Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् 01 /12 ஸ்ரீ பகவத் த்ய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् 01 /12 ஸ்ரீ பகவத் த்ய

    श्री भगवत् ध्यान सोपानम् 01 /12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்

    திருவரங்கத்தின் நடுவே ஒரு ஜோதி !



    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் முன்னுரை :


    * ஸ்ரீ ரங்கநாதனது மேனியைத் திருவடி முதல் திருமுடி வரை , த்யானிப்பதற்கு , இந்த ஸ்தோத்ரம் , படி (ஸோபனம்) போல் இருப்பதால் , இப்பெயர் ஏற்பட்டது. இது 12 ஸ்லோகங்கள் கொண்டது.

    * திருப்பாணாழ்வார் , திருவராங்கனைப் பாடிய 'அமலாதி பிரான்' எனும் பிரபந்தத்தை ஆதி ஒற்றியது இந்த ஸ்தோத்ரம் .

    * இதில் முதலில் , திருவரங்கனது , பெருமையைப் பேசி , பின் , அவனது,திருவடி , கணைக்கால் , தொடை , திரு உந்தி , திரு மார்பு , திருக்கை , திருமுகம் , கிரீடம் இவற்றை அனுபவித்துப் , பின் , எல்லா அவயவங்களையும் சேர அனுபவித்துத் , தம் உள்ளத்தில் ஸ்ரீ ரங்க திவ்ய தம்பதிகள் , நித்ய வாஸம் செய்வதைப் பேசிப் , பலன் கூறித் தலைக்கு காட்டுகிறார் , ஸ்ரீ தேசிகன்.

    .

    अन्त: ज्योति: किमपि यमिनां ; अञ्जनम् , योग दृष्टे: ;

    चिन्ता रत्नम् , सुलभम् , इह, न: , सिद्धि मोक्ष अनुरूपम् ,

    दीन , अनाथ ,व्यसन , शमनम् ; दैवतम् , दैवतानाम् ;

    दिव्यं , चक्षु: , श्रुति परिषदाम् ; धृश्यते ! रङ्ग मद्ये ;

    .

    அந்த: ஜ்யோதி : , கிமபி , யமினாம் ; அஞ்சனம் , யோக திருஷ்டே : ;

    சிந்தா ரத்னம் , ஸுலபம் , இஹ , ந: ஸித்தி மோக்ஷ அனுரூபம் ;

    தீன அநாத , வ்யஸந , சமனம் ; தைவதம் , தைவதானாம் ;

    திவ்யம் , சக்ஷு: , ஸ்ருதி பரிஷதாம் ; த்ருஸ்யதே ! ரங்க மத்யே ,

    .

    यमिनां ......... யோகிகளின் ,

    अन्त: .......... இதயத்தில் ,

    ज्योति: ........ பிரகாசிப்பவனும் ;


    योग दृष्टे: ..... ஞானக் கண்ணுக்கு ,

    अञ्जनम् ...... கண் மை போன்றவனும் ;

    इह ............. இவ்வுலகில் ,


    न: .............. நமக்கு ,

    सुलभम् ........ எளியதான ,

    सिद्धि ........... இம்மைப் போகங்கள் ,

    मोक्ष ............ மோக்ஷம் ,

    अनुरूपम् ....... இவற்றைத் தரவல்ல ,

    चिन्ता रत्नम् .... சிந்தாமணி போன்றவனும் ;

    दीन ............. பலம் அற்றவர்களுக்கும் ,

    अनाथ .......... அனாதைகளுக்கும் ,

    व्यसन ........... கஷ்டத்தை

    शमनम् .......... ஒழிப்பவனும் ;

    श्रुति ............. வேத

    परिषदाम् ....... நூல்களுக்கு ,

    दिव्यं ............ தெய்வீகக்

    चक्षु: ............ கண் போன்றவனும் ;

    दैवतानाम् ....... எல்லாத் தெய்வங்களுக்கும்

    दैवतम् .......... உயர்ந்த தெய்வம் ஆனவனும் ஆன;


    किमपि .......... ஒரு வஸ்து ,

    रङ्ग ............. திரு அரங்கத்தின் ,

    मद्ये ............... நடுவில் ,

    दृश्यते ............ காணப் படுகிறது !

    .

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * திருவரங்கப் பெருநகரில் , சோதி வடிவமாய் , ஓர் ஆச்சர்ய வஸ்து காட்சி தருகிறது . திருவரங்கன் எனும் திருநாமத்துடன்.

    * இந்த சோதியை யோகம் செய்ய வல்ல பெரியோர்கள் , தங்களது இதயக் கமலத்தில் வைத்துக் காண்கின்றனர். அவ்வாறு காண்பதற்கு , அது சாதனமும் ஆகிறது.

    * உலகில் சித்தர்களின் மையைக் கண்ணில் அணிந்தால் , கண்ணுக்கு எட்டாத பொருட்களும் , கண்ணுக்குப் புலன் ஆவது உண்டு. அவ்வாறு , அப்பரம்பொருள் , தானே மையாய் இருந்து , எல்லாவற்றையும் , தன்னை அறியச் செய்கிறது.

    * சிந்தாமணி எனும் ரத்னம் , தேவலோகத்தில் , இருந்துகொண்டு, விரும்பும் பலனை எல்லாம் அளிக்கும் என்பர். அந்த ரத்னம் , நமக்குக் கிட்டாத ஒன்று ஆகும் . மேலும் அந்த ரத்னம் மோக்ஷத்தைக் , கொடுக்கவல்லதும் , அன்று .

    * திருவரங்கன் எனும் ரத்னமோ , நாம் இவ்வுலகில் கண்டு களிக்க எளிதாய் , இம்மைப் போகங்களையும் , மோக்ஷத்தையும் அளிக்கவல்ல சிந்தாமணியாக விளங்குகிறது.

    * யோகம் போன்ற வேறு உபாயத்தை செய்யச் சக்தி அற்று , வேறு ரக்ஷகனைக் கொள்ளாமல் இருந்து , பிரபத்தி செய்பவர்களின் , துன்பத்தைப் போக்கி , பேரின்பத்தைத் தர வல்லது.

    * உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் , தொழுவதற்கு ஏற்ற பெரிய தெய்வமாக விளங்குகிறது

    * இந்திரியங்களுள் , முக்கியமான கண்ணை , மக்கள் போற்றுவது போல் , வேதநூல்கள் , அனைத்தும் , இந்தப் பரம்பொருளைத் தங்கள் தெய்வக் கண்ணாகக் கொண்டு , போற்றுகின்றன

    * இத்தனை பெருமை பெற்ற , அரங்கன் எனும் தெய்வம் , திருவரங்கத்தின் நடுவில் , நம் கண்ணுக்குப் புலனாய்க் காட்சி தருகிறது.
    Last edited by sridharv1946; 03-04-18, 10:04.
Working...
X