Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 25 / 29 . ஆண்டாள் , பாபிக

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 25 / 29 . ஆண்டாள் , பாபிக


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 25 / 29


    .


    ஆண்டாள் , பாபிகளையும் , எப்படி காப்பாற்றுகிறாள் ?


    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .



    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .
    गोदे ! गुणै: , अपनयन् , प्रणत , अपराधान् ,


    भ्रू , क्षेप , एव , तव , भोग , रस , अनुकूल: |


    कर्म , अनुबन्धि , फल , दान , रतस्य , भर्तु: ,


    स्वातन्त्र्य , दुर्व्यसन , मर्म , भिदा , निदानम् ||


    .

    गोदे ............ கோதைப் பிராட்டியே !


    गुणै: ........... உன் குணங்களால் ;


    प्रणत .......... அடி பணிந்தவரின் ,


    अपराधान् ..... குற்றங்களை ,



    अपनयन् ....... ஒழிப்பதற்காக ;


    भोग ............ போகச் ,



    रस ............. சுவைக்கு ,



    अनुकूल: ....... ஏற்றதான ,



    तव ............. உன்னுடைய ,


    भ्रू ................ புருவத்தின் ,


    क्षेप: एव ....... நெறித்தலே ;


    कर्म ............ கர்மங்களுக்கு ,


    अनुबन्धि ....... தகுந்த ,


    फल ............ பலனை ,


    दान ............ அளிப்பதில் ,


    रतस्य ........... ஈடுபட்ட ,


    भर्तु: ............. உன் கணவனுடைய ,


    स्वातन्त्र्य ........ சுதந்திரத்தால் , வருகிற ,


    दुर्व्यसन ......... கடும் செயலின் ,


    मर्म .............. மர்ம ஸ்தானத்தை ,


    भिदा ............. பிளப்பதற்கு ,


    निदानम् ......... முதல் காரணம் !
    .


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:


    * கோதைப் பிராட்டியே ! உன் நாயகனான எம்பெருமான் , பக்தர்கள் செய்யும் , நல்வினை , தீவினைகளாகிய கர்மங்களுக்கு , தக்க பலனை அளிப்பவன். அவ்வாறு அவன் செய்யாவிடில் , பக்ஷபாதம் முதலிய குற்றம் உடையவனாக நேரிடும்.


    * இவ்வாறு , அபராதங்களுக்கு ஏற்ற தண்டனைகளைக் கொடுப்பதைக் கூட , நீ பொறுப்பது இல்லை . அபராதிகளான , பக்தர்களிடமும் , கருணை கொண்டு , அவர்களுக்குத் தண்டனை இல்லாமல் , செய்வதற்காக , எம்பெருமானைத் , தன வழியில் , இழுக்கக் கருதுகிறாய் ,


    * எம்பெருமானிடம் ,போக ரஸத்துக்கு ஏற்ற , பல செயல்களை புரிந்து , உன் புருவத்தை , நெறிக்கிறாய் . அதற்கு , அவன் அஞ்சித் , தன சுதந்திரத்தை முழுதும் , இழந்து , உன் சொற்படி ,
    அபராதிகளையும் , காக்கின்றான்.


    * அவன் சுதந்திரத்தால்தான் , பக்தர்களுக்கு , அவரவர் பாபத்துக்கு ஏற்ற , தண்டனை கொடுத்தல் , முதலிய கொடும் செயலைப் புரிகிறான். அவ்வாறு இன்றி , குற்றவாளிகளையும் , காப்பதற்கு , நீ செய்யும் , புருவ நெறிப்பு , எம்பெருமானின் சுதந்திரத்தால் வரும் , செயலின் , உயிர் நிலையையும் , அடியோடு ஒழித்து , அபராதிகளையும் தண்டிக்காது , காக்கும் முதல் காரணமாய் இருக்கிறது .















Working...
X