Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 08 / 13 * ஸ்ரீ தசாவதார ஸĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 08 / 13 * ஸ்ரீ தசாவதார ஸĮ

    श्री दशावतार स्तोत्रम् : 08 / 13






    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :













    தர்ம வடிவான தாசரதீ , அதர்மத்தை அழிக்கட்டும் !


    *

    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||




    पारावार पयो विशोषण कला पारीण ; कालानल







    ज्वाला जाल , विहार हारि ; विशिख व्यापार , घोरक्रमः।







    सर्वावस्थ , सकृत् प्रपन्न , जनता संरक्षणैक व्रती ;







    धर्मो विग्रहवान् ; अधर्म विरतिं , धन्वी ; स तन्वीत ! नः ॥८॥




    *



    பாராவார பயோ விசோஷண கலா பாரீண ; காலாநல







    ஜ்வாலா ஜால விஹார ஹாரி ; விசிக வ்யாபார கோர க்ரம: ;







    ஸர்வாவஸ்த்த , ஸக்ருத் ப்ரபந்ந ஜநதா , ஸம்ரக்ஷணைக வ்ரதீ ;







    தர்மோ விக்ரஹவாந் ; அத்ர்ம விரதிம் , தந்வீ ; ஸ , தந்வீத ! ந:
    *
    Paravara payo visoshana kala paareena kalaanala,







    Jwala jala vihara hari vishika vyapara ghora karma,







    Sarvastha sakruth prapanna janatha samrakshanaika vrathee,







    Dharmo vigrahavaan aadharma viratheem dhanvee cha thanveetha na. — Verse 8


    *


    Meaning(by PR Ramchander):







    Let that personification of Dharma , who is the great archer,







    Who had control over arrows which burnt like the fire at deluge,







    And was an expert in the art drying up the waters of the sea,







    And Whose main resolution was to protect any one who surrenders to him,







    Help us drive away the sinful acts from our mind.
    *


    पारावार .... .கடலின்








    पयो .......... நீரை ,








    विशोषण .... வற்றச் செய்யும்








    कला ......... கலையில் ,








    पारीण ....... வல்லமை உடையவனும் ;








    काल ......... பிரளய காலத்து







    अनल ........ அக்னியின் ,








    ज्वाला ....... ஜவாலைக்








    जाल .......... கூட்டத்தின் ,








    विहार ........ விளையாட்டை ,








    हारि ........... வெல்பவனும் ;








    विशिख ........அம்புகளின்








    व्यापार ........ செயல்களின்








    घोर ............ கொடிய








    क्रमः ...........முறைகளை உடையவனும் ;








    सर्व .............எல்லா








    अवस्थ ........நிலையிலும் உள்ள ,








    सकृत् ..........ஒரு முறை








    प्रपन्न .........சரணம் அடைந்த ,








    जनता .........மக்களை ,








    संरक्षण ........பாதுகாத்தலையே ,









    एक .............முக்கிய








    व्रती ............விரதம் ஆக்க கொண்டவனும் ;









    विग्रहवान् ......உரு எடுத்து வந்த









    धर्मो ...........தர்மமாய் , உள்ளவனும் ;








    धन्वी ..........ஒப்பற்ற வில்லாளனும் ஆன ;









    स: ............அந்த இராம பிரான் ,








    नः ..............நமக்கு ,









    अधर्म .........அதர்மங்களின்








    विरतिं .........ஒழித்தலைச் ,








    तन्वीत .........செய்து , அருள வேண்டும் !



    *


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :


    * ஒப்பற்ற வில்லாளன் இராம பிரான் !


    * தர்மமே வடிவு எடுத்து வந்தவன் என்னலாம் படி , தர்ம ஸ்வரூபமாய் நிற்பவன் !


    * அவனுடைய அம்புகளின் செயல்கள் , மிகப் பயங்கரமானவை !


    * அணை கட்டுவதற்காக , இராமபிரான் , சமுத்திர ராஜனைச் சரணம் அடைந்தான் . சமுத்திர ராஜன் , முதலில் முகம் காட்ட வில்லை . அந்நிலையில் , அவன் மீது , இராமனுக்குச் சீற்றம் பொங்கியது. தன் அம்புகளால் , கடல் நீர் முழுவதையும் , வற்றச் செய்ய முற்பட்டான் இராம பிரான் . கடலையும் வற்றச் செய்யும் ஆற்றல் படைத்தவை , அவனுடைய அம்புகள் .


    * மேலும் பிரளய காலத்தில் , அக்னியின் கொடுமையை அளவிட முடியாது. சுடர் கொழுந்து விட்டு , உலகத்தை அழித்து , லீலைகள் புரியும் அக்னி . இந்த அக்னியின் சுடர்த் தொகுதிகளைக் காட்டிலும் , பன்மடங்கு , கொடிய செயல்களைச் செய்ய வல்லன இராமபிரானின் அம்புகள் .


    * இத்தகைய வீரமும் , பெருமையும் பொருந்திய இராமபிரான் , எந்த நிலையிலும் , சேதனர்கள் , ஒரு முறை சரண் அடைந்து விட்டால் , அவர்களைக் காப்பதையே , தனது , முக்கிய விரதமாகக் கொண்டவன்.


    * இவ்வாறு , பெருமையும் , எளிமையும் , சேர்ந்து , உறையுமிடமான , இராமபிரான் , நம்மை அதர்மத்தில் , இழியாதவாறு , காத்து அருள வேண்டும் !


    *






    Last edited by sridharv1946; 28-03-18, 09:26.
Working...
X