Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 27 / 29 . ஆண்டாள் , அகில உ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 27 / 29 . ஆண்டாள் , அகில உ


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 27 / 29

    .


    ஆண்டாள் , அகில உலகிற்கும் அன்னை !


    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    जात - अपराधम् , अपि , मां , अनुकम्प्य , गोदे !


    गोप्त्री , यदि , त्वम् , असि ; युक्तम् ! इदम् , भवत्या: |


    वात्सल्य , निर्भरतया , जननी , कुमारम् ,


    स्तन्येन , वर्धयति ! दष्ट , पयोधरा , अपि ||


    .


    ஜாத - அபராதம் , அபி , மாம் , அனுகம்ப்ய , கோதே !


    கோப்த்ரீ , யதி , த்வம் , அஸி ; யுக்தம் ! இதம் , பவத்யா: |


    வாத்ஸல்ய , நிர்பரதயா , ஜனனீ , குமாரம் ,


    ஸ்தன்யேந , வர்தயதி ! தஷ்ட , பயோதரா , அபி ||

    .


    गोदे ........... கோதைப் பிராட்டியே !



    अपराधम् ... நான் ,குற்றத்தை ,



    जात अपि ... செய்தவன் ஆயினும் ;


    त्वम् .......... நீ ,



    मां ............ என் மீது ,


    अनुकम्प्य .... கருணை கொண்டு ,


    गोप्त्री ......... என்னைக் காப்பவளாக ,


    यदि असि .... இருப்பாயானால் ,


    इदम् ......... இது ,



    भवत्या: ...... தங்களுக்கு ,


    युक्तम् ....... பொருத்தமானதே !


    जननी ....... ஒரு தாய் ,



    पयोधरा ..... தனது முலையை ,


    दष्ट अपि .... கடித்தாலும் கூட ,


    कुमारम् ..... தன் குழந்தையை ,



    वात्सल्य .... அன்பின்



    निर्भरतया ... மிகுதியால்


    स्तन्येन ...... தன் , முலைப் பாலினால் ,



    वर्धयति ..... போஷிக்கிறாள் !



    .




    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :




    * கோதைப் பிராட்டியே ! நீ எனக்குத் தாய் .

    * நான் உன் குழந்தை . நான் பல குற்றங்களை செய்தவன் . ஆயினும் , என்னிடம் , அருள் சுரந்து , என் குற்றங்களைப் பொருட்படுத்தாது , உன் , அன்பின் மிகுதியால் , என்னைக் காத்து அருள்கின்றாய் ! இது உனக்கு மிகப் பொருத்தமான செய்கை .


    * உலகில் , ஒரு தாய் , குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது , அவள் கொங்கையைக் , குழந்தை கடித்து விடுகிறது . அதனால் சினம் கொண்டு , அந்தத் தாய் , பால் கொடுப்பதை , நிறுத்தி விடுவாளோ ? தன் குழந்தையிடம் உள்ள , அன்பின் மிகுதியால் , பின்னும் , பால் ஊட்டி , வளர்ப்பது , இயற்கை தானே ?


    * அவ்வாறே , எனக்குத் தாயான நீயும் , என்னைக் காத்து அருள்வது , மிகப் பொருத்தமே !

Working...
X