Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 09 / 13 * ஸ்ரீ தசாவதார ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 09 / 13 * ஸ்ரீ தசாவதார ஸ்

    श्री दशावतार स्तोत्रम् : 09 / 13

    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :

    பலராமனுடைய லீலைகள் , நம்மைப் பாதுகாக்கட்டும் !

    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    फक्कत् कौरव पट्टण प्रभृतयः , प्रास्त , प्रलंबादयः


    तालाङ्कस्य तथा विधा विहृतय: तन्वन्तु ! भद्राणि , नः


    क्षीरम् , शर्करया इव , याभि: अपृथक् , भूता : , प्रभूतै: , गुणैः


    आकौमारकम् , अस्वदन्त , जगते , कृष्णस्य , ता: खेलय: ॥९॥


    *


    பக்கத் , கௌரவ , பட்டண ப்ரப்ருதய: , ப்ராஸ்த , ப்ரலம்பாதய :

    தாலாங்கஸ்ய , ததா விதா , விஹ்ருதய: தந்வந்து ! பத்ராணி , ந:


    க்ஷீரம் , சர்க்கரயா , இவ , யாபி: , அப்ருதக் , பூதா: , ப்ரபூதை: , குணை: ,


    ஆகௌமாரகம் , அஸ்வதந்த , ஜகதே , க்ருஷ்ணஸ்ய , தா: கேளய:



    *
    Pakkath kourava pattana prabruthaya prastha pralambhadaya,

    Thaalangasya thada vidha vihruthya yasthanvanthu bhadrani na,

    Ksheeram sakaryeva yabhirabrudak bhootha prabhoothair gunai,

    Aakoumaraka maswadantha jagathe krushnasya thaa kelaya. — Verse 9


    *


    Meaning:


    Let the various playful actions of Lord Balarama, who upturned ,


    The kingdom of Kauravas, who killed Asuras like Pralamba,


    And whose playful actions mixed with the playful actions of Krishna,


    Like the sugar getting mixed up with milk and made them more tasty,


    Bless us with results that are always good.

    *

    याभि: .......... எந்த பலராமனுடைய லீலைகளால் ,



    शर्करया ........ சர்க்கரை கலந்த ,



    क्षीरम् इव ...... பால் போல் ,


    आकौमारकम् .. இளம் பருவம் முதல் ,


    अपृथक् ........ பிரியாமல் ,


    भूता: ............ கலந்த


    कृष्णस्य ........ கண்ணனுடைய


    ता: खेलय: ...... அந்த லீலைகள் ,



    प्रभूतै: ........... மிக அதிகமான ,


    गुणैः ............. குணங்களால் ,


    जगते ............. உலகிற்கு



    अस्वदन्त ........ சுவையாக இருந்ததோ , அந்த ,


    कौरव ............ கௌரவர்களின்



    पट्टण ............. நகரம்


    प्रभृतयः .......... முதலியவற்றை ,

    फक्कत् ......... கவிழ்த்தல் ;


    प्रलंबादयः ....... ப்ரலம்பன் முதலியவர்களை


    प्रास्त ............. ஒழித்தல் ;



    तथा विधा ....... இன்னும் அது போன்ற



    तालाङ्कस्य ..... பல ராமனுடைய


    विहृतय: .......... லீலைகள்


    नः................. நமக்கு ,


    भद्राणि ............ நன்மைகளை



    तन्वन्तु ............ செய்ய வேண்டும் !


    *
    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்ர்யரின் விளக்கவுரை:


    * எம்பெருமான் , கண்ணனுக்குத் தமையனாக , ஓர் அவதாரம் செய்தான் . இதுவே பலராம அவதாரம் எனப்படும் . இவன் தன் தம்பியான கண்ணனை விட்டுச் சிறு பொழுதும் , பிரியாது , கூடவே இருந்து , அவனுக்குப் , பெரிய பாதுகாப்பாக இருந்தான் . இவனுக்கு கலப்பையே ஆயுதமாகவும் , பனை மரமே கொடியாகவும் இருந்தன.


    * பாண்டவர்களுக்கு எதிரிகளான கௌரவர்களுக்குத் தலை நகரம் ஹஸ்தினாபுரம் . ஒரு சமயம் , பலராமன் ,தன் கலப்பையால் , அந்த நகரத்தையே , பிடித்து , இழுத்து , யமுனா நதியில் கவிழ்த்து , நின்றான் .


    * கண்ணனது , சிறு பருவத்தில் , அவனைக் கொல்ல வந்த பிரலம்பன் முதலிய அசுரர்களைக் கொன்று போட்டான்.


    * இவன் புரிந்த லீலைகளும் , கண்ணனுடைய லீலைகளும் , தனித்தனியே சுவை மிக்கனவாகும். கண்ணனுடைய பால்ய லீலைகள் , பலராமனுடைய லீலைகளுடன் பிரியாது சேரும்போது தான் , கண்ணனுடைய எளிமை ,அன்பு முதலிய குணங்கள் உலகுக்கு , நன்கு , வெளிப்பட்டு , உலகம் முழுவதும் , அனுபவிக்க , வாய்ப்பு வந்து , கண்ணனுடைய லீலைகளின் சுவை , எல்லை அற்றது ஆகின்றது . பாலும் சர்க்கரையும் , தனித்தனியே இனியன ஆயினும் , சர்க்கரை கூடிய பாலின் , சுவை மிகுந்து , நிற்கும் அன்றோ ?


    * இவ்வாறு , கண்ண பிரானுடைய , லீலைகளைச் , சுவை மிக்கன ஆக்கும் , பலராமனுடைய , லீலைகள் , நமக்கு அருள் புரிய வேண்டும் !
























    Last edited by sridharv1946; 29-03-18, 09:34.
Working...
X