गोदा स्तुति: கோதா ஸ்துதி : 23 / 29
.
ஆண்டாளை ஆராதித்தே , அரசர்கள் , ஆண்டனர் !
.
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
अर्च्यम् , समर्च्य , नियमै: , निगम , प्रसूनै: ,
नाथम् , त्वया , कमलया च , समेयिवांसम् |
मात: ! चिरम् , निरविशन् ! निजम् , आधिराज्यम् ,
मान्या , मनु , प्रभृतयो , ऽपि , महीक्षित: , ते ||
.
அர்ச்யம் , ஸமர்ச்ய , நியமை: , நிகம , ப்ரஸூநை: ,
நாதம் , த்வயா , கமலயா ச , ஸமேயிவாம்ஸம் |
மாத: ! சிரம் , நிரவிசந் ! நிஜம் , ஆதிராஜ்யம் ,
மாந்தர் , மநு , ப்ரப்ருதயோ , அபி , மஹீக்*ஷித : , தே ||
.
मात: .............. தாயே !
मान्या: ............ மதிப்பிற்கு உரிய ,
मनु प्रभृतय: ..... மநு முதலிய ,
ते ................. அந்த
महीक्षित: अपि .. அரசர்கள் கூட ,
त्वया .............. உன்னோடும் ,
कमलया च ....... பெரிய பிராட்டியுடனும் ,
समेयिवांसम् ...... சேர்ந்து இருந்தவனும் ;
अर्च्यम् ............. பூஜிக்கத் தகுந்தவனும் ஆன ,
नाथम् .............. உன் கணவனை ,
नियमै: ............. நியமங்களான ,
निगम प्रसूनै: ...... ஆகமங்களில் , கூறப்பட்ட புஷ்பங்களால் ,
समर्च्य ............. நன்கு ஆராதித்து ,
निजम् ............. தங்களுடைய
आधिराज्यम् ...... அரசாட்சியை ,
चिरम् .............. நீண்ட காலம் ,
निरविशन् .......... அநுபவித்தனர் !
.
ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்கவுரை:
* உலகுக்குத் தாயான கோதைப் பிராட்டியே ! சூரிய குலத்தில் உதித்த , மநு , மாந்தாதா முதலிய மன்னர்கள், மிக்க மதிப்பு உடையவர்களாக , நீடூழி காலம், தங்கள் பேரரசை ஆண்டு , இன்பம் எய்தினர் .
* எதனால் ? உனது அருளால்தான் ! நீ பூமி தேவியின் அம்சம். உன்னோடும் , பெரிய பிராட்டியாரோடும் , எம்பெருமான் , கூடி , நிற்பவன்.
* எல்லோரும் , பூஜிக்க வேண்டிய , எம்பெருமானை , அந்த அரசர்கள் , பல்வேறு நியமங்களைக் கைக் கொண்டு , நன்கு ஆராதித்தனர்.
* சேதனர்கள் கைக்கொள்ளும் , அஹிம்ஸை , ஸத்யம் , ப்ரஹ்மசர்யம் , சௌசம், தவம் , முதலிய நியமங்களை , எம்பெருமானுக்கு , ஸமர்ப்பிக்கும் , புஷ்பங்களாக , அல்லவா , ஆகமங்கள் ,கூறுகின்றன.
* ஆகவே , அவர்கள் , உன்னையும் ,சேர்த்து , அந்த நியமங்களோடு, அவனை , ஆராதித்ததாலேயே , அவ்வளவு , சிறப்பைப் பெற்றனர்.