Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 06 / 13 * ஸ்ரீ தசாவதார ஸĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 06 / 13 * ஸ்ரீ தசாவதார ஸĮ

    श्री दशावतार स्तोत्रम् : 06 / 13

    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :



    *

    த்ரிவிக்ரமன் திருவடிகள் , நம்மைக் காக்கட்டும் !



    *


    व्रीडा विद्ध , वदान्य , दानव यश: , नासीर धाटी भटः


    त्रै अक्षम् मकुटं , पुनन् , अवतु ! न: , त्रै - विक्रम: विक्रमः।


    यत् , प्रस्ताव समुच्छ्रित , ध्वज पटी , वृत्तान्त सिद्धान्तिभि: ,


    स्रोतोभि: , सुर सिन्धु: अष्टसु , दिशा - सौधेषु , दोधूयते ॥६॥


    *




    வ்ரீடா வித்த வதாந்ய தாநவ யச: நாஸீர தாடீ பட:


    த்ரையக்ஷம் மகுடம் , புநந் , அவது! ந: , த்ரை - விக்ரமோ விக்ரம: |


    யத் ப்ரஸ்தாவ ஸமுச்ரித , த்வஜ படீ , வ்ருத்தாந்த ஸித்தாந்திபி: ,


    ஸ்ரோதோபி: , ஸுர ஸிந்து: , அஷ்டஸு , திசா - ஸௌதேஷூ , தோதுயதே ||


    Vreeda vidha vadanya dhanava yaso naseera ghatee bhata,
    Triyaksham makutam punannavathu nasthrai vikramo vikrama,
    Yad prasthava samuchritha dwaja patee vruthantha sidhanthibhee,
    Sthrothomi sura sindhurashtrasu disa soudeshu dodhooyathe. –Verse 6

    Meaning: (pr ramchander)


    May we, be protected by the giant feet of the Lord who was Trivikrama,
    Which made the great Asura feel shy and ashamed and made his fame,
    Flutter like the flag which is hoisted above his palace
    And which was offered purifying bath by Brahma ,
    Which fell on the matted hair of Lord Shiva,
    And from there spread from the very beginning in eight directions.



    *
    यत् प्रस्ताव .....எதன் ஆரம்பத்திலேயே ,


    समुच्छ्रित ....... உயர ஏற்றப்பட்ட


    ध्वज ............ கொடி


    पटी ............. வஸ்திரத்தின்


    वृत्तान्त ......... செய்தி


    सिद्धान्तिभि: ... பரப்பும் செயலை ;



    स्रोतोभि:....... வெள்ளங்களாலே


    सुर सिन्धु:...... தேவ கங்கை ஆறு ;


    अष्टसु .......... எட்டு


    दिशा ........... திசைகள் ஆகிய


    सौधेषु .......... மேல் மாடங்களில்


    दोधूयते ........ விரைவாக ஆடுகிறதோ ;


    व्रीडा ............ வெட்கத்தால் ,



    विद्ध ............ மனம் வருந்திய ,




    वदान्य .......... பெரும் கொடையாளி ஆன ,


    दानव ........... மஹாபலி எனும் அசுரனுடைய


    यश: ............ புகழ் ஆகிய


    नासीर ......... சேனையின்


    धाटी भटः....... முன் செல்லும் சேவகன் போல் ;


    त्रै अक्षम् ........ மூன்று கண்கள் உடைய சிவனின் ,


    मकुटं ........... முடியை


    पुनन् ............. தூய்மை ஆக்கிய ,


    त्रै - विक्रम: .... த்ரிவிக்ரமனுடைய


    विक्रमः.......... திருவடிகள் ,



    न:.................நம்மை ,



    अवतु ............ காத்து அருளட்டும் !



    *




    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :


    *


    ப்ரஹ்லாதாழ்வானின் பேரனான பலிச் சக்கரவர்த்தி , பகவத் பக்தி உடையவன். பெரும் கொடையாளன் . ஆனால் தேவர்களை நலிந்து வந்தான். அதனால் அவனை அடக்க வேண்டியது ஆயிற்று . எம்பெருமான் வாமன வடிவம் கொண்டு , பிரம்மச்சாரி வேடத்தில் , பாலி செய்த வேள்வியில் போய் நின்றான்.


    * இவனது திருமேனி ஒளியிலும் பேச்சிலும் , பலி , மிகவும் ஈடு பட்டான். தன் செல்வம் அனைத்தையும் , பிரம்மச்சாரி கேட்டாலும் , மகிழ்ச்சியுடன் அளிக்க , அவன் மனம் கொண்டான். ஆனால் வாமனப் பெருமான் , பலியை , தன பாதத்தளவில் , மூன்றடி , மண் யாசித்தான் . இதைக் கேட்ட பலி , தன பெருமைக்குப் பொருந்தாத , அற்பப் பொருளை , வாமனன் யாசித்ததற்கு , வெட்கி , மிக வருந்தினான்.


    * பின் பலி தாரை வார்த்துக் கொடுத்த மூவடி மண்ணை ஏற்ற வாமனன் , த்ரிவிக்ரம வடிவம் கொண்டு , மேன்மேலும் வளர்ந்துகொண்டே போனான். ஓரடியால் பூமி முழுதும் அளந்து , மற்றோர் அடியால் , தேவ லோகத்தை அளக்க முற்பட்டான். அப்பொழுது , மகாபலியின் புகழ் , உலகம் முழுதும் பரவியது.

    * சேனைக்கு முன்னால் , ஒரூ வீரன் ஓடிச் சென்று , அரசனது வீரத்தை , உரக்கப் பறை சாற்றுவது போல் , த்ரிவிக்ரமனது திருவடி , அளப்பதற்குச் செல்லும் இடம் எல்லாம் , மகாபலியின் புகழ் பரவும்படி , அந்தத் திருவடி செய்கிறது. மஹாபலி மனம் உவந்து , செய்த் தானத்தால் அன்றோ , அத்திருவடி விண்ணுலகத்தையும் அளக்கச் சென்றது.

    * அப்படிச் செல்லும்போது , சத்ய லோகத்தில் , பிரம தேவன் , அத்திருவடிக்குத் திருமஞ்சனம் செய்தான். அதிலிருந்து தேவ கங்கை பெருகியது. அந்த நீரை ஏந்திய சிவனுடைய முடி , தூய்மை பெற்றது.

    * அத்திருவடியாகிய கொடி மரத்திலிருந்து , வானத்தில் தோன்றிய வெண்ணிறமான கங்கா நதி , எம்பெருமானது வெற்றியைக் குறிக்கவல்ல வெண்கொடி வஸ்திரம் எனும்படி , விளங்குகின்றதாம். அக் கங்கை வெள்ளம் , எட்டு திசைகள் ஆகிய , மேன்மாடங்களில் , அலை வீசிப் புனிதம் ஆக்குகின்றது.

    * இத்துனைப் பெருமை உடைய வாமன (த்ரிவிக்ரம) னது , திருவடி வைப்பு , நம்மைக் காத்து அருள வேண்டும் !





































































Working...
X