श्री दशावतार स्तोत्रम् : 02 / 13
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் : 02 / 13
மீன் வடிவம் நம்மைக் காக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
निर्मग्न , श्रुति जाल , मार्गण , दशा, दत्त क्षणै: वीक्षणै :
अन्त: , तन्वत् इव , अरविन्द - गहनानि , औदन्वतीनाम् , अपाम्।
निष्प्रत्यूह , तरङ्ग रिङ्गण , मिथः , प्रत्यूढ , पाथ: छटा :
डोला (आ)रोह , स- दोहलं , भगवतो , मात्स्यं वपुः , पातु ! नः॥२॥
.
நிர்மக்ந ,ச்ருதி ஜால ,மார்க்கண தசா , தத்த க்ஷணை: , வீக்ஷணை: ,
அந்த: , தந்வத் இவ , அரவிந்த கஹநாநி , ஒளதந்வதீநாம் , அபாம் |
நிஷ்ப்ரத்யூஹ , தரங்க ரிங்கண , மித: ப்ரத்யூட , பாதத் சடா:
டோலா (ஆ)ரோஹ , ஸ-தோஹளம் , பகவதோ , மாத்ஸ்யம் வபு: , பாது ! ந: ||
.
Nirmagna sruthi jala margana dasa datha kshanair veekshanai,
Anthasthanvadhivaravinda gahananyouthanwathi namapam,
Nish prathyooha ranga ringana midha prathyooda pada schata,
Dolaroha sadohalam bhagavatho, maathsyam padu na. — Verse 2.
निर्मग्न ............. கடலுக்குள் , மூழ்கிய ,
श्रुतिजाल .......... வேதத் தொகுதிகளைத் ,
मार्गणदशा ........ தேடும் வேளையில் ,
दत्तक्षणै: ......... கருத்து பொதிந்த ,
वीक्षणै : ........... (திருக் கண்களின்) பார்வைகளால் ,
औदन्वतीनाम् ..... கடலின் ,
अपाम् .............. நீருக்கு ,
अन्त: ............... உள்ளே ,
अरविन्द ............தாமரைக் ,
गहनानि ............கூட்டங்களைப் ,
तन्वत् इव ..........படைப்பது போல் ,
निष्प्रत्यूह ..........தடை இல்லாத ,
तरङ्ग रिङ्गण ....அலை வீசுதலால் ,
मिथः ...............ஒன்றுக்கொன்று ,
प्रत्यूढ ..............மோதிக்கொண்ட ,
पाथ: छटा : ........நீர்த்தொகுதி எனும் ,
डोला ...............ஊஞ்சலில் ,
आरोह ..............ஏறுவதில் ,
स - दोहलं ..........உற்சாகம் கொண்ட ,
भगवत: .............எம்பெருமானது ,
मात्स्यं वपुः..........மீன் வடிவம் ,
नः .................... நம்மைக் ,
पातु ................. காக்கட்டும் !
.
Meaning: (by PR Ramchandar) Let us be protected by the fish form of our God , which appeared for,
Searching for the Vedas, with tense examining looks
And Created a mirage of the lotus forest in the great waters of the sea,
And appeared to climb on the swing created by the dashing of waves with waves.
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:
முன்பு , ஓர் அசுரன் , பிரமனிடமிருந்து , வேதங்களை எல்லாம் , பறித்துக் கொண்டு , கடலினுள் புகுந்து மறைந்தான். வேதங்கள் இன்றி , பிரமன் எந்த செயலைச் செய்ய முடியும் ? எம்பெருமானிடம் , புலம்பிச் சரணம் அடைந்தான். பகவான் , உடனே ஒரு பெரிய மீன் வடிவம் கொண்டு , கடல் நீருள் புகுந்து, தன திருக்கண்களால் , மறைகளைத் தேடினான்.
தன திருக்கண்களைச் செல்ல விட்ட போது , அவை செல்லுமிடம் எல்லாம் , அழகிய , கடல் நீரினுள்ளே , அழகிய தாமரை மலர்கள் நிறைந்த காடுகளாகப் புலப்பட்டன . எம்பெருமான் எந்த வடிவம் கொண்டாலும் , அவனுடைய ஸர்வேஸ்வரத் தன்மையைக் காட்டவல்ல தாமரைக் கண்களின் சிறப்பு மாறுவதில்லை அன்றோ !
மேலும் நீரில் , மீன் , அங்குமிங்கும் ஓடித் திரிவது இயற்கையிலேயே அழகாகும். ஸர்வேஸ்வரன் , பெரிய மீன் வடிவுடன் , கடலினுள் புகுந்து , வேதங்களைத் தேடித் திரியும்போது , அவ்வழகு கூறற்பாலதோ ? அவனுடைய ஸஞ்சாரத்தால் , கடலில் பேரலைகள் , தடையின்றி எழுகின்றன. அப்பொழுது , அவ்வலைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு , ஏறுவதும் இறங்குவதுமாய் இருப்பதால் , அவை ஊஞ்சல் போல் ஆகின்றன. அவ்வூஞ்சல்களில் அமர்ந்து , ஆடுவதில் , உற்சாகம் கொள்கின்றான் எம்பெருமான்.
இவ்வாறு கடலுள் புகுந்து , அசுரனைக் கொன்று , வேதங்களை , மீட்டு வந்து கொடுத்துப் , பிரமனைக் காத்த , சர்வேஸ்வரனுடைய மீன் உருவம் , நம்மைக் காத்து அருள வேண்டும் !