श्री दशावतार स्तोत्रम्
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்
பரசு ராமன் , தீமைகளை அழிக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
*
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
*
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
क्रोधाग्निं जमदग्नि पीडन भवं सन्तर्पयिष्यन् क्रमात्
अ - क्षत्राम् , इह सन्ततक्ष ; य: , इमां , त्रिस्सप्त कृत्वः , क्षितिम् ।
दत्वा , कर्मणि , दक्षिणां , क्वचन , ताम् ; आस्कन्द्य , सिन्धुं , वसन् ;
अब्रह्मण्यम् , अपाकरोतु ! भगवान् , आब्रह्म - कीटं , मुनिः ॥७॥
க்ரோதாக்னிம் , ஜமதக்நி பீடந பவம் , ஸந்த்ர்ப்பயிஷ்யந் , க்ரமாத் ,
அ - க்ஷத்ராம் , இஹ , ஸந்ததக்ஷ ; ய: , இமாம் , த்ரிஸப்த க்ருத்வ: , க்ஷிதிம்
தத்வா , கர்மணி , தக்ஷிணாம் , க்வசந , தாம் ; ஆஸ்கந்த்ய , ஸிந்தும் , வஸந் ;
அப்ரஹ்மண்யம் , அபாகரோது ! பகவாந் , ஆப்ரஹ்மகீடம் , முநி:
Krodhagnim jamadagni peedanabhavam santharpayishyan kramath,
Aakshthramiha santhi thaksha ya imam tri saptha kruthwa kshitheem,
Dathwa karmaani dakshinaam kkachana thamaskandhya sindhum vasan,
Aabrahmnaya mapakarothu Bhagawan brahmakeetam muni. — Verse 7
*
Meaning(pr ramachander):
Let that God , who to douse the flame of anger due to slaying of his father Jamadagni,
Uprooted the world of the royal clans, by directly cutting them off, twenty one times
And who gave this earth as Dakshina during a fire sacrifice,
And made the land recovered from sea his own and started living there,
Remove all ills among all beings from a lowly worm to Lord Brahma.
*
य: ......,.........எந்த முனிவர் ,
जमदग्नि ......... தனது தந்தையான ஜமதக்னி முனிவரைக்
पीडन .,...........கொன்றதால் ,
भवं ............... உண்டான
क्रोध - अग्निं ....கோபக் கனலை ,
सन्तर्पयिष्यन् ... திருப்தி செய்வதற்காக ,
इमां .............. இந்த
क्षितिम् ........... பூமியை ,
इह ................ இவ்வுலகில்
अक्षत्राम् .......... மன்னர் குலமே இல்லாதபடி,
त्रिस्सप्त ........... இருபத்தொரு
कृत्वः ............ ..(தலை) முறைகள் ,
क्रमात् ............ ..வரிசையாக
सन्ततक्ष ......... ...வெட்டி எறிந்தாரோ ;
क्वचन ............ ..ஒரு
कर्मणि ............. வேள்வியில்
ताम् ................ அந்த பூமியை
दक्षिणां ............. தக்ஷிணையாகக்
दत्वा ................ கொடுத்து ,
सिन्धुं ............... கடலைத்
आस्कन्द्य ........... தன வசமாகக் கொண்டு ,
वसन् ................ வசித்தாரோ ;
भगवान् .............. பெருமை உள்ள ,
मुनिः ................. அந்த (பரசுராம) முனிவர் ,
आब्रह्म ............... பிரமன் முதல்
कीटं .................. புழு வரையில் (எல்லோருடைய);
अब्रह्मण्यम् .......... தீங்கையம் ,
अपाकरोतु ........... ஒழித்து அருள வேண்டும் !
*
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* கார்த்தவீரியன் எனும் அரசன் , பரசுராமரின் தந்தையான ஜமதக்னி முனிவரிடம் தவறு செய்தான் . அதனால் சினம் கொண்ட அந்த முனிவர் , அவனது பலத்தை ஒடுக்கி , அவனையும் ஒழித்தார் . இதை அறிந்த , அவனது புதல்வர்கள் , பரசுராமர் இல்லாத சமயம் பார்த்து , முனிவரைக் கொன்று போயினர் .
* இதை அறிந்த பரசுராமது கோபம் , பெரும் தீயாகக் கிளர்ந்து எழுந்தது. அவர் தன கோபக்கனலுக்கு , இரை கொடுக்க விரும்பித் , தமது கோடரியால் , 21 முறை , வரிசையாக அரசர்களை வெட்டி , வீழ்த்தி , உலகில் க்ஷத்ரிய குலமே இல்லாமல் செய்து , பூமி முழுவதையும் , தன வசமாக்கிக் கொண்டார்.
* பிறகு , தாம் செய்த ஒரு வேள்வியில் , கச்யப முனிவருக்கு , பூமி முழுதையும் , தக்ஷிணையாகக் கொடுத்து விட்டார். தானம் கொடுத்தபின் , அந்த இடத்தில் , தாம் இருப்பது தவறு என நினைத்து , மேற்குக் கடலுக்குச் சென்று , தம் கோடரியைக் கடலில் வீசி எறிந்தார். அந்த அளவுக்கு கடல் இடம் அளித்தது. அவ்விடத்தைத் தமதாக்கிக் கொண்டு , அதில் வாழ்ந்தார். அதுவே இப்போது கேரள நாடு என வழங்கப் படுகிறது. இப்படி மஹா வீரரான, பரசுராமர் , பிரமன் முதல் , புழு வரையில் உள்ள உலகுக்குத் தீமை வராது காத்து , அருள வேண்டும் !
[ பரசுராமாவதாரம் , மற்ற அவதாரங்களைப் போன்றதன்று. சிறந்த ஓர் அந்தணரிடம் , எம்பெருமான் , தன் சக்தி முதலியவற்றைப் புகச் செய்து , பல அதிசயச் செயல்களைச் செய்வித்தான். பின்பு , சக்கரவர்த்தித் திருமகனாய் அவதரித்த போது , பரசுராமனிடமிருந்து , தெய்வீக சக்தி முதலியவற்றைப் , பறித்துக் கொண்டான். ஆதலால் , இந்த அவதாரம் , மற்ற அவதாரங்களைப் போல் , எம்பெருமானுடைய , நேர் அவதாரம் அன்று ]
*
Sent from my iPad