனி , ஸம்ஸார மார்க்கத்தில் ஓடி அலையும் , துன்பம் ஒழிந்து விட்டது .




    Last edited by sridharv1946; 05-04-18, 09:24.
Working...
X